செய்திகள் :

அமெரிக்காவில் 6 லட்சம் டாலர் மோசடி; எப்.பி.ஐயால் தேடப்படும் முக்கியக் குற்றவாளி பஞ்சாப்பில் கைது

post image

பஞ்சாப்பைச் சேர்ந்த அதிகமானோர் கனடா மற்றும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அவர்கள் அந்த நாடுகளில் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு இந்தியாவிற்கு வந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அது போன்று அமெரிக்காவில் கம்பெனி நடத்தி வந்த மஞ்ஜித் சிங் பேடி அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தின் பெயரில் மோசடி செய்துவிட்டு இந்தியாவிற்குத் தப்பி வந்திருந்தார். 2024 மற்றும் 2025க்கு இடையில் தான் நடத்தி வந்த கம்பெனி மூலம் சுமார் $600,000 டாலர் அளவுக்கு மோசடி செய்திருந்தார்.

அமெரிக்காவில் துணை ஊட்டச்சத்து உதவித் திட்டத்தில் இந்த மோசடியைச் செய்து இருந்தார். இதனால் அவர் மிகவும் தேடப்படும் குற்றவாளி என்று எப்.பி.ஐ அறிவித்தது. அவரது பாஸ்போர்ட் மற்றும் பிற பொருட்களை ஏஜென்சியிடம் ஒப்படைக்குமாறு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

ஆனாலும் அவற்றை ஒப்படைக்காமல் கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் கனடா வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பேடி குறித்து தகவல் கொடுத்தால் 1.50 லட்சம் டாலர் சன்மானம் கொடுக்கப்படும் என்று எப்.பி.ஐ அறிவித்து இருந்தது. கடந்த மாதம் பேடி மீது ஜலந்தர் போலீஸ் நிலையத்தில் மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரைத் தேட ஆரம்பித்தனர்.

கடந்த சில நாட்களாக பேடியைத் தேடி வந்தனர். அவரைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்புக் குழுவை நியமித்தனர். பேடி தனது வாகனத்தில் சென்று கொண்டிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவரது வாகனத்தை இடைமறித்து அவரை ஜலந்தரில் கைது செய்தனர். தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஒருங்கிணைந்த முயற்சி மூலம் பேடி கைது செய்யப்பட்டதாக ஜலந்தர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பேடி வாஷிங்டனில் உள்ள டகோமாவில் ஆசிய மளிகைக் கடை என்ற சிறிய மளிகைக் கடையை நடத்தி வந்தார். துணை ஊட்டச்சத்து உதவித் திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு அவர்களின் மின்னணு நன்மை பரிமாற்ற அட்டைகள் மூலம் அவர் உணவை விற்றதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், உணவை விற்பதற்குப் பதிலாக, பேடி அவர்களின் அட்டைகளை ஸ்வைப் செய்து பணத்தைக் கொடுத்தார், மேலும் வருமானத்தில் பாதியைத் தனக்கு வைத்துக்கொண்டார். மோசடிக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், அவரைக் கைது செய்யாமல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

நெல்லை: குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராததால் ஆத்திரம்; பஞ்சாயத்து தலைவர் அடித்துக் கொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட தாமரைக்குளம், தெற்குத் தெருவில் வசித்து வந்தவர், மகாராஜன் (65). அவர் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவராகச் செயல்பட்டு வந்தார். அவரது வீட... மேலும் பார்க்க

போலி வங்கிக் கணக்குகளை வைத்து 15 நாளில் ரூ.9 கோடி மோசடி; கல்லூரி மாணவர்களைக் குறிவைக்கும் கும்பல்

சைபர் மோசடி கும்பல் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் மோசடி செய்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் மோசடி மூலம் பெறும் பணத்தை வங்கிக் கணக்கில் பெற அப்பாவிகளின் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர். அப்பாவி மக்க... மேலும் பார்க்க

மது அருந்திய வடமாநிலத்தவரை விசாரித்த போலீஸ்; பதிலுக்குத் தாக்கினார்களா இளைஞர்கள்? என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் கணேசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கந்தசாமி மேற்பார்வையில் அரசு மதுபானக் கடை அருகே ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தா... மேலும் பார்க்க

”மாணவர்களைக் குறி வைத்து போதை மாத்திரை விற்பனை”- 6,000 மாத்திரைகள் பறிமுதல்; ரெளடி உட்பட 4 பேர் கைது

தஞ்சாவூரில், போதை மாத்திரை விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, போதை தடுப்புப் பிரிவு போலீசார் கீழவாசல் பகுதியில் சோதன... மேலும் பார்க்க

திருச்சி: கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; வீட்டின் முன் குவிந்த திமுகவினர்

தி.மு.க முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கடந்த தி.மு.க ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையைக் கவனித்து வந்தார். அந்தத் துறையில் பணி நியமனம் செய்ய லஞ்சம் பெற்றதாக அவர் மீது அமலாக்கத்து... மேலும் பார்க்க

நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதை; வட்டி கட்டாததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; 4 பேர் கைது

பெங்களூருவைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண் ரேஷ்மா என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். கடந்த 6 மாதங்களாக சகுந்தலா சரியாக வட்டி கொடுக்கவில்லை. அதோடு ரேஷ்மாவிற்குத் தெரிந்த நஷ்ரத் என்பவரிடம் ... மேலும் பார்க்க