தேவி கன்னியாகுமரி அம்மன் கோயில்: நவராத்திரியில் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய அம...
மம்தா பானர்ஜியைக் குத்திக் கொல்ல முயற்சி? கத்தியை மறைத்து வைத்திருந்த பெண் கைது; என்ன நடந்தது?
கொல்கத்தாவில் உள்ள காளிகாட் பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு வெளியில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி துர்கா பூஜை பந்தல் ஒன்றைத் திறந்து வைக்க வந்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு பெண் ஒருவரும் வந்திருந்தார். அவர் மம்தா பானர்ஜி அருகில் சென்று அவரது சேலையைப் பிடித்து இழுத்ததாகத் தெரிகிறது. உடனே கட்சித் தொண்டர்கள் அப்பெண்ணைப் பிடித்து சோதித்தபோது அவரது ஆடைக்குள் கத்தி ஒன்று இருந்ததை கட்சித் தொண்டர்கள் கண்டுபிடித்தனர். தொண்டர்கள் அப்பெண்ணை தரையில் தள்ளி கேள்வி கேட்டனர்.
ஆனால் அப்பெண் எதையும் சொல்ல மறுத்துவிட்டார். இதையடுத்து மம்தா பானர்ஜியின் கட்சித் தொண்டர்கள் அந்தப் பெண்ணைப் பிடித்து காளிகாட் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து மம்தா பானர்ஜியின் கட்சித் தொண்டர்கள் கூறுகையில், ''அந்தப் பெண் மம்தா பானர்ஜியை "பிஷி" (அத்தை) என்று அழைத்தவாறே அவரை நோக்கி ஓடிவந்தார். அவர் மம்தா பானர்ஜி மீது பாய்ந்து விழ முயன்றதார். பின்னர் சாலையில் படுத்துக்கொண்டு அவதூறான வார்த்தைகளைப் பேசினார்'' என்று தெரிவித்தனர்.
இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் டோலா சென் கூறுகையில், ''அந்தப் பெண் போதையில் இருந்தார். அவர் கையில் கத்தி வைத்திருந்ததார். மம்தா பானர்ஜியின் மருமகள் என்று கூறிக்கொண்டு அவர் கூட்டத்திற்குள் நுழைய முயன்றார்'' என்று தெரிவித்தார்.
இச்சம்பவத்தையடுத்து மம்தா பானர்ஜிக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அவரது கட்சித் தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சாகேத் கோகலே 'எக்ஸ்' (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "போதைக்கு அடிமையான ஒருவர் இன்று மம்தா பானர்ஜியின் இல்லத்திற்குச் சென்று, கத்தியால் அவரைத் தாக்க முயன்றார்.
'Z+' பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்ட, மூன்று முறை முதலமைச்சராகப் பதவி வகித்த ஒருவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் மேற்கு வங்கத்தில் நிலவுகிறது. டெல்லியில் பாஜகவை வீழ்த்த 'திதி' (மம்தா) உறுதியாக இருப்பதால், இது அக்கட்சியின் திட்டமிட்ட சதியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிடிபட்ட பெண்ணின் பெயர் அனுசுவா சாஹா (38) என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீஸார் கூறுகையில், ''பிடிபட்டுள்ள பெண் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் இல்லத்தில் இருந்து வெளியேறும் போது ஒரு சம்பவம் நடந்தது. அனுசுவா சாஹா முன்னாள் முதல்வரைச் சந்தித்தபோது அது கடுமையான வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. அவரிடம் விசாரித்து வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் மீது முட்டை, கற்கள் வீசித்தாக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம், கொல்கத்தாவின் ஷியம்பஜார் பகுதியில் தனது கார் மீது ஒரு பெரிய கல் வீசப்பட்டதாக பானர்ஜி கூறினார். இதனால் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.














