செய்திகள் :

Sardar 2 Review: அதிக பிரமாண்டம், அச்சுறுத்தும் களம்; ஆனாலும் இந்த சர்தார் சறுக்குவது எங்கே?

post image

RAW ஏஜென்ட்டான விஜய் பிரகாஷ் (கார்த்தி), தனது தந்தை சர்தார் சந்திரபோஸின் (கார்த்தி) கடந்தகாலத்துடன் தொடர்புடைய முக்கியமான மிஷனுக்குள் இழுக்கப்படுகிறார். சில நொடிகளில் லட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கக்கூடிய ‘Doku’ என்ற உயிரியல் ஆயுதத்தைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார் ‘Black Dagger’ (எஸ்.ஜே.சூர்யா). பல ஆண்டுகளுக்கு முன்பு இதே Doku தொடர்பான மிஷனில் சர்தார் செய்தது என்ன, அப்பா - மகன் இருவரும் இந்த பேராபத்தை தடுத்தார்களா என்பதே ‘சர்தார் 2’.

Sardar 2 Review |சர்தார் 2விமர்சனம்
Sardar 2 Review |சர்தார் 2 விமர்சனம்

விஜய் பிரகாஷ், சர்தார் என இரட்டை வேடங்களில் உடல்மொழி, குரல் என வித்தியாசம் காட்டி படத்தைத் தாங்குகிறார் கார்த்தி. ஆனால், முதல் பாகத்தில் இந்தக் கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கம் இங்கு கொஞ்சம் மிஸ்ஸிங். Black Dagger-ஆக வரும் எஸ்.ஜே.சூர்யா ஆரம்பக் காட்சிகளில் மிரட்டினாலும், கதாபாத்திரம் போதுமான ஆழத்துடன் எழுதப்படாததால் அவரது வழக்கமான மிகை நடிப்பு ஒரு கட்டத்துக்குப் பிறகு சோர்வை ஏற்படுத்துகிறது. மாளவிகா மோகனன் தனது கடந்தகாலக் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். யோகி பாபு, நிழல்கள் ரவியின் காமெடி காட்சிகள் ஹிட் அண்ட் மிஸ் ரகமே!

ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகளுக்கும், செட்களை அதன் பிரமாண்டம் குறையாமல் காட்சிப்படுத்தவும் பெருமளவில் உதவியிருக்கிறது. ஆனால், VFX அதற்கு ஈடுகொடுக்காமல் பல இடங்களில் காட்சிகளை செயற்கையாக மாற்றிவிடுகிறது. குறிப்பாக AI மூலம் சேர்க்கப்பட்ட சில விஷயங்கள் ரொம்பவே உறுத்தல். விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு Stylish-ஆக இருந்தாலும், கத்திரியை இன்னும் இறுக்கமாகப் பயன்படுத்தியிருக்கலாம். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையும் சில இடங்களில் மட்டுமே கைகொடுக்கிறது.

Sardar 2 Review |சர்தார் 2 விமர்சனம்
Sardar 2 Review |சர்தார் 2 விமர்சனம்

முதல் பாகத்தைப் போலவே ஒரு சமூகப் பிரச்னையை ஸ்பை த்ரில்லர் கதைக்குள் கொண்டுவர முயன்றிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். இந்த முறை அவர் கையில் எடுத்திருப்பது ‘ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்’. தேவையில்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், அந்த மருந்துகளுக்கு எதிராக பாக்டீரியாக்கள் உருவாக்கிக்கொள்ளும் எதிர்ப்புத்தன்மை ஆகியவற்றைப் படம் பேசுகிறது. முதல் பாகத்தில் கதையோடு இயல்பாகப் பயணித்த தகவல்கள், இங்கே பல இடங்களில் பாடம் எடுப்பதுபோல மாறுவதுடன், தேவைக்கு அதிகமாக அச்சத்தை விதைக்கும் தொனியிலும் சொல்லப்படுகின்றன.

