செய்திகள் :

பல்லடம்: 10 லட்சம் மதிப்புள்ள 35 பன்றிகள் திருட்டு; கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

post image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள கோடாங்கி பாளையத்தைச் சேர்ந்த கலமாணி என்பவர் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி பன்றி வளர்ப்பு கூடத்தில் இருந்து 35 பன்றிகள் திடீரென மாயமாகியுள்ளன.

அதிர்ச்சியடைந்த கலாமணி, இது தொடர்பாக பல்லடம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பன்றிகள் திருட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளனர்.

பன்றி திருட்டு
பன்றி திருட்டு

பின்னணி குறித்து தெரிவித்த பல்லடம் காவல்துறையினர், "பன்றி பட்டிக்குள் கடந்த செப்டம்பர் 14-ம் தேதியன்று நள்ளிரவில் புகுந்த இரண்டு நபர்கள், அங்கிருந்த 35 பன்றிகளை தார்ப்பாய் போட்டு மூடி, பிக்கப் வாகனத்தில் ஏற்றி திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 பன்றிகளையும் மற்றொரு பண்ணையில் விற்பனை செய்திருக்கிறார்கள். பன்றிகள் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

திருட்டிற்குப் பயன்படுத்திய பிக்கப் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பன்றி திருட்டு வழக்கில் கைதானவர்களில் முதன்மை குற்றவாளியான மணிகண்டன் மீது ஏற்கனவே பெருந்துறை காவல் நிலையத்தில் பன்றி திருட்டு வழக்கும், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் செயின் பறிப்பு வழக்கும் நிலுவையில் உள்ளன. மற்றொரு கைதியான சங்கர் மீது அவிநாசி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை‌க் கண்டுபிடித்தோம்" என்றனர்.

திருப்பூர்: ஆடு மேய்க்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை, கொலை - பைக் மெக்கானிக் சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம் நம்பியூர் லாகம்பாளையம் பகுதியில் கணவருடன் வாழ்ந்து வந்தவர் 39 வயதான ஜானகி‌. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் நடராஜ் உயிரிழந்த காரணத்தால், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகில் உள்ள சேவ... மேலும் பார்க்க

சிகரெட் பிடித்ததால் ஏற்பட்ட தகராறு; டிரைவரை அடித்து கொன்ற கிளீனர்; மதுரையில் பரபரப்பு

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள திருமோகூரைச் சேர்ந்தபார்த்திபன் என்ற பாட்ஷா (30). இவர் ராஜாக்கூரில் உள்ள தண்ணீர் நிறுவனத்தில் டிரைவராகப் பணிபுரிந்துவருகிறார்அதே நிறுவனத்தில், ஒத்தக்கடை அருகேயுள்ள ... மேலும் பார்க்க

விபத்து ஏற்படுத்தி 3 உயிர்களைக் காவு வாங்கிய சுஹைல்; சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டதால் சர்ச்சை

கேரள மாநிலம் ​கொச்சி நெடும்பாசேரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ‘மினி கூப்பர்’ சொகுசு கார் மோதியதில் வயநாடு கல்பற்றாவைச் சேர்ந்த தேவிகா (21), பாலக்காடு மன்னார்க்காட்டைச் சேர்ந்த கோபிகா (22) மற்ற... மேலும் பார்க்க

குமரி: காதல் தொல்லையால் பெண் எடுத்த விபரீத முடிவு; இளைஞரை அடித்துக்கொன்ற உறவினர்கள்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெரியவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஞானசெல்வன் (58). முன்னாள் ராணுவ வீரர். தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரதுமகள் ஏஞ்சல்(26) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஏஞ்சலை, அ... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரிகள் அருண், கண்ணனிடம் விசாரணை - அடுத்து யார்?

சிறுமிகளிடம் தவறாக நடந்த குற்றச்சாட்டில் பிரபல தொழிலதிபரான ஜெம் வீரமணி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் வீரமணியின் தோழி ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ரூ.5 கோடி லஞ்ச விவகாரம் - சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் வள்ளியம்மை. இவரது கணவர் ஆர்.எம்.பாஸ்கரன் அதிமுக பிரமுகர். இவரது அண்ணன் மகன் சரவணன். பிரபல மூளை நரம்பியல் டாக்டர் இராமசாமி இவரது மனைவி ஜெயஸ்ர... மேலும் பார்க்க