செய்திகள் :

"குஜிலிமஸ்து, சாக்‌ஷி... அதுல இருந்து வர்ற வார்த்தைங்க தான் இதெல்லாம்"- கலகலப்பூட்டிய லுங்கி பாய்ஸ்

post image

ஐபிஎல் என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என்று மட்டுமே ஞாபகத்துக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, `ஹம்சா’, `துரந்தர்’ என எந்த வீடியோவை இவர்கள் இன்று வெளியிடுவார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கவைத்திருக்கிறது `லுங்கி பாய்ஸ்’ அணியினரின் வீடியோ.

நண்பர்களுக்குள் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் போன்ற எளிமையான விஷயங்களைத் தங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியில் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் இவர்கள்.

இயல்பான நடிப்பு, நையாண்டி, வித்தியாசமான கதை சொல்லல் எனத் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்துவரும் இவர்களுக்கு `Most Celebrated Channel of the Year’ விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதை நடிகர் அருண் விஜய் வழங்கினார்.

தொடர்ந்து பேசிய `லுங்கி பாய்ஸ்’ அணியினர், ``முதல்ல எல்லாருக்கும் வணக்கம். அடுத்து, அருண் விஜய் சாருக்கும் ரொம்ப நன்றி.

நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு வீடியோ போட்டேன். உடனே அவர் பணம் போட்டு விட்டுட்டார்.

நாங்க சாதாரணமா பேசுறதைத்தான் கன்டென்ட்டா மாத்துறோம். அதுல இருந்து வர்றதுதான் இந்த குஜிலிமஸ்து, சாக்‌ஷி எல்லாம்.

ஐபிஎல் பார்க்காதவங்ககூட, ‘உங்க வீடியோவைப் பார்த்து பார்க்க ஆரம்பிச்சிட்டோம்’னு போன் பண்ணிச் சொல்றாங்க.

ஐபிஎல் முடிஞ்சதுக்கப்புறம் ஃபுட்பால் பத்தின வீடியோ போடலாம்னு நினைச்சோம். ஆனா, அதைப் பத்தி எங்களுக்கு ஒண்ணுமே தெரியலை. ஆனாலும் வீடியோ போட்டோம்" என்று பேசியிருந்தனர்.

`தளபதி... GOAT... வாரணம் ஆயிரம்!' - `ஃபேவரைட்ஸ்' சொன்ன கயாடு லோஹர்

`டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்று, தனது ஒவ்வொரு படைப்பிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிவரும் கயாடு லோஹருக்கு, இந்த ஆண்டின் `Most Celebrated Star' விருதை ... மேலும் பார்க்க

``Goat 2 Years - இதைவிட பெரிய Manifestation செய்திருக்கிறோம்..!" - இயக்குநர் வெங்கட் பிரபு

நடிகை கயாடு லோஹாருக்கு Most Celebrated Heroine' விருது வழங்கப்பட்டது.விருதை வழங்கிய இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், ```கோட்’ படம் ரிலீஸாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஒரே வாரத்தில்தான் `மங்கா... மேலும் பார்க்க

`அசிஸ்டன்ட் டைரக்டரை நம்பி எப்படி படம் எடுப்பதுன்னு சொன்னாங்க; அந்த நேரத்துல என் மனைவிதான்...'- ரியோ

கதைகளை வெறும் காட்சிகளாக இல்லாமல், பார்ப்பவர்களின் மனதில் நிற்கும் அனுபவங்களாக உருவாக்கும் சேனல், `Finally’. சுவாரஸ்யமான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள், நகைச்சுவை என ஒவ்வொரு படைப்பிலும் தனக்கென ஒர... மேலும் பார்க்க

`அனைத்துப் புத்தகங்களையும் தொட்டுக் கும்பிட்டு புனிதமாக்க விரும்பவில்லை'- ஆர்ஜே ஆனந்தி

இணையம் என்பது வெறும் கேளிக்கைகளுக்கு மட்டுமல்ல , அதை அறிவுத் தளத்தில் மாபெரும் திறவுகோலாகத் தன் டிஜிட்டல் பயணத்தின் மூலம் நிரூபித்து , 'தி புக் ஷோ' மூலம் டிஜிட்டல் தலைமுறைக்கு வாசிப்புப் பழக்கத்தைக் க... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2026: ``போன வருடம் நாமினேஷன்ல இருந்தேன்; இந்த வருடம் வாங்கிட்டேன்" - ஜெனி

நமது அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை இளம் தலைமுறையினர் ரசிக்கும்படியான Content-ஆக மாற்றி, சுவாரஸ்யமான கதைசொல்லல் மற்றும் பல்வேறுவிதமான கதாபாத்திரங்களை ஒற்றையாளாக தூள் கிளப்பியதன் மூலமாக பிரபலமான ச... மேலும் பார்க்க