செய்திகள் :

"யூனிட்டுக்கு 35 ரூபாய்க்கு மின்சாரமா? இது யார் வீட்டுக் காசு சார்?" - தவெக அரசைச் சாடும் ஸ்டாலின்

post image

"த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!" என்று தவெக அரசை விமர்சித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்! இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?

இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்கு பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.

குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.

இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.

மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களை தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது" என்று விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Vijay: முதல்வர் விஜய்க்கு ஆந்திராவில் உற்சாக வரவேற்பு; இரு மாநில முதல்வர்களும் பேசிக்கொண்டது என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (அக்-13) ஆந்திரப் பிரதேசத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். மதியம் 3:00 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், மாலை 4:00 மணிக்கு விஜய... மேலும் பார்க்க

"கூலி வேலைக்கு வர்றவனோட உசுருக்கு மதிப்பு கிடையாதா?" - முதல்வரின் பெரம்பூர் தொகுதியில் நடந்த கொடூரம்

நேற்று முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியின் கொடுங்கையூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்திருந்தனர். அவர்களின் உடல் ஸ்டான்லி மருத்துவமனையின் ... மேலும் பார்க்க

ஸ்டாலின் Vs திருமா: திமுக-வுக்கு எதிராக தவெக-வின் திட்டம் என்ன? - 'திகுதிகு' திருச்சி கிழக்கு!

'அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆறு பேரின் ராஜினாமா முடிவை சபாநாயகர் ஏற்றது செல்லும்' என இன்று தீர்ப்பளித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப... மேலும் பார்க்க

"தினக்கூலித் தொழிலாளியின் மகனாக இருந்து இன்று..." - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ராஜினாமா

மத்திய இணையமைச்சர் எல். முருகன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் தலைமையின் கீழ் பாரத மாதாவுக்கும... மேலும் பார்க்க

ADMK: தொடர் தோல்வி, அதிருப்தியாளர்களின் மீட்டிங், தொடங்கும் 55வது ஆண்டு... சமாளிப்பாரா எடப்பாடி?

வரும் சனிக்கிழமை அதாவது அக்டோபர் 17ம் தேதி 55வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது எம்.ஜி.ஆர் உருவாக்கிய அவருக்குப் பின் ஜெ.ஜெயலலிதா கட்டிக் காத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.இதையொட்டி தம... மேலும் பார்க்க

தாராபுரம், மதுராந்தகம் அதிர்ச்சி! அ.தி.மு.க-வை உள்வாங்கும் த.வெ.க - வேலுமணி & டீம் ஆபரேஷன்!

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் அ.தி.மு.கவுக்குள் மீண்டும் ஒரு பிரளயத்தை உண்டாக்கியிருக்கிறது. தன் ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ளக் கிடைத்த இறுதி வாய்ப்பையும் கோட்டை விட்டிருக்கிறார் அ.தி.மு... மேலும் பார்க்க