செய்திகள் :

"ராகுல் என்னை தள்ளிவிட்டாரா? எங்களுடையது அன்பும், நம்பிக்கையும் கொண்ட பிணைப்பு!" - DK சிவக்குமார்

post image

கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 12), வாக்காளர் பட்டியலில் முறைகேடு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்கிற மனுவோடு டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி சென்றனர் இந்தியா கூட்டணித் தலைவர்கள்.

அதிகாரத் திமிர்

இந்தப் பேரணியில் ராகுல் காந்தி கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை காலரைப் பிடித்து இழுத்துத் தள்ளிவிடுவதுபோல வீடியோவை சமூக வலைதளங்களில் பாஜகவினர் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ குறித்து, “பரம்பரையாக... வழிவழியாக வரும் அதிகாரத் திமிருக்கு ஒரு முகம் இருந்தால், அது நிச்சயமாக இப்படித்தான் இருக்கும்” என்றும் ராகுல் காந்தியின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் பாஜகவினர்.

பாஜகவினர் ஷேர் செய்யும் வீடியோ:

டி.கே.சிவக்குமார் விளக்கம்

இந்த வீடியோ குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் டி.கே.சிவக்குமார்.

அந்தப் பதிவில், “நமது போராட்டம் ஜனநாயகத்திற்காகத்தான். திசைதிருப்பல்களுக்காக அல்ல.

நேற்றைய போராட்டம், வாக்குத் திருட்டிற்கு எதிராகவும் நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஒன்றுதிரண்ட மக்களின் பெருங்கடலையே கண்டது.

ராகுல் காந்தி எனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, எச்சரிக்கையுடன் வாகனத்திற்குத் திரும்புமாறு எனக்கு அறிவுறுத்தினார்.

இங்கு 'இதுவே' முதன்மையானவை

பரஸ்பர நம்பிக்கை, அன்பு மற்றும் குடும்ப உணர்வில் வேரூன்றிய பிணைப்பு அது.

10 வினாடி வீடியோ முழுக் கதையையும் சொல்லிவிடாது. உண்மையான பிரச்னையிலிருந்து நாம் கவனத்தைத் திசைதிருப்ப வேண்டாம்.

வாக்குத் திருட்டும், ஒவ்வொரு இந்தியனின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் போராட்டமுமே இங்கு முதன்மையானவை” என்று குறிப்பிட்டுள்ளார் டி.கே.சிவக்குமார்

"மோடியும், ஷாவும் பயப்படும் காலம் இது" - ராகுல் காந்தி தேநீர் விருந்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள்!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்... சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) முறைகேடு நடந்துள்ளது என்று இந்தியா கூட்டணி தொடர்ந்து போராட்டத்தையும், எதிர்ப்புக் குரலையும் முன்னெடு... மேலும் பார்க்க

மின்சாரம்: 'வரலாற்றிலேயே இல்லாத அதிக விலை' - தவெக அரசின் முடிவு சரியா? தவறா?| அலசல்

தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 1957-ம் ஆண்டு ஒரு சேவை நிறுவனமாக அரசால் துவங்கப்பட்டது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கப்பட்டதும், மின்வாரியம் ஒரு சேவை துறை என்பதில் இருந்து வியாபார துறையாக மாற்றப்பட... மேலும் பார்க்க

மம்தா பானர்ஜியைக் குத்திக் கொல்ல முயற்சி? கத்தியை மறைத்து வைத்திருந்த பெண் கைது; என்ன நடந்தது?

கொல்கத்தாவில் உள்ள காளிகாட் பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு வெளியில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி துர்கா பூஜை பந்தல் ஒன்றைத் திறந்து வைக்க வந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பெண் ஒருவரும் வந்திருந்தார... மேலும் பார்க்க

எல்.முருகன் ராஜினாமா: ``முதலில் நாடு, அடுத்து கட்சி, கடைசியாக சுயநலம்" - பிரதமர் மோடிக்கு கடிதம்

மத்திய இணை அமைச்சர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். 2017 முதல் 2020 வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராகப் பணியாற்றிய எல்.முருகன், கேர... மேலும் பார்க்க

Vijay: முதல்வர் விஜய்க்கு ஆந்திராவில் உற்சாக வரவேற்பு; இரு மாநில முதல்வர்களும் பேசிக்கொண்டது என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (அக்-13) ஆந்திரப் பிரதேசத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். மதியம் 3:00 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், மாலை 4:00 மணிக்கு விஜய... மேலும் பார்க்க

"கூலி வேலைக்கு வர்றவனோட உசுருக்கு மதிப்பு கிடையாதா?" - முதல்வரின் பெரம்பூர் தொகுதியில் நடந்த கொடூரம்

நேற்று முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியின் கொடுங்கையூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்திருந்தனர். அவர்களின் உடல் ஸ்டான்லி மருத்துவமனையின் ... மேலும் பார்க்க