FIR போட்டாலே குற்றவாளியா? – இந்த வார்த்தையைக் கேட்டாலே பயம் ஏன்? - சட்டம் சொல்வத...
“எல்.முருகனை நீக்கிய மோடி; மத்திய அமைச்சரவையில் தமிழர் யாரும் இல்லை” - பிரவீண் சக்கரவர்த்தி சாடல்
நேற்று மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன்.
தன்னுடைய தொகுதிக்குத் தொண்டாற்றுவதற்கும், தமிழ்நாடு பாஜக-வை வலுப்படுத்தவும் இந்த ராஜினாமா என்று தனது ராஜினாமாக் கடிதத்தில் எல்.முருகன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீண் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், “மறந்துவிட வேண்டாம்... தேர்தலுக்கு முன்பு, ‘ஜன நாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டு, ரெட் ஜெயண்டின் ‘பராசக்தி’ படத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து,
மறந்துவிட வேண்டாம்... தேர்தலுக்கு முன்பு, 'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டு, ரெட் ஜெயண்டின் 'பராசக்தி' படத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பிரதமர் மோடி பிரம்மாண்ட பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் அந்தத் திட்டம் தேர்தலில் பலனளிக்கவில்லை. தற்போது, அதே மோடி எல். முருகனை அமைச்சரவையிலிருந்து எவ்வித மரியாதையும் இன்றி நீக்கியுள்ளார்; இப்போது மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டில் இருந்து யாரும் இல்லை
— Praveen Chakravarty (@pravchak) October 14, 2026
மாண்புமிகு அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பிரதமர் மோடி பிரமாண்ட பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அந்தத் திட்டம் தேர்தலில் பலனளிக்கவில்லை.
தற்போது, அதே மோடி, எல். முருகனை அமைச்சரவையிலிருந்து எவ்வித மரியாதையும் இன்றி நீக்கியுள்ளார்.
இப்போது மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டிலிருந்து யாரும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.
எல்.முருகன்தான் ராஜினாமா செய்ததாகத்தான் தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பிரவீண் சக்கரவர்த்தியோ ‘பதவி நீக்கம்’ என்று கூறுகிறார்.














