செய்திகள் :

"மோடியும், ஷாவும் பயப்படும் காலம் இது" - ராகுல் காந்தி தேநீர் விருந்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள்!

post image

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்... சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) முறைகேடு நடந்துள்ளது என்று இந்தியா கூட்டணி தொடர்ந்து போராட்டத்தையும், எதிர்ப்புக் குரலையும் முன்னெடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேநீர் விருந்தும், செய்தியாளர்கள் சந்திப்பையும் ஏற்பாடு செய்திருந்தார்.

தேநீர் விருந்து முடிந்தவுடன், செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேசியதாவது...

ராகுல் காந்தி - தேநீர் விருந்து
ராகுல் காந்தி - தேநீர் விருந்து

ED, CBI-ஐத் தாண்டி, 10 அடி மேலே...

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேஜஸ்வி யாதவ்:

“ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம். இதற்காக என்ன தியாகம் செய்ய வேண்டுமானாலும், அதை அனைவரும் இணைந்து செய்வோம்.

நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களான அமலாக்கத்துறை, சிபிஐ அல்லது வருமான வரித்துறை ஆகியவற்றைத் தொடர்ந்து கைப்பற்ற முயலும் நபர்களைக் கடந்து, தேர்தல் ஆணையமும் ஞானேஷும் இன்னும் 10 அடிகள் மேலே சென்றுவிட்டனர்".

ஜந்தர் மந்தரும் தடை என்றால், எங்கேதான் போவது?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) அகில இந்திய பொதுச்செயலாளர் டி. ராஜா:

“டெல்லி நாட்டின் தலைநகரம், டெல்லி நமது நகரம். ஆனால் எங்கு பார்த்தாலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவதில்லை.

போராட்டங்கள் காரணமாகவே இப்படிச் செய்வதாகக் கூறுகிறார்கள். ஆம், போராட்டங்கள் நடக்கத்தான் செய்யும், போராட்டங்களை உங்களால் ஒடுக்கவோ நசுக்கவோ முடியாது. இப்போது அரசாங்கம் ஜந்தர் மந்தரை போராட்டக் களத்திலிருந்து நீக்கியுள்ளது.

ராகுல் காந்தி - தேநீர் விருந்து
ராகுல் காந்தி - தேநீர் விருந்து

இதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். ஜந்தர் மந்தர் மக்களின் போராட்ட இடமாகத் தொடர வேண்டும். ஏனெனில் இதற்கு முன் ராஜ்பாத்தில் போராட்டம் நடத்தினோம். அது தடை செய்யப்பட்டது.

நாடாளுமன்ற வீதியில் போராட்டம் நடத்தினோம். அதுவும் தடை செய்யப்பட்டது. இப்போது ஜந்தர் மந்தர். அப்படியானால் தேசியத் தலைநகரின் மக்கள் எங்கேதான் போவது?

எனவே ஜந்தர் மந்தரை போராட்ட இடத்திலிருந்து நீக்கியதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். மக்களின் போராட்ட இடமாக ஜந்தர் மந்தரை மீண்டும் மீட்க நாங்கள் போராடுவோம்.”

மேற்கு வங்கத்தில் தற்போது நடப்பது சட்டவிரோத அரசு...

திரிணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகரிகா கோஷ்:

“எஸ்.ஐ.ஆர் என்பது பெயர்களை நீக்குவதற்கும் தேர்தல்களை முறைகேடு செய்வதற்கும் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

இப்போது உள்ள மேற்கு வங்க அரசு ஒரு சட்டவிரோதமான அரசு. வாக்குத் திருட்டு மூலமே அது ஆட்சியில் உள்ளது.டெல்லியில் போராட்டங்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டன... மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் எவ்வாறு அடக்கப்பட்டன என்பதைப் பார்க்கிறீர்கள்.

