செய்திகள் :

நெல்லை: குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராததால் ஆத்திரம்; பஞ்சாயத்து தலைவர் அடித்துக் கொலை

post image

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட தாமரைக்குளம், தெற்குத் தெருவில் வசித்து வந்தவர், மகாராஜன் (65). அவர் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவராகச் செயல்பட்டு வந்தார்.

அவரது வீட்டின் அருகே இசக்கியப்பன் என்ற தொழிலாளி வசித்து வந்தார். அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்போது இசக்கியப்பன் வீட்டுக்கு மட்டும் குடிநீர் செல்லவில்லை.

கடந்த சில தினங்களாகவே அவரது வீட்டுக்கு மட்டும் தண்ணீர் செல்லாததால் அவர் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

கொலையான பஞ்சாயத்து தலைவர் மகாராஜன்
கொலையான பஞ்சாயத்து தலைவர் மகாராஜன்

இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் மகாராஜன் வீட்டுக்குச் சென்ற இசக்கியப்பன், தன் வீட்டுக்கு மட்டும் ஏன் குடிநீர் வருவதில்லை எனக் கேட்டுள்ளார். அதற்கு, குழாயில் ஏதாவது அடைப்பு இருக்க்கக்கூடும். அதை விரைவாகப் பார்த்து சரிசெய்யச் சொல்கிறேன் என்று பஞ்சாயத்து தலைவர் தெரிவித்திருக்கிறார்.

அதை ஏற்க மறுத்த இசக்கியப்பன், தனது வீட்டுக்கு உடனடியாக தண்ணீர் கிடைக்கச் செய்யவேண்டும். அதுவரை அந்த இடத்தில் இருந்து செல்லமாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்ததோடு, பஞ்சாயத்து தலைவர் மகாராஜனிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரம் அடைந்த இசக்கியப்பன், அங்கு வீடு கட்டுமான பணிக்காக வைத்திருந்த செங்கலை எடுத்து மகாராஜன் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த பஞ்சாயத்து தலைவர் மகாராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்குப் போராடினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பரப்பாடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமபைல்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீஸார், உயிரிழந்த மகாராஜன் உடலை உடற்கூறாய்வு செய்வதற்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மரித்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிநீர்ப் பிரச்னைக்காக பஞ்சாயத்து தலைவரைக் கொலை செய்த இசக்கியப்பன் தலைமறைவானார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொலை நடந்த சில மணி நேரத்திலேயே கொலையாளி இசக்கியப்பனைக் கைது செய்தனர்.

"கடந்த சில தினங்களாக தனது வீட்டுக்கு மட்டும் குடிநீர் வராததால் ஆத்திரமடைந்து, பஞ்சாயத்து தலைவர் வீட்டுக்குச் சென்று வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அங்கு கிடந்த செங்கலை எடுத்து பஞ்சாயத்து தலைவரின் தலையில் தாக்கியிருக்கிறார்" என்கிறார்கள் போலீஸார்.

அமெரிக்காவில் 6 லட்சம் டாலர் மோசடி; எப்.பி.ஐயால் தேடப்படும் முக்கியக் குற்றவாளி பஞ்சாப்பில் கைது

பஞ்சாப்பைச் சேர்ந்த அதிகமானோர் கனடா மற்றும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அவர்கள் அந்த நாடுகளில் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு இந்தியாவிற்கு வந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அது போன்று அமெரிக்காவில்... மேலும் பார்க்க

போலி வங்கிக் கணக்குகளை வைத்து 15 நாளில் ரூ.9 கோடி மோசடி; கல்லூரி மாணவர்களைக் குறிவைக்கும் கும்பல்

சைபர் மோசடி கும்பல் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் மோசடி செய்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் மோசடி மூலம் பெறும் பணத்தை வங்கிக் கணக்கில் பெற அப்பாவிகளின் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர். அப்பாவி மக்க... மேலும் பார்க்க

மது அருந்திய வடமாநிலத்தவரை விசாரித்த போலீஸ்; பதிலுக்குத் தாக்கினார்களா இளைஞர்கள்? என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் கணேசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கந்தசாமி மேற்பார்வையில் அரசு மதுபானக் கடை அருகே ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தா... மேலும் பார்க்க

”மாணவர்களைக் குறி வைத்து போதை மாத்திரை விற்பனை”- 6,000 மாத்திரைகள் பறிமுதல்; ரெளடி உட்பட 4 பேர் கைது

தஞ்சாவூரில், போதை மாத்திரை விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, போதை தடுப்புப் பிரிவு போலீசார் கீழவாசல் பகுதியில் சோதன... மேலும் பார்க்க

திருச்சி: கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; வீட்டின் முன் குவிந்த திமுகவினர்

தி.மு.க முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கடந்த தி.மு.க ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையைக் கவனித்து வந்தார். அந்தத் துறையில் பணி நியமனம் செய்ய லஞ்சம் பெற்றதாக அவர் மீது அமலாக்கத்து... மேலும் பார்க்க

நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதை; வட்டி கட்டாததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; 4 பேர் கைது

பெங்களூருவைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண் ரேஷ்மா என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். கடந்த 6 மாதங்களாக சகுந்தலா சரியாக வட்டி கொடுக்கவில்லை. அதோடு ரேஷ்மாவிற்குத் தெரிந்த நஷ்ரத் என்பவரிடம் ... மேலும் பார்க்க