செய்திகள் :

"எந்தத் தப்பும் செய்யவில்லை; நீதிமன்றம் மூலம் நிரபராதி என்று நிருபிப்போம்" - கே.என்.நேரு விளக்கம்

post image

திருச்சியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, "டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை செய்ய வந்தார்கள். திருச்சி, சென்னையில் உள்ள என்னுடைய வீட்டிலும் என்னுடைய சகோதரர் வீட்டிலும் சோதனை செய்தார்கள். அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

வழக்கமாகப் பயன்படுத்தும் ஒரு கோப்பையும் என்னுடைய சகோதரரின் வரவு செலவு கணக்கு தொடர்பான விவரங்களையும் எடுத்துக் கொண்டார்கள். 8 மணி முதல் 3 மணி வரை சோதனை நடைபெற்றது. ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டு அது தொடர்பாக எழுதி கையெழுத்து வாங்கி உள்ளார்கள்.

நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினோம். அவர்கள் கூறுவது போல் டெண்டர் தொடர்பாக நான் யாரிடமும் பேசியது கிடையாது. வழக்கு தொடர்பாக அடுத்து என்ன கூறுகிறார்களோ அதைக் கேட்டு சட்டப்படி சந்திப்போம். லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே ஒரு வழக்கு என்மீது பதிவு செய்துள்ளார்கள். அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

அது குறித்து அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்று நாங்கள் நிரபராதி என்பதை நிரூபிப்போம். சட்டசபையில் அரசை நோக்கி நான் கேள்வி எழுப்புவதால் என்னை மிரட்டுவதற்காகக்கூட இது போன்ற சோதனை அவர்கள் செய்யலாம்.

kn neru

அரசை அடிக்கடி நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் என செய்தியாளர்கள் என்னிடம் சொல்வது எனக்கு பெருமையாக உள்ளது. இந்தச் சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான். சட்டசபையில் ஒன்றிய அரசு குறித்து அமைச்சர் வன்னியரசு பேசிய கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியது, ஒன்றிய அரசும், மாநில அரசும் ஒற்றுமையாக இருப்பதைக் காட்டுகிறது.

மத்திய அரசிடம் எந்தக் கெட்ட பெயரும் ஆகி விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு செயல்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே, முதல்வராக இருந்தவர்கள் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது இரண்டு முறை என் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தார்கள். தற்பொழுது, மூன்றாவது முறை சோதனை நடைபெற்றுள்ளது.

காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் என்னிடம் பேசினார். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தினார்" என்றார்.

`விகடனின் தனிச்சிறப்பே கார்ட்டூன்-தான்; ஒரு காலத்தில் என்ன நடந்ததென்பது..!' - ஜே.சி.டி.பிரபாகர்

Best Automobile Channel விருதை Motowagon சேனலின் ரெஜினுக்கு வழங்க மேடையேறிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், ``தங்கள் நலனை காட்டிலும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி வெளிப்படையான ஆட்சி நடத்த வேண்... மேலும் பார்க்க

சட்டசபை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய கண்ணாடியில் AI கேமராவா? - அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்

தமிழ்நாட்டு அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் ஜெ.முகமது பர்வேஸ்.இவர், கடந்த சில நாட்களாக தமிழக சட்ட... மேலும் பார்க்க

பட்டா வழங்குவதாக மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி லஞ்சம்? - வனத்துறை அலுவலர்கள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதிகளான ஜமுனாமரத்தூர், மேல்மட்டு, நாடனூர் உள்ளிட்ட கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வாழும் மலைவாழ் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே சார்ந்திருக்கின்றனர். இந்த நிலைய... மேலும் பார்க்க

"அதானி சிமெண்ட் ஆலையால எங்க கிராமத்துக்கே மூச்சு திணறுது" - தவிக்கும் கோவை கிராம மக்கள்

கோவை மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் சுற்றுவட்டாரப் பகுதிகள் புழுதி மண்டலமாக இருக்கிறது. சிமெண்ட் துகள்கள்... மேலும் பார்க்க

"முதலாளிகளே லஞ்சம் தருகின்றனர்; நடவடிக்கை எடுப்பீர்களா?" - அமைச்சர் கீர்த்தனாவிடம் CPIM கேள்வி

லஞ்சம் வாங்குவது குறித்து நேற்று இரவு (செப்டம்பர் 4) அமைச்சர் கீர்த்தனா, "லஞ்சம் வாங்கினாலும் சரி, தவறு செய்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி.இது தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை நடவடிக்... மேலும் பார்க்க

'வெடி சத்தம் மட்டுமே; புகையும் இல்லை; தீயும் இல்லை' - ஈரானின் Kharg தீவை மீண்டும் தாக்கிய அமெரிக்கா?

ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி இன்னும் நான்கு நாள்கள் கூட முழுமையாக முடியவில்லை. அதற்குள் ஈரானின் முக்கிய எரிசக்தி கட்டமைப்பான கார்க் தீவுக்கு அருகே தாக்குதலை ... மேலும் பார்க்க