செய்திகள் :

ஸ்டாலின் Vs திருமா: திமுக-வுக்கு எதிராக தவெக-வின் திட்டம் என்ன? - 'திகுதிகு' திருச்சி கிழக்கு!

post image

'அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆறு பேரின் ராஜினாமா முடிவை சபாநாயகர் ஏற்றது செல்லும்' என இன்று தீர்ப்பளித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால், திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய ஐந்து தொகுதிகளுக்கும் விரைவிலேயே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் போட்டியிட, அக்கட்சியின் சீனியர் புள்ளிகள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அதற்குப் போட்டியாக த.வெ.க எடுத்திருக்கும் வியூகம்தான், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

நம்மிடம் பேசிய தி.மு.க-வின் இரண்டாம்கட்ட தலைவர்கள் சிலர், "கூட்டணிக் கட்சிகள் எதுவும் இல்லாமல், வெறும் களப்பணியை மட்டுமே நம்பி தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களமிறங்கிய தி.மு.க., இரண்டு தொகுதிகளிலும் இரண்டாமிடம் பெற்றது. கடந்த பொதுத்தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட சற்று குறைவான வாக்குகளைப் பெற்றாலும், தி.மு.க-வின் வாக்குவங்கியைத் தக்கவைத்துக் கொண்டுவிட்டோம்.

தாராபுரத்தில், வெறும் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி வெற்றிப்பெற்றிருக்கிறது த.வெ.க. இதிலேயே தி.மு.க தலைவர் ஸ்டாலின் உற்சாகமடைந்துவிட்டார். சூட்டோடு சூடாக, இடைத்தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் களப்பணியைத் தொடங்கச் சொல்லிவிட்டார்.

அப்போது, முன்னாள் அமைச்சரும் கழகத்தின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, 'திருச்சி கிழக்கு தொகுதியில் நீங்கள் போட்டியிட வேண்டும். விலைவாசி உயர்வு, மின்வெட்டு பிரச்னைகளால் த.வெ.க ஆட்சியின் மீது பொதுமக்களுக்கு அயர்ச்சி உருவாகிவிட்டது. களம் நமக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது.

திருச்சி கிழக்கில் நீங்கள் வெற்றிப்பெற்றுவிட்டால், 'அப்பாவைக் காணோம்' என்று யாரும் நம்மைச் சீண்ட மாட்டார்கள். உங்களுடைய வெற்றி, கழகத்தின் அடிமட்ட தொண்டனை உற்சாகப்படுத்திவிடும். நீங்கள் வெற்றிப்பெற உயிரைக் கொடுத்து நாங்கள் வேலை செய்ய ரெடி...' என்று திருச்சி கிழக்கில் தலைவரை போட்டியிட வலியுறுத்தியிருக்கிறார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

கே.என்.நேருவின் கருத்தைப் பல சீனியர்களும் ஆமோதித்திருக்கிறார்கள். அவர்களுடைய அழுத்தத்தில் ஒரு அரசியல் சூட்சமும் இருக்கிறது. சட்டமன்றத்துக்குள் ஸ்டாலின் சென்றுவிட்டால், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி தொடர முடியாது. அந்தப் பதவியை ஸ்டாலினுக்கு விட்டுத்தர வேண்டியதிருக்கும். பழையபடி சீனியர்களின் கைதான் தி.மு.க-வுக்குள் ஓங்கும். இதையெல்லாம் கணக்கிட்டுத்தான், திருச்சி கிழக்கில் ஸ்டாலினைப் போட்டியிட வலியுறுத்துகிறார்கள் கட்சி சீனியர்கள்.

ஆனால், எந்த முடிவையும் தலைவர் இன்னும் எடுக்கவில்லை. 'தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கவில்லை. வேட்பாளர் குறித்து அப்போது பார்த்துக் கொள்ளலாம்' என்றுவிட்டார். ஆனாலும்கூட, இடைத்தேர்தலில் தலைவரைக் களமிறக்கியே தீருவதென சீனியர்கள் துடிப்போடு இருக்கிறார்கள்" என்றனர்.

தி.மு.க-வுக்குள் நடந்த இந்த ஆலோசனை உளவுத்துறை மூலமாக ஆட்சி மேலிடத்தை எட்டவும், பதிலடியாக ஒரு வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராக ஸ்டாலின் களமிறங்கும் பட்சத்தில், அவருக்குப் போட்டியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைக் களமிறக்க ஆலோசித்திருக்கிறது த.வெ.க மேலிடம். இதுதொடர்பாக, இரண்டு சீனியர் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

அதுகுறித்து நம்மிடம் பேசிய அமைச்சர்கள் சிலர், "திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளராக திருமாவளவனைக் களமிறக்கினால், அதில் இரண்டு அரசியல் லாபங்களை அடையலாம் என்று கணக்குப் போடுகிறது மேலிடம். முதலாவது, த.வெ.க கூட்டணியின் வேட்பாளராக திருமா களமிறங்கினால், அவருக்கு எதிராக ஸ்டாலின் போட்டியிட மாட்டார். பின்வாங்கிவிடுவார். இதுவே ஒரு வெற்றிதான்.

