செய்திகள் :

திருச்சி: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பள்ளியை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய தலைமை ஆசிரியர்

post image

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது.

இந்த உயர் நிலைப் பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ​இப்பள்ளியில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியராகவும், பங்குத் தந்தையாகவும் ஜெயராஜ் என்பவர் பணியில் சேர்ந்துள்ளார்.

பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, பள்ளி மாணவிகளிடம் அவர் பாலியல் ரீதியாக எல்லை மீறி நடக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரைத் தனது அறைக்குத் தனியாக வரவழைத்த தலைமை ஆசிரியர் ஜெயராஜ், அம்மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தனது வீட்டிற்குச் சென்று நடந்த கொடுமைகள் குறித்து தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாகத் தங்கள் பகுதி பொதுமக்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

trichy

சம்பவத்தைப் கேள்விப்பட்டு கொதித்தெழுந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்திரண்டு வந்து, புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளியை அதிரடியாக முற்றுகையிட்டனர். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ​

பொதுமக்கள் திரண்டு வருவதை ஜன்னல் வழியாகக் கண்ட தலைமை ஆசிரியர் ஜெயராஜ், மக்கள் தன்மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பயத்தில் பள்ளியின் பின்புற வழியாக உடனடியாகத் தப்பி ஓடி தலைமறைவானார். முற்றுகைப் போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் காவல் நிலைய போலீஸார் போராட்டம் நடத்திய மக்களிடம் பங்குத்தந்தையைக் கைது செய்வதாக உத்தரவாதம் கொடுத்ததோடு, தப்பியோடிய ஜெயராஜைத் தேடி வருகின்றனர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

லால்குடி: செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது நிகழ்ந்த சோகம்; இரு இளைஞர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வடுகர்பேட்டை, அன்னை நகர் பகுதியில் உள்ள தேவனாதன் என்பவரது வீட்டில் உள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதற்காக, சகானா என்ற தனியார் கழிவு அகற்று... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: மரகத முருகன் சிலை திருட்டு - மர்ம கும்பல் கைவரிசை காட்டியது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலையின் மீது பால தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரகதத்தால் ஆன மூலவர் முருக்ன் சிலை இருந்தது. சம்பவத்தன்று இரவு கோயிலின் பூட்... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; மார்பிங் போட்டோஸ் - இரண்டு குழந்தைகளின் தந்தை கைதான பின்னணி!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில் வேலை செய்து வந்தார். இவருடன் ரஞ்சித்குமார் என்பவரும் வேலை செய்து வந்தார். ரஞ்சித்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சரின் மகன்கள் மோதல்: தம்பியை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்ற அண்ணன்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி முன்னாள் அதிமுக அமைச்சரான மறைந்த வெங்கடாசலத்தின் மகன்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தம்பியை அண்ணனே கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபர... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 3 இளைஞர்களுக்குக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை!

ராணிப்பேட்டையில், பாலாறு - பொன்னை ஆறு சங்கமிக்கும் படுகையையொட்டி, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது `நவ்லாக்’ அரசுப் பண்ணை (State Horticulture Farm - Navlock). நவாப் ஆட்சிக்காலத்தில், ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; நகைகளைத் திருப்பிக் கேட்ட பெண்; கொடூரமாகக் கொன்ற காவலர்

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா முடிவைத்தானேந்தல் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை ... மேலும் பார்க்க