செய்திகள் :

Ajith: ``முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி" - வாழ்த்து சொல்லி நெகிழ்ந்த நடிகர் அஜித் குமார்

post image

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் இன்று, 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஒன்று மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம். இது தொடர்பாக முதல்வர் விஜய் தனது அறிவிப்பில், ``தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, புதிய "மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்" உருவாக்கப்படும். மேலும், ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, மற்றும் ஃபார்முலா 4 உள்ளிட்ட பன்னாட்டுப் பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் இங்கு அமைக்கப்படும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

விஜய், அஜித்

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்திருக்கிறார். இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ``மோட்டார் விளையாட்டு உட்பட அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் தேவையான முக்கியத்துவத்தை அளித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்-க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

தற்போது மோட்டார் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருக்கும் நான், விண்வெளி வீரர் திரு. நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பொன்மொழியைச் சற்று மாற்றி அமைத்துக் கூற விரும்புகிறேன்: 'தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் இந்த ஒரு சிறு அடி, இந்திய மோட்டார் விளையாட்டுத் துறைக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்!' முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்-யின் அனைத்து முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`ரூ.58 கோடி வரி கட