செய்திகள் :

ஜெர்மனி: 16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ; அதிர்ச்சியில் காவல்துறை - என்ன நடந்தது?

post image

ஜெர்மனியில் 16 வயது சிறுமியிடம் ரோபோ ஒன்று தகாதமுறையில் நடந்துகொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெர்மனியின் கொலோன் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே 16 வயது சிறுமி தன் தோழிகளுடன் நின்றுகொண்டிருந்தார். சுமார் 1.2 மீட்டர் உயரம் கொண்ட ரோபோ ஒன்று பின்புறமாக வந்து அவரிடம் தவறாக நடந்துள்ளது.

அந்த ரோபோவின் 16 வயது உரிமையாளரும், அவருடன் இருந்த 19 வயது இளைஞரும் சேர்ந்து இந்த நிகழ்வைப் படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் நேரலையில் பகிர்ந்துள்ளனர்.

சிறுமி வன்கொடுமை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்டறிந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Volkswagen காரின் டிக்கியில் அந்த ரோபோ மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த ரோபோவையும் இரு சந்தேக நபர்களின் கைபேசிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த ரோபோ தொலைதூரத்தில் இருந்து இயக்கப்பட்டதா அல்லது யாராவது அதைத் திட்டமிட்டு அவ்வாறு செய்ய தூண்டினார்களா என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் துறை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இச்சம்பவத்தை ஒரு 'பாலியல் தொல்லை' வழக்காகப் பதிவு செய்து, காவல்துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த ரோபோவை காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Samantha: ``நம்மால் இன்னும் மாற முடியும்" - பெண்களுக்கு ஆதரவான நடிகை சமந்தாவின் பதிவு வைரல்!

நடிகை சமந்தா நடிப்பில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் வெளியான 'மா இண்டி பங்காரம்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந... மேலும் பார்க்க

Rachita Ram: கன்னத்தைக் கிள்ளிய ரசிகர்; ``அந்த அன்பை ரசிக்கிறேன்..." - நடிகை ரச்சிதா ராம்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரச்சிதா ராம். ரஜினி நடிப்பில் வெளியான 'கூலி' படத்தின் மூலம் 'கல்யாணி' கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். சமீபத்தில் இவரது 34-வது பிறந்தநாளை முன்... மேலும் பார்க்க

நடுவானில் பைலட்களுக்கிடையே Cockpit-ல் மோதல்; ரத்தம்... அலறிய பயணிகள்; திக்... திக் அவசர தரையிறக்கம்!

துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநாகர் தல் அவிவ் நோக்கிச் சென்ற flydubai விமானத்தில் விமானிகளுக்கிடையே நடந்த தகராறில் விமானம் சவூதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியான செய்தியில், flydubai ... மேலும் பார்க்க

ஈரான்: பதற்றத்தை ஏற்படுத்திய மர்ம ஒளி; வானில் பறந்தது ஏலியன் UFO விண்கலமா? உண்மை என்ன..?

செப்டம்பர் 20, 2026 அன்று ஈரானின் தலைநகரான டெஹ்ரானின் இரவு வானில் பல வண்ணங்களில் மின்னியபடி பறந்த ஒரு மர்மப் பொருள் தொடர்பான வீடியோக்கள் 'X' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகம் முழுவதும் பெரும் ... மேலும் பார்க்க

Biggboss: ``என்னையும்தான் கிழவன் என்றார்கள்" - நிகழ்ச்சிக்கு நடுவே சட்டையை கழற்றிய சல்மான் கான்!

இந்தி பிக்பாஸ் சீசன் 20-ன் சமீபத்திய 'வீக்கெண்ட் கா வார்' (Weekend Ka Vaar) எபிசோட் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் பிரபல பாலிவுட் நடிகருமான சல்மான... மேலும் பார்க்க

BiggBoss10: ``போனவாரமே சொல்லிருக்கனும்... அதான் இப்போ சொல்றோம்" - விஜய் சேதுபதி

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப். 6 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விஜய் சேதுபதியே இந்த புதிய சீசனையும் தொகுத்து வழங்குகிறார். கடந்த சனிக்... மேலும் பார்க்க