செய்திகள் :

நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதை; வட்டி கட்டாததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; 4 பேர் கைது

post image

பெங்களூருவைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண் ரேஷ்மா என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். கடந்த 6 மாதங்களாக சகுந்தலா சரியாக வட்டி கொடுக்கவில்லை.

அதோடு ரேஷ்மாவிற்குத் தெரிந்த நஷ்ரத் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். அதனைத் திரும்பக் கொடுக்கும் விதமாக ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் ரூபாய் சகுந்தலா கொடுத்து வந்தார். ஆனால் அந்தப் பணத்தையும் சமீப காலமாக நிதி நெருக்கடியால் சகுந்தலாவால் திரும்பக் கொடுக்க முடியவில்லை.

இதையடுத்து நஷ்ரத்தின் போன் நம்பரை சகுந்தலா பிளாக் செய்துவிட்டார். அதோடு வீட்டையும் காலி செய்துவிட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட்டார். எப்படியோ நஷ்ரத், சகுந்தலாவிற்கு போன் செய்து வேலை மற்றும் பணம் கொடுப்பதாகத் தெரிவித்தார். அதனை நம்பி நஷ்ரத் வீட்டிற்கு சகுந்தலா சென்றார்.

அங்கு இருந்த சகுந்தலாவை ரேஷ்மாவும், அவரது கணவர் சுஹைலும் சேர்ந்து கண்டபடி திட்டி அடித்து உதைத்தனர். மேலும் சகுந்தலாவை ஆட்டோரிக்ஷாவில் ஏற்றிக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

அவருடன் ரேஷ்மாவும் நஷ்ரத்தும் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். அதோடு சுஹைலும் இன்னும் இருவர் அவர்களுடன் சென்றனர். அவர்கள் அந்த சகுந்தலாவை பெங்களூரு புறநகரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து ஆடைகளை அவிழ்த்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் சகுந்த்லாவை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்துக்கொண்டனர். வட்டியோடு சேர்த்து 11 லட்சத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை எனில் இந்த வீடியோவை ஆன்லைனில் வெளியிடுவோம் என்று சகுந்தலாவை மிரட்டினர். அதோடு சகுந்தலாவை ஒரு வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்று வெற்று பேப்பரிலும் கையெழுத்து வாங்கிக்கொண்டனர்.

இது தொடர்பாக சகுந்தலாவின் தாயார் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து செயல்பட்டு சகுந்தலாவை மீட்டனர். அதோடு அவரை அடைத்து வைத்து அடித்து உதைத்த ரேஷ்மா உட்பட 4 பேரைக் கைது செய்தனர்.

தூத்துக்குடி: "பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை" - மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

நெல்லை மாவட்டம், கீழ நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகக்கனி. இவர்களுக்குக் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆறுமுகப்பாண்டி மீது நெல்லை தாலுகா, ... மேலும் பார்க்க

திருப்பதி: '2 கிலோ தங்கம்; 6 கிலோ வெள்ளி' - லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தேவஸ்தான அதிகாரி கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருப்பதி தேவஸ்தான அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமலை திருப்பதிதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தில்... மேலும் பார்க்க

சமைக்க நேரமில்லை எனக் கூறிய மனைவி; அடித்துகொன்ற கணவன்; நாக்பூரில் கொடூரம்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் யாமினி.(38). இவரது கணவர் கிருஷ்ணா லால்(41). கிருஷ்ணா நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். வீட்டில் சாப்பிட நினைத்தார். ஆனால் அவரது மனைவி சமையல் செய்த... மேலும் பார்க்க

பெரம்பலூர்: கமிஷன் கேட்ட வீடியோ வைரல்; பி.டி.ஓ-வை சஸ்பெண்ட் செய்த ஆட்சியர்; என்ன நடந்தது?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலராக சித்தார்த் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், அரசுப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களிடம் பணி முடிந்து பில் தொகை பெறுவதற்க... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள்; சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு

திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பெற்றோர் இருவரும் இல்லாத நிலையில் அவருடைய உறவினர் அரவணைப்பில் அந்தச் சிறுமி வளர்ந்து வருகிறார். அந்... மேலும் பார்க்க

நெல்லை: குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராததால் ஆத்திரம்; பஞ்சாயத்து தலைவர் அடித்துக் கொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட தாமரைக்குளம், தெற்குத் தெருவில் வசித்து வந்தவர், மகாராஜன் (65). அவர் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவராகச் செயல்பட்டு வந்தார். அவரது வீட... மேலும் பார்க்க