உலகையே அச்சுறுத்தும் உயிரியல் ஆயுதம், சர்வதேச சதி, RAW உளவாளிகள் என கதையின் ஆபத்து பெரிதாக இருந்தாலும், அதற்கான பரபரப்பா பதற்றமோ திரையில் உருவாகவில்லை. ஒரு ஸ்பை த்ரில்லருக்குத் தேவையான விறுவிறுப்பு, எதிர்பாராத ட்விஸ்ட்கள், ‘அடுத்து என்ன?’ என்ற ஆர்வம் பெரும்பாலான இடங்களில் மிஸ்ஸிங். நாயகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான தீர்வுகள் மிக எளிதாகக் கிடைத்துவிடுவதால், உண்மையாகவே அவர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்ற உணர்வும் ஏற்படுவதில்லை. வில்லனின் நோக்கத்துக்குச் சொல்லப்படும் காரணமும் பின்கதையும் அழுத்தமாக இல்லை.

Sardar 2 Review |சர்தார் 2 விமர்சனம்
Sardar 2 Review |சர்தார் 2 விமர்சனம்

முதல் பாதி ஓரளவு ஆர்வத்தைத் தக்கவைத்தாலும், இரண்டாம் பாதியில் படம் மொத்தமாக தடம்புரள்கிறது. நீண்ட பிளாஷ்பேக் காட்சிகள், Doku குறித்த விளக்கங்கள் மற்றும் வசனங்கள், அடுத்து அடுத்து நீளும் சண்டைக் காட்சிகள் எனப் படம் தொடர்ந்து நீண்டுகொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் படத்தில் குறைந்தது 20 நிமிடங்களையாவது எளிதாகக் குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில், முதல் பாகத்தைவிடப் பெரிய களம், பெரிய அச்சுறுத்தல், அதிக பிரமாண்டம் என அனைத்தும் இருந்தாலும், மிகவும் பலவீனமான திரைக்கதை இந்த சர்தாருக்கு நம்மை சலாம் போடவிடாமல் தடுக்கிறது.

Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி!

ஊரில் தன்னை பாய்மரப் படகு போட்டியில் சேர்க்க மறுக்கும் சட்டாப்புலியின் (சுஹாஸ்) மகனைக் கொல்ல முயற்சி செய்கிறார் மாரி (மிதுன் ஜெய் சங்கர்). ஆனால், இதில் மாரியின் குறி தவறிவிட, சட்டாப்புலியும் அவரின் ஆட... மேலும் பார்க்க

மண்டாடி: ``சூரி அண்ணனின் கடின உழைப்பு" - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து

ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார், வெற்றிமாறன் ஆகியோர் தயாரித்து, மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள படம், 'மண்டாடி'. இதில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். மகிமா நம்பியார் கதா... மேலும் பார்க்க

"நடிப்பைக் கைவிட நினைத்த என்னை அவர்தான் சமாதானப்படுத்தினார்" - நினைவுகளைப் பகிர்ந்த நடிகை சமந்தா

நடிகை சமந்தா ருத்ரபிரபு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவைத் திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டார். தற்போது அவர் இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இ... மேலும் பார்க்க

15 வருடங்களுக்கு பிறகு தீபாவளி ரிலீஸ்; 22 வருடங்களுக்கு பிறகு அமைந்த கூட்டணி- 'Scene' பட ஹைலைட்ஸ்!

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்திருக்கிறார்கள். படத்திற்கு 'சீன்' என டைட்டில் வைத்திருக்கிறார்கள். நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நட... மேலும் பார்க்க

Divya Spandana: "எனக்கு அப்படிப்பட்ட ஒரு நபர் இதுவரை அமையவில்லை!" - திருமணம் பற்றி திவ்யா ஸ்பந்தனா

'பொல்லாதவன்' திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக பிரபலமாகி, 'வாரணம் ஆயிரம்' உள்ளிட்ட படங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா.நடிகை ரம்யாசமீபத்திய பேட்டி ஒன... மேலும் பார்க்க

Yezhu Kadal Yezhu Malai: "சில நேரங்களில் அவர் முகம் இயேசுவைப் போலவே தெரியும்"- இயக்குநர் ராம் பேட்டி

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. சில ஆண்டுகளுக்கு முன்னரே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், ப... மேலும் பார்க்க