இரண்டாவது, கூட்டணிக்குள் பா.ம.க வரப்போவதாக பரவும் செய்தியால், அப்செட்டில் இருக்கிறார் திருமா. திண்டிவனத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், 'பா.ம.க உள்ளே வந்தால், நாங்கள் வெளியேறிவிடுவோம்' என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.

அவரை 'கூல்' செய்யும்விதமாக, 'திருச்சி கிழக்கில் திருமாவளவனை வெற்றிப்பெற வைத்து அமைச்சராக்கிவிடலாம்...' என்று முதல்வருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள் அந்த இரண்டு சீனியர் அமைச்சர்களும். இவ்விவகாரத்தில் முதல்வர் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஒருவேளை ஸ்டாலின் வேட்பாளராகக் களமிறங்கினால், பதிலுக்கு திருமா களமிறக்கப்படலாம்.

திருமா சிட்டிங் எம்.பி-யாக இருக்கும் சிதம்பரம் தொகுதி, த.வெ.க-வுக்கு அளிக்கப்படலாம். இதற்கிடையே, த.வெ.க-வில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணனும் வெள்ளமண்டி நடராஜனும் தங்களுடைய வாரிசுகளுக்கு திருச்சி கிழக்கு தொகுதியை எதிர்பார்க்கிறார்கள். அதுதொடர்பான பரிசீலனையும் நடைபெறுகிறது" என்றனர்.

வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன்
வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன்

அரசியல் 'ஹெவி வெயிட்'கள் களமிறங்கப் போவதாகப் பரவும் தகவலால், அரசியல் வட்டாரம் இப்போதே 'திகுதிகு'வென பரபரப்பாகிவிட்டது. மோதிப் பார்த்துவிடுவது என ஸ்டாலின் முடிவெடுத்துவிட்டால், அதன்பிறகு தீப்பொறிகள் பறக்கப்போவது நிச்சயம்.

Vijay: முதல்வர் விஜய்க்கு ஆந்திராவில் உற்சாக வரவேற்பு; இரு மாநில முதல்வர்களும் பேசிக்கொண்டது என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (அக்-13) ஆந்திரப் பிரதேசத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். மதியம் 3:00 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், மாலை 4:00 மணிக்கு விஜய... மேலும் பார்க்க

"கூலி வேலைக்கு வர்றவனோட உசுருக்கு மதிப்பு கிடையாதா?" - முதல்வரின் பெரம்பூர் தொகுதியில் நடந்த கொடூரம்

நேற்று முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியின் கொடுங்கையூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்திருந்தனர். அவர்களின் உடல் ஸ்டான்லி மருத்துவமனையின் ... மேலும் பார்க்க

"யூனிட்டுக்கு 35 ரூபாய்க்கு மின்சாரமா? இது யார் வீட்டுக் காசு சார்?" - தவெக அரசைச் சாடும் ஸ்டாலின்

"த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!" என்று தவெக அரசை விமர்சித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க

"தினக்கூலித் தொழிலாளியின் மகனாக இருந்து இன்று..." - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ராஜினாமா

மத்திய இணையமைச்சர் எல். முருகன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் தலைமையின் கீழ் பாரத மாதாவுக்கும... மேலும் பார்க்க

ADMK: தொடர் தோல்வி, அதிருப்தியாளர்களின் மீட்டிங், தொடங்கும் 55வது ஆண்டு... சமாளிப்பாரா எடப்பாடி?

வரும் சனிக்கிழமை அதாவது அக்டோபர் 17ம் தேதி 55வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது எம்.ஜி.ஆர் உருவாக்கிய அவருக்குப் பின் ஜெ.ஜெயலலிதா கட்டிக் காத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.இதையொட்டி தம... மேலும் பார்க்க

தாராபுரம், மதுராந்தகம் அதிர்ச்சி! அ.தி.மு.க-வை உள்வாங்கும் த.வெ.க - வேலுமணி & டீம் ஆபரேஷன்!

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் அ.தி.மு.கவுக்குள் மீண்டும் ஒரு பிரளயத்தை உண்டாக்கியிருக்கிறது. தன் ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ளக் கிடைத்த இறுதி வாய்ப்பையும் கோட்டை விட்டிருக்கிறார் அ.தி.மு... மேலும் பார்க்க