செய்திகள் :

`தளபதி... GOAT... வாரணம் ஆயிரம்!' - `ஃபேவரைட்ஸ்' சொன்ன கயாடு லோஹர்

post image

`டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்று, தனது ஒவ்வொரு படைப்பிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிவரும் கயாடு லோஹருக்கு, இந்த ஆண்டின் `Most Celebrated Star' விருதை இயக்குநர் வெங்கட் பிரபு வழங்கினார்.

"ரொம்ப மகிழ்ச்சியாகவும் பணிவாகவும் உணர்கிறேன். எனக்கு ஆடியன்ஸிடமிருந்து கிடைத்த அன்புதான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்.

சமூக வலைதளங்களிலும், நேரிலும் என்னை அன்பாக ஆதரித்த அனைவருக்குமானது இந்த விருது.

என்னை வந்து சந்தித்து, எனக்கு நம்பிக்கை கொடுத்து, பாராட்டி, என்னுடைய படங்களைப் பார்த்து, நான் நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களையும் நேசித்த அனைவருக்குமானது இது.

அதனால் ஆடியன்ஸுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. அவர்கள் என்மீது உண்மையாகவே அன்பாகவும், கனிவாகவும் இருந்திருக்கிறார்கள்.

அதனால்தான் எனக்கு “மோஸ்ட் செலிப்ரேட்டடு ஸ்டார் இன் டிஜிட்டல்” என்ற விருது கிடைத்திருக்கிறது"என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய கயாடு லோஹார், தனக்கு பிடித்த ரஜினி படம் தளபதி, கமல் படம் மைக்கேல் மதன காமராஜன், விஜய் படம் GOAT, சூர்யா படம் வாரணம் ஆயிரம் என்றும் கூறினார்.

``Goat 2 Years - இதைவிட பெரிய Manifestation செய்திருக்கிறோம்..!" - இயக்குநர் வெங்கட் பிரபு

நடிகை கயாடு லோஹாருக்கு Most Celebrated Heroine' விருது வழங்கப்பட்டது.விருதை வழங்கிய இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், ```கோட்’ படம் ரிலீஸாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஒரே வாரத்தில்தான் `மங்கா... மேலும் பார்க்க

`அசிஸ்டன்ட் டைரக்டரை நம்பி எப்படி படம் எடுப்பதுன்னு சொன்னாங்க; அந்த நேரத்துல என் மனைவிதான்...'- ரியோ

கதைகளை வெறும் காட்சிகளாக இல்லாமல், பார்ப்பவர்களின் மனதில் நிற்கும் அனுபவங்களாக உருவாக்கும் சேனல், `Finally’. சுவாரஸ்யமான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள், நகைச்சுவை என ஒவ்வொரு படைப்பிலும் தனக்கென ஒர... மேலும் பார்க்க

`அனைத்துப் புத்தகங்களையும் தொட்டுக் கும்பிட்டு புனிதமாக்க விரும்பவில்லை'- ஆர்ஜே ஆனந்தி

இணையம் என்பது வெறும் கேளிக்கைகளுக்கு மட்டுமல்ல , அதை அறிவுத் தளத்தில் மாபெரும் திறவுகோலாகத் தன் டிஜிட்டல் பயணத்தின் மூலம் நிரூபித்து , 'தி புக் ஷோ' மூலம் டிஜிட்டல் தலைமுறைக்கு வாசிப்புப் பழக்கத்தைக் க... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2026: ``போன வருடம் நாமினேஷன்ல இருந்தேன்; இந்த வருடம் வாங்கிட்டேன்" - ஜெனி

நமது அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை இளம் தலைமுறையினர் ரசிக்கும்படியான Content-ஆக மாற்றி, சுவாரஸ்யமான கதைசொல்லல் மற்றும் பல்வேறுவிதமான கதாபாத்திரங்களை ஒற்றையாளாக தூள் கிளப்பியதன் மூலமாக பிரபலமான ச... மேலும் பார்க்க

“5 ஸ்டார் தரம் இல்லையா?” – இந்தியாவை விட்டு வெளியேறிய Miss Grand International: என்ன நடந்தது?

இந்தியாவில் நடைபெற இருந்த Miss Grand International 2026 போட்டி திடீரென தாய்லாந்துக்கு மாற்றப்பட்டிருப்பது சர்வதேச அழகிப் போட்டி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டி நடத்தும் நாட்டை மாற்... மேலும் பார்க்க