செய்திகள் :

”மாணவர்களைக் குறி வைத்து போதை மாத்திரை விற்பனை”- 6,000 மாத்திரைகள் பறிமுதல்; ரெளடி உட்பட 4 பேர் கைது

post image

தஞ்சாவூரில், போதை மாத்திரை விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, போதை தடுப்புப் பிரிவு போலீசார் கீழவாசல் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, கீழவாசல், வண்ணாரத்துறையைச் சேர்ந்த பிரபல ரெளவுடி பிரகாஷ்(26) (எ) மாடு பிரகாஷிடம் அதிகளவில் போதை மாத்திரைகள் இருந்துள்ளன. இதையடுத்து அவரைப் பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.

போதை மாத்திரை

விசாரணையில் அவரது நண்பர்களான கீழவாசல், சின்னையபிள்ளை தெருவைச் சேர்ந்த முகமது அப்பாஸ்(25), சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த சுபாஷ்(24), மற்றும் அன்னப்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் சம்பத்(23) ஆகியோரிடம், 6,000 டாபென்டாடால் என்கிற போதை மாத்திரைக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, பிரகாஷ், அப்பாஸ், சுபாஷ், சஞ்சய் சம்பத் ஆகிய நான்கு பேரையும் கிழக்கு போலீஸில் ஒப்படைத்தனர்.

மேலும் நான்கு பேர் மீதும் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6,000 போதை மாத்திரைகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த போதை மாத்திரையின் மதிப்பு சுமார் ரூ.60,000 என்கிறார்கள்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், முகமது அப்பாஸ், நாக்பூரில் உள்ள சாய் டிரேடிங் என்ற கம்பெனி ஒன்றில் இருந்து மாத்திரைகளை, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து, அந்த மாத்திரைகளை பார்சல் மூலம் பெற்று, நண்பர்களுடன் இணைந்து கல்லுாரி, பள்ளி மாணவர்களைக் குறித்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

இது குறித்து போதை பொருள் தடுப்பு போலீசார் கூறியதாவது: தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(29), இவரது நண்பரான திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(24) இருவரும் சேர்ந்து போதை மாத்திரைகளை நாக்பூர் நிறுவனத்தில் வாங்கியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்
பறிமுதல் செய்யப்பட்ட கார்

இதில், ரஞ்சித்குமார் திருவையாறு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கிக்கொண்டு, போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்றுள்ளார். இதற்காக சதீஷ்குமாரையும் வரவழைத்து இருந்தார். இந்நிலையில், கடந்த 30ம் தேதி இருவரிடமும் இருந்து ஆயிரம் மாத்திரைகளைப் பறிமுதல் செய்ததுடன் அவர்களையும் கைது செய்து மரூர் போலீஸில் ஒப்படைத்தோம்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், முகமது அப்பாஸ், பிரகாஷ் ஆகியோர் போதை மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

திருச்சி: கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; வீட்டின் முன் குவிந்த திமுகவினர்

தி.மு.க முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கடந்த தி.மு.க ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையைக் கவனித்து வந்தார். அந்தத் துறையில் பணி நியமனம் செய்ய லஞ்சம் பெற்றதாக அவர் மீது அமலாக்கத்து... மேலும் பார்க்க

நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதை; வட்டி கட்டாததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; 4 பேர் கைது

பெங்களூருவைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண் ரேஷ்மா என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். கடந்த 6 மாதங்களாக சகுந்தலா சரியாக வட்டி கொடுக்கவில்லை. அதோடு ரேஷ்மாவிற்குத் தெரிந்த நஷ்ரத் என்பவரிடம் ... மேலும் பார்க்க

வெளிநாட்டு பெண்ணுக்கு நிர்வாண பரிகார பூஜை - சென்னை ஜோதிடர் சிக்கிய பின்னணி!

கனடா நாட்டு குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான 37 வயது பெண், சென்னையில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதற்காக அவர், சென்னைக்கு அடிக்கடி வந்து சென்ற நிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கும் ... மேலும் பார்க்க

ஆற்காடு பள்ளி மாணவியைக் கர்ப்பமாக்கி கொன்ற வழக்கு - கொடூர இளைஞனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள கே.வேளூர் கிராமத்தைச் சேர்ந்தவன் புருஷோத்தமன் என்கிற ரஞ்சித் ( 30). இவன் கடந்த 2018-ம் ஆண்டு, ஒழலை கிராமத்தில் வசித்துவந்த பதினோராம் வகுப்பு மாணவியிடம் பழகி வ... மேலும் பார்க்க

திருச்சி: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பள்ளியை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய தலைமை ஆசிரியர்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த உயர் நிலைப் பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் கல்வி பயின்று வர... மேலும் பார்க்க

லால்குடி: செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது நிகழ்ந்த சோகம்; இரு இளைஞர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வடுகர்பேட்டை, அன்னை நகர் பகுதியில் உள்ள தேவனாதன் என்பவரது வீட்டில் உள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதற்காக, சகானா என்ற தனியார் கழிவு அகற்று... மேலும் பார்க்க