செய்திகள் :

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: ``அரசின் நிலைப்பாடு தவறான முன்னுதாரணம்" - பூவுலகின் நண்பர்கள் விமர்சனம்

post image

தமிழ்நாட்டின் முக்கிய ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களில் ஒன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலம். இந்த சதுப்பு நிலங்கள் பாதிக்கும் வகையில் தவெக அரசு முடிவெடுத்திருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விமர்சித்திருக்கிறது. இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், ``ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு முந்தைய தி.மு.க. ஆட்சியில் முன்மொழியப்பட்ட 1 கி.மீ. Zone of Influence-ஐ அதாவது ஏறத்தாழ 3000 எக்டேரைத் த.வெ.க. அரசு 128.19 எக்டேராகக் குறைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் வே.க. ராஜீவ்

ஒரு ஈரநிலம் அல்லது ஈரநிலத் தொகுப்பின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் எங்கெல்லாம் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது அது அந்த ஈர நிலத்தில் பாதிப்பை எற்படுத்துகிறதோ அப்பகுதிகள் அனைத்தும் ZoI என்கிற “தாக்க மண்டலம்" என வரையறுக்கப்பட வேண்டும். ஈரநிலங்கள் (பேணல் மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் (IMP) தயாரிக்கும் பணியை NCSCM மேற்கொண்டு வருகிறது.

ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்படும் செயல்முறையின்போதே தாக்கமண்டலம் வரையறுக்கப்பட வேண்டும். தாக்கமண்டலத்திற்கான வழிகாட்டுதல்கள்/ஒழுங்குமுறைகளும் IMPயின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், IMP பணிகளும் தாக்க மண்டலம் வரையறுக்கும் பணிகளும் முடிவடைவதற்கு முன்னரே இடைக்கால தாக்க மண்டலத்தை 128.19 எக்டேராகச் சுருக்குவது பள்ளிக்கரணையை எவ்விதத்திலும் பாதுகாக்காது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கான IMP தயாரிக்கும் பணிகள் எப்போது முடிவடையும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதுவரைக்கும் தற்போது அரசு முன்மொழிந்துள்ள 128.19 எக்டேர் தாக்க மண்டலத்தைத் தவிர்த்து பிற பகுதிகளில் கட்டற்ற கட்டுமானப் பணிகள் நடைபெற்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு அது சரிசெய்ய முடியாத பேராபத்தாகவே முடியும். நாளை சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. தமிழ் நாடு அரசு முன்மொழிந்துள்ள 128.19 எக்டேர் பரப்பை தாக்க மண்டலமாக ஏற்றுக்கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

தமிழ் நாட்டில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற இன்னும் பல சதுப்பு நிலங்கள் சட்டப்பூர்வமாக ஈரநிலங்கள் (பேணல் மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 விதிகளின்படி அறிவிக்கை செய்யப்பட வேண்டிய நிலையில் அரசின் இந்த நிலைப்பாடு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கவல்ல இம்முடிவைத் தமிழ் நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

ECI: ஜனநாயகத்தின் மீதான மரண அடி! - ஞானேஷ் குமார் விவகாரமும், சீரழியும் தேர்தல் அமைப்பும்!

டெல்லி பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான குரல்கள் இந்தியா முழுவதும் ஒலிக்கின்றன. ஜனநாயகத்தின் குரல்களுக்கு காது கொடுக்க வேண்டிய ஆளும் அரசு, காவலர்களின் கைய... மேலும் பார்க்க

'உதயநிதி களமிறக்கிய 750 பேர்.!' - இடைத்தேர்தலில் திமுக புது பார்முலா!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்ததோடு கூட்டணி இல்லாமலும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பெருவாரியான வாக்குகளை பெற்றிருக்கிறது தி.மு.க. இடைத்தேர்தல் களத்தில் அக்கட்சி பயன்படுத்தி... மேலும் பார்க்க

டெல்லி போராட்டம்: "நான் கைது செய்யப்படவில்லை; கடத்தப்பட்டேன்" - துருவ் ராட்டி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனச் சி.ஜே.பி-யினர், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் சி.... மேலும் பார்க்க

`சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலை: இப்போது தேவைதானா?' - உயர் கல்வித்துறையின் சிக்கல்கள்| ஓர் அலசல்

University of Western Australiaதமிழ்நாட்டில் முதல் வெளிநாட்டு பல்கலைக் கழகமாக மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்துக்கு, UGC ஒப்புதல் அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஆஸ்திரேலியாவின், 'குரூப் ஆப் எய்... மேலும் பார்க்க

அலங்காநல்லூரில் சட்டவிரோதமாக செயல்படுகிறதா குவாரி? எஸ்பி ஆய்வு!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பகுதியில் உள்ள வகுத்து மலை அடிவாரத்தில் உள்ள வண்ணாத்திகரடு பகுதியில் 5 கல்குவாரிகள் முறைகேடாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்தக் கல்குவாரியில் இர... மேலும் பார்க்க

'மீனவ சமூகத்தினருக்கு முன்னுரிமையில்லை..!' - தூத்துக்குடி திமுக-வில் வெடிக்கும் பஞ்சாயத்து!

தூத்துக்குடி தி.மு.க-வில் சமூக பிரதிநித்துவம் இல்லையென புது பஞ்சாயத்து வெடித்திருக்கிறது. மாவட்டத்தில் த.வெ.க வளர்ச்சியை தடுக்க மீனவ சமூகத்தினருக்கு கட்சி அமைப்புகளின் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் ... மேலும் பார்க்க