செய்திகள் :

ரயில் பயணத்தில் மரணம்; ரயில்வே-யின் அலட்சியத்தால் உயிரிழந்தவருடன் 12 மணி நேரம் பயணித்த பயணிகள்

post image

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புற்றுநோயாளி பினோத் பஸ்வான் என்பவர் மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

பயணத்தின்போது அவர் நடு வழியில் இறந்து போனார். காலை 7.30 மணிக்கு இறந்துவிட்ட நிலையில் இது குறித்து காலை 8 மணிக்குச் சக பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் கொடுத்தனர். அதற்கு டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு உறுதி செய்ய வேண்டும் என்று டிக்கெட் பரிசோதகர் தெரிவித்தார். அதன் பிறகு டாக்டர் வரவில்லை.

உடலை ரயிலில் இருந்து அப்புறப்படுத்த பல மணி நேரமாக எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மற்ற பயணிகள் இறந்த பயணியின் உடலோடு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். ​​​​

உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து பயணிகளில் ஒருவர் இரவு 7 மணியளவில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவைக் குறியிட்டு, சமூக ஊடகத்தில் ரயில்வே குறைதீர்க்கும் பக்கத்தில் இது குறித்து பகிர்ந்தார்.

ரயில் இரவு 8.30 மணிக்கு டாடா நகர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்குதான் டாக்டரும், ரயில்வே ஊழியர்களும் வந்தனர். டாக்டர், பினோத் பஸ்வான் உடலைச் சோதித்து பார்த்துவிட்டு இறந்ததை உறுதி செய்தார்.

அதன் பிறகுதான் உடல் ரயிலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இப்பிரச்னை குறித்து ரயில்வே நிர்வாகம் வேறு மாதிரி தெரிவித்துள்ளது.

சக்ரதர்பூர் ரயில்வே கோட்டத்தின் மூத்த வணிக மேலாளர் ஆதித்யா சவுத்ரி இது குறித்து கூறுகையில், ''இரயில் எண் 12859 இன் M-2 பெட்டியில் ஒரு பயணி மயக்கமடைந்து கிடப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு இரவு 7.45 மணிக்கு தகவல் கிடைத்தது.

ரயில் டாடா நகரை அடைந்ததும், நிலையத்தில் இருந்த மருத்துவர் பயணியைப் பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார். இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது'' என்று சவுத்ரி கூறினார்.

பயணிகள் இதில் வேறு மாதிரியாகத் தெரிவித்துள்ளனர். பயணிகள் இது குறித்து காலையே ரயில்வே ஊழியருக்கு தகவல் கொடுத்தும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இறந்த பயணியின் உடல் பயணம் செய்த ரயில் அன்றைய தினம் 12 மணி நேரம் தாமதமாகப் பயணம் செய்தது. அதோடு ரயில் பெட்டிகள் பராமரிப்பின்றி இருப்பதாகவும், கழிவறைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டினர்.

நீண்ட பயணத்தின்போது, ​​குறிப்பாக குழந்தைகள், வயதான பயணிகள் மற்றும் பெண்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

`விமானங்களின் எரிபொருள் மீதான VAT குறைப்பு; வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்' - அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாட்டில் விமான எரிபொருள் மீதான வாட் வரி 29 சதவிகிதமாக இருந்தது. இதைக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விமான நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வந்தன. இந்த நிலையில், 29 சதவிகிதமாக இருந்த மதிப்புக... மேலும் பார்க்க

`காவல்துறையின் அன்றாட சில்லறை செலவின நிதி உயர்த்தி அறிவிப்பு!' - தமிழ்நாடு அரசு

லஞ்சமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை... மேலும் பார்க்க

வரி சீர்திருத்தங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கட்டும்!

ஒரு தேசத்தின் தொழில் வளர்ச்சியைத் தீர்மானிப்பது விற்பனை மட்டுமல்ல; ஆரோக்கியமான பணப்புழக்கமும், அதைத் தடையின்றி வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் சுதந்திரமும்தான். குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொ... மேலும் பார்க்க

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: ``அரசின் நிலைப்பாடு தவறான முன்னுதாரணம்" - பூவுலகின் நண்பர்கள் விமர்சனம்

தமிழ்நாட்டின் முக்கிய ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களில் ஒன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலம். இந்த சதுப்பு நிலங்கள் பாதிக்கும் வகையில் தவெக அரசு முடிவெடுத்திருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ... மேலும் பார்க்க

ECI: ஜனநாயகத்தின் மீதான மரண அடி! - ஞானேஷ் குமார் விவகாரமும், சீரழியும் தேர்தல் அமைப்பும்!

டெல்லி பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான குரல்கள் இந்தியா முழுவதும் ஒலிக்கின்றன. ஜனநாயகத்தின் குரல்களுக்கு காது கொடுக்க வேண்டிய ஆளும் அரசு, காவலர்களின் கைய... மேலும் பார்க்க

'உதயநிதி களமிறக்கிய 750 பேர்.!' - இடைத்தேர்தலில் திமுக புது பார்முலா!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்ததோடு கூட்டணி இல்லாமலும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பெருவாரியான வாக்குகளை பெற்றிருக்கிறது தி.மு.க. இடைத்தேர்தல் களத்தில் அக்கட்சி பயன்படுத்தி... மேலும் பார்க்க