செய்திகள் :

வரலாற்றில் முதல்முறை: `தேசிய திரைப்பட விருது விழா' - டெல்லியில் இருந்து குஜராத்திற்கு மாற்றம்?

post image

திரைப்படங்களுக்கான நாட்டின் மிக உயரிய விருது, `தேசிய திரைப்பட விருது'. 2024-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை 'ஆர்டிகிள் 370' கைப்பற்றியது. 'சந்து சாம்பியன்' படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யன் மற்றும் 'பிரமயுகம்' படத்தில் நடித்த மம்மூட்டி ஆகியோர் சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்துகொண்டனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

'ஆர்டிகிள் 370' படத்திற்காக யாமி கௌதம் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும், 'ஸ்டேச்சூ ஆஃப் யூனிட்டி – ஏக்தா கா பிரதீக்' என்ற ஆவணப்படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கான விருதை ஆனந்த் எல். ராய் வென்றார்.

இந்த விருது வழங்கும் விழா கடந்த 71 ஆண்டுகளாக டெல்லியில் நடந்து வந்தது. இந்தியக் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கி கௌரவிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டுக்கான 72-வது தேசிய திரைப்பட விழா, குஜராத் மாநிலத்தில் உள்ள 'ஒற்றுமையின் சிலை' அமைந்துள்ள ஏக்தா நகரில் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாத இறுதியில் குஜராத்திற்கு பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஏக்தா நகருக்குச் சென்று அங்கு நடைபெறும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் விருதுகளை வழங்குவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய கலைத்துறையின் மிக முக்கியமான இந்த விழா, நாட்டின் தலைநகரை விட்டு முதன்முறையாக குஜராத்தின் சுற்றுலாத் தலமான ஏக்தா நகரில் நடைபெறவுள்ளது திரைப்பட உலகினரிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.!

Bigg Boss வீட்டில் மேரி கோம்: அவரின் `knockout' குணம் குறித்து பகிர்ந்த பிரியங்கா சோப்ரா

இந்தியாவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், சல்மான் கான் தொகுத்து வழங்கும் Bigg Boss 20 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். செப்டம்பர் 6, 2026 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேர... மேலும் பார்க்க

`சட்டமன்றத்துக்கே போய் பேசினாலும்... முதல் மேடை, முதல் நம்பிக்கை கொடுத்தது விகடன் தான்!' - ராஜ்மோகன்

Myna wings சேனலுக்காக `Best Couple Celebrity Channel' விருதை நடிகை மைனாவும் அவர் கணவரும் பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு விருதை வழங்கிப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ``எனக்கு எப்போதும் விகடன்கிழமைதான். விய... மேலும் பார்க்க

``எல்லா சத்தியமும் பலிக்காது தலைவரே..!" - ரஜினிகாந்த் குறித்து விகடன் விருது விழாவில் கோபிநாத்

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக்கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், 'விகடன் டிஜிட்டல் விருதுகள் 2026' விழாவைக் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பிரமாண்டமாக நடத்துகிறது விகடன். '... மேலும் பார்க்க

"குஜிலிமஸ்து, சாக்‌ஷி... அதுல இருந்து வர்ற வார்த்தைங்க தான் இதெல்லாம்"- கலகலப்பூட்டிய லுங்கி பாய்ஸ்

ஐபிஎல் என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என்று மட்டுமே ஞாபகத்துக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, `ஹம்சா’, `துரந்தர்’ என எந்த வீடியோவை இவர்கள் இன்று வெளியிடுவார்கள் என்று ஆவலுடன் காத்... மேலும் பார்க்க

`தளபதி... GOAT... வாரணம் ஆயிரம்!' - `ஃபேவரைட்ஸ்' சொன்ன கயாடு லோஹர்

`டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்று, தனது ஒவ்வொரு படைப்பிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிவரும் கயாடு லோஹருக்கு, இந்த ஆண்டின் `Most Celebrated Star' விருதை ... மேலும் பார்க்க