செய்திகள் :

குமரி: காதல் தொல்லையால் பெண் எடுத்த விபரீத முடிவு; இளைஞரை அடித்துக்கொன்ற உறவினர்கள்; என்ன நடந்தது?

post image

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெரியவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஞானசெல்வன் (58). முன்னாள் ராணுவ வீரர். தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் ஏஞ்சல்(26) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஏஞ்சலை, அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டனிராஜ் (30) என்பவர் ஒருதலையாகக் காதலித்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அவரைப் பலமுறை எச்சரித்தும் கேட்காததால், கடந்த மே மாதம் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த பின்னரும் ஆண்டனிராஜ் தொடர்ந்து ஏஞ்சலைக் காதலிக்குமாறு பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆண்டனி ராஜுக்கும், ஏஞ்சலின் குடும்பத்தினருக்கும் தினமும் பிரச்னை நடந்து வந்துள்ளது. இந்தப் பிரச்னைகளால் மனம் உடைந்த ஏஞ்சல் கடந்த இரு தினங்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஏஞ்சலின் உறவினர்கள், கொட்டாரம் சந்திப்பில் நின்று கொண்டிருந்த ஆண்டனிராஜை வலுக்கட்டாயமாக பைக்கில் அழைத்துச் சென்று, 'உன்னால் ஓர் உயிர் போய் விட்டது' எனக் கூறி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ஆண்டனிராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

கொலைச்செய்யப்பட்ட ஆண்டனிராஜ்
கொலைச்செய்யப்பட்ட ஆண்டனிராஜ்

இளம் பெண் தற்கொலை மற்றும் ஆண்டனிராஜ் கொலை குறித்து தகவலின்பேரில் கன்னியாகுமரி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை மற்றும் கொலை தொடர்பாகத் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர்.

ஆண்டனி ராஜ் கொலை தொடர்பாக, ஏஞ்சலின் உறவினர்கள் பெவின் (26), பெனிஸ் (25), வினிஸ் (25) மற்றும் பெரியவிளையைச் சேர்ந்த ரவி செல்வன் (56), ஏசுநேசசெல்வன் (58) ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

போலீஸ் விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஆண்டனிராஜ் மீது அஞ்சுகிராமம், பழவூர், கன்னியாகுமரி, திருக்குறுங்குடி, ஏர்வாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்பட 11 வழக்குகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஏஞ்சலைப் பின்தொடர்ந்து காதலிப்பதாக ஆண்டனி ராஜ் தொல்லை கொடுத்தது குறித்து, அந்தப் பெண்ணின் தந்தைக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தனது மகளைத் தொந்தரவு செய்யக்கூடாது என ஏஞ்சலின் தந்தை பலமுறை சொல்லியுள்ளார். ஆனாலும் ஏஞ்சலைப் பின்தொடர்வதை ஆண்டனி ராஜ் விடவில்லை. இதையடுத்து ஆண்டனி ராஜிக்கு எச்சரிக்கையும் விடுத்து பார்த்துள்ளனர். ஆனாலும் ஆண்டனி ராஜ் கேட்காமல், ஏஞ்சலின் குடும்பத்தினரை மிரட்டி உள்ளார். இந்தப் பிரச்னையால் மனம் நொந்த ஏஞ்சல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏஞ்சல் மரணத்துக்கு ஆண்டனி ராஜின் ஒருதலைக் காதல்தான் காரணம் என நினைத்து, உறவினர்கள் தாக்கிக் கொலை செய்துள்ளதும் போலீஸ் விசாரணைக்குப் பிறகே தெரியவந்துள்ளது.

ஜெம் வீரமணி வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரிகள் அருண், கண்ணனிடம் விசாரணை - அடுத்து யார்?

சிறுமிகளிடம் தவறாக நடந்த குற்றச்சாட்டில் பிரபல தொழிலதிபரான ஜெம் வீரமணி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் வீரமணியின் தோழி ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ரூ.5 கோடி லஞ்ச விவகாரம் - சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் வள்ளியம்மை. இவரது கணவர் ஆர்.எம்.பாஸ்கரன் அதிமுக பிரமுகர். இவரது அண்ணன் மகன் சரவணன். பிரபல மூளை நரம்பியல் டாக்டர் இராமசாமி இவரது மனைவி ஜெயஸ்ர... மேலும் பார்க்க

சேலம்: மங்கி குல்லா கும்பலின் வெள்ளி குடோன் ஸ்கெட்ச் - ₹15 கோடி மதிப்புள்ள 600 கிலோ வெள்ளி திருட்டு!

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி அருகில் உள்ள சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். வெள்ளி வணிகம் செய்து வந்த இவர், வெள்ளிக் கட்டிகளில் இருந்து பொருள்களை உற்பத்தி செய்யும் வெள்ளி பட்டறையை... மேலும் பார்க்க

தருமபுரி : களவுக்குப் போன கல்லூரி மாணவிகள் - உறவினர்களுடன் கைதான அதிர்ச்சி சம்பவம்!

ஆடம்பரமாக வாழ தவறான வழிகாட்டுதலால் திருடுவதை ஜாலியாக செய்து வந்த கல்லூரி மாணவிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதுசமகாலத்தில் பல்வேறு து... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் காதல்; லிவிங் டுகெதர் வாழ்க்கை; இறுதியில் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பாரதி நகரைச் சேர்ந்த 28 வயதான இளைஞன் பிரசாந்த். மளிகைக் கடையில் வேலை செய்யும் சாதாரண கூலித்தொழிலாளியான பிரசாந்த்துக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தி... மேலும் பார்க்க

கோவையில் மதுபான பாரில் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முயற்சி - 5 பேர் கைது

கோவை செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள எப்.எல்.2 பாரில் நேற்று மாலை 5 பேர் கொண்ட கும்பல் மது வாங்கிவிட்டு 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளனர். அந்த நோட்டுகளை பார்த்து சந்தேகமடைந்த பார் ஊழியர்கள், அவர்... மேலும் பார்க்க