செய்திகள் :

Divya Spandana: "எனக்கு அப்படிப்பட்ட ஒரு நபர் இதுவரை அமையவில்லை!" - திருமணம் பற்றி திவ்யா ஸ்பந்தனா

post image

'பொல்லாதவன்' திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக பிரபலமாகி, 'வாரணம் ஆயிரம்' உள்ளிட்ட படங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா.

நடிகை ரம்யா

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது கருத்துகளை அவர் பகிர்ந்திருக்கிறார்.

திவ்யா ஸ்பந்தனா பேசுகையில், "திருமணம் செய்துகொள்வது என்பது ஒருவரின் வாழ்க்கையில் அவ்வளவு முக்கியமான விஷயமா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்வேன்.

திருமணம் என்பது நான் யார் என்பதைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்க முடியாது. திருமணம் ஆகாமலேயே நாம் சந்தோஷமாகத்தானே இருக்கிறோம். மகிழ்ச்சியாக இருப்பதுதானே எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியம்.

நமக்கு எது வேண்டுமோ அதை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். மனிதர்களாகிய நமக்குத் தொடர்ந்து மாற்றங்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

Divya Spandana
Divya Spandana

ஒருவேளை சிக்கலே அங்குதான் தொடங்குகிறது என நினைக்கிறேன். நீங்கள் நல்ல நண்பர்களாக இருந்து, ஒரே மாதிரியான எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டால், திருமணம் செய்துகொள்வது நல்ல யோசனையாகத் தோன்றும்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் மனிதர்கள் அனைவரும் நான் சொல்வதை நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால், எனக்கு அப்படிப்பட்ட ஒரு நபர் இதுவரை அமையவில்லை.

இப்போது நான் அதைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தவும் இல்லை. நான் எனது வேலையில் மிகவும் பரபரப்பாக இருக்கிறேன். ஏனெனில், ஒரு உறவைப் பேணுவதற்கு நேரமும் அர்ப்பணிப்பும் தேவை" எனக் கூறியிருக்கிறார்.

Yezhu Kadal Yezhu Malai: "சில நேரங்களில் அவர் முகம் இயேசுவைப் போலவே தெரியும்"- இயக்குநர் ராம் பேட்டி

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. சில ஆண்டுகளுக்கு முன்னரே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், ப... மேலும் பார்க்க

Sigma: "நான் முதலில் தியேட்டரில் பார்த்த படம்..." - ஜேசன் சஞ்சய் சொன்னதும் அதிர்ந்த அரங்கம்

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகியி... மேலும் பார்க்க

"என் குடும்பத்திற்கு நன்றி" - மேடையில் பேசிய ஜேசன் சஞ்சய்- 'TVK, TVK..' என ஆரவாரம் செய்த மாணவர்கள்

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகியி... மேலும் பார்க்க

எந்திரன் : தகர்க்கப்பட்ட எல்லைகள்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 22

`சினி'ஸ்கோப் 22எந்திரன்2000க்குப் பிறகு சுமார் 10 வருடங்கள், இந்தியாவின் பெரும்பகுதி சினிமா மார்க்கெட்டை தன்வசம் வைத்திருக்கும் இந்தி சினிமா, காதல் படங்களையும், சிறிய அளவு ஸ்பை ஆக்‌ஷன் படங்களையும் 20 ... மேலும் பார்க்க

என்ன விலை: ``என் நடிப்பை பார்த்து நிமிஷா சஜயன் எனக்கு முத்தம் கொடுத்தாங்க" - நடிகர் கருணாஸ்

சஜீவ் பழூர் இயக்கத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடித்த ‘என்ன விலை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கருணாஸ், ``25 வருஷத்துக்கு முன்னாடி, 200... மேலும் பார்க்க

Yuvan Shankar Raja: 'மீண்டும் அந்த OG கூட்டணிகள்' - எதிர்பார்ப்பைக் கூட்டம் யுவன் லைன் அப்!

முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்கள், புதுமுக இயக்குநர்களுடன் கூட்டணி என யுவன் அடுத்தடுத்து பரபரப்பான லைன்அப்களை வைத்திருக்கிறார். அப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராகிவருகின்றன. அந்த லைன்அப்... மேலும் பார்க்க