தேர்தல் ஆணையம் நியாயமாக இல்லை. எஸ்.ஐ.ஆரை நிறுத்துங்கள். பழைய பட்டியலுக்குத் திரும்புங்கள். ஞானேஷ் குமார் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.”

ராகுல் காந்தி - தேநீர் விருந்து
ராகுல் காந்தி - தேநீர் விருந்து

ஞானேஷ் குமார் ஒரு மாஃபியா

சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத்:

“ஞானேஷ் குமார் ஒரு மாஃபியா.10-12 ஆண்டுகளாக மோடியும் ஷாவும் இந்த நாட்டை அச்சுறுத்தியும் பயமுறுத்தியும் வைத்திருந்தனர். இப்போது அவர்கள் பயப்பட வேண்டிய முறை.

இப்போது 4,00,000 ஆயுதப் படைகளை இங்கே நிறுத்திவிட்டு உள்ளே பயந்து உட்கார்ந்திருக்கிறார்கள்.”

ராகுல் காந்தி:

“இங்கே தனித்தனிப் போராட்டங்கள் எதுவுமில்லை. ஒரே ஒரு போராட்டம் மட்டுமே உள்ளது. அந்தப் போராட்டத்திற்கு ஒரே ஒரு நோக்கம் உள்ளது. அது இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது.

இந்த நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் முறை சீரழிக்கப்பட்டுவிட்டது. அரசியலமைப்புச் சட்டம் கிழிக்கப்பட்டு எறியப்பட்டுள்ளது.

நீங்கள் இந்திய அரசியலமைப்பை அழித்துவிட்டுத் தப்பித்துவிடலாம் என்பது அவ்வளவு எளிதானதல்ல. நேற்று (அக்டோபர் 12) நீங்கள் பார்த்தது இங்கு நிற்கும் அரசியல் கட்சிகளின் வெளிப்பாடு மட்டுமல்ல. இந்திய மக்களின் வெளிப்பாடு.”

"ராகுல் என்னை தள்ளிவிட்டாரா? எங்களுடையது அன்பும், நம்பிக்கையும் கொண்ட பிணைப்பு!" - DK சிவக்குமார்

கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 12), வாக்காளர் பட்டியலில் முறைகேடு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்கிற மனுவோடு டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி சென்றனர் இந்தியா கூட... மேலும் பார்க்க

மின்சாரம்: 'வரலாற்றிலேயே இல்லாத அதிக விலை' - தவெக அரசின் முடிவு சரியா? தவறா?| அலசல்

தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 1957-ம் ஆண்டு ஒரு சேவை நிறுவனமாக அரசால் துவங்கப்பட்டது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கப்பட்டதும், மின்வாரியம் ஒரு சேவை துறை என்பதில் இருந்து வியாபார துறையாக மாற்றப்பட... மேலும் பார்க்க

மம்தா பானர்ஜியைக் குத்திக் கொல்ல முயற்சி? கத்தியை மறைத்து வைத்திருந்த பெண் கைது; என்ன நடந்தது?

கொல்கத்தாவில் உள்ள காளிகாட் பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு வெளியில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி துர்கா பூஜை பந்தல் ஒன்றைத் திறந்து வைக்க வந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பெண் ஒருவரும் வந்திருந்தார... மேலும் பார்க்க

எல்.முருகன் ராஜினாமா: ``முதலில் நாடு, அடுத்து கட்சி, கடைசியாக சுயநலம்" - பிரதமர் மோடிக்கு கடிதம்

மத்திய இணை அமைச்சர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். 2017 முதல் 2020 வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராகப் பணியாற்றிய எல்.முருகன், கேர... மேலும் பார்க்க

Vijay: முதல்வர் விஜய்க்கு ஆந்திராவில் உற்சாக வரவேற்பு; இரு மாநில முதல்வர்களும் பேசிக்கொண்டது என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (அக்-13) ஆந்திரப் பிரதேசத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். மதியம் 3:00 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், மாலை 4:00 மணிக்கு விஜய... மேலும் பார்க்க