செய்திகள் :

Yuvan Shankar Raja: 'மீண்டும் அந்த OG கூட்டணிகள்' - எதிர்பார்ப்பைக் கூட்டம் யுவன் லைன் அப்!

post image

முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்கள், புதுமுக இயக்குநர்களுடன் கூட்டணி என யுவன் அடுத்தடுத்து பரபரப்பான லைன்அப்களை வைத்திருக்கிறார்.

அப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராகிவருகின்றன. அந்த லைன்அப்களை இங்கே பார்ப்போமா...

Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja

இயக்குநர் ராம் - யுவன் கூட்டணி எப்போதுமே ஸ்பெஷல்! இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கும் யுவனே இசையமைத்திருக்கிறார்.

நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாகிறது.

அதுபோல, யுவன் - செல்வராகவன் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் என்றும் எவர்கிரீன். செல்வராகவனின் '7ஜி ரெயின்போ காலனி 2' படத்திற்கும் யுவனே இசையமைக்கிறார்.

அத்தோடு, 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' போன்ற படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் 'ஜாலியா இருந்த ஒருத்தன்', ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'டெக்ஸ்லா' உள்ளீட்ட படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தில் ஜீவா, இவானா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 'டெக்ஸ்லா' படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

மேலும், இயக்குநராக அறிமுகமாகும் சுஜித் என். சுப்ரமணியம் இயக்கும் 'ராஜா'ஸ் பிளேலிஸ்ட்' படத்திற்கும் யுவன் இசையமைக்கிறார்.

இதில் இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெய்ன் நடிகராக அறிமுகமாகிறார். அதோடு, பிரபுதேவா - வடிவேலு கூட்டணியில் உருவாகிவரும் 'பேங் பேங்' படத்திற்கும் யுவன் இசையமைத்து வருகிறார்.

Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja

மேலும், விக்ரம் பிரபுவின் 'சிட்டி ஆஃப் கோல்டு', பாபி சிம்ஹாவின் 'நான் வயலன்ஸ்', மாதவனின் 'அதிர்ஷ்டசாலி', கெளதம் கார்த்திக்கின் பெயரிடப்படாத படம் எனப் பரபரப்பான படவரிசை யுவன் கையில் இருக்கிறது.

தமிழையும் தாண்டி, மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் இயக்கும் 'பரிபாடி', தெலுங்கில் 'சவுண்ட் என்ஜினியர்' படங்களுக்கும் யுவன் இசையமைப்பாளராகக் கமிட்டாகியிருக்கிறார். 'பரிபடி' படத்தின் மூலமாக மல்லுவுட்டிக்குள் என்ட்ரி தருகிறார் யுவன்.

எந்திரன் : தகர்க்கப்பட்ட எல்லைகள்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 22

`சினி'ஸ்கோப் 22எந்திரன்2000க்குப் பிறகு சுமார் 10 வருடங்கள், இந்தியாவின் பெரும்பகுதி சினிமா மார்க்கெட்டை தன்வசம் வைத்திருக்கும் இந்தி சினிமா, காதல் படங்களையும், சிறிய அளவு ஸ்பை ஆக்‌ஷன் படங்களையும் 20 ... மேலும் பார்க்க

என்ன விலை: ``என் நடிப்பை பார்த்து நிமிஷா சஜயன் எனக்கு முத்தம் கொடுத்தாங்க" - நடிகர் கருணாஸ்

சஜீவ் பழூர் இயக்கத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடித்த ‘என்ன விலை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கருணாஸ், ``25 வருஷத்துக்கு முன்னாடி, 200... மேலும் பார்க்க

Sardar 2: "நல்ல பெயர் வாங்க அண்ணன் சூர்யாவை மாட்டிவிடுவேன்" - கார்த்தி ஜாலி டாக்

கார்த்தி நடித்திருக்கும் 'சர்தார் 2' படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பி.எஸ். மித்ரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடித... மேலும் பார்க்க

Mani Ratnam: 'நீ இஞ்சி, நான் வெல்லம்!' - ஒளிப்பதிவாளரை மாற்றிய மணி ரத்னம் - 'இஞ்சி வெல்லம்' அப்டேட்!

'தக் லைஃப்' படத்திற்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தின் தலைப்பை இன்று அறிவித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொ... மேலும் பார்க்க

Ajith: ''பில்லா 2' படத்தை நான் இயக்காதது ஏன்?' - இயக்குநர் விஷ்ணுவரதன் விளக்கம்

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாரின் 'பில்லா', 'ஆரம்பம்' போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். 'பில்லா' படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகமான 'பில்லா 2' திரைப்படத்தையும் ... மேலும் பார்க்க

Mandaadi: ``10 வயது சிறுவனிடம் கேட்டால்கூட சொல்கிறான்; ஆரோக்கியமான மாற்றம்" - அரசியல் குறித்து சூரி

விடுதலை, கருடன், மாமன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய படம் 'மண்டாடி'. இப்படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். நாகையைச் சேர்ந்த மீனவர்களையும், ... மேலும் பார்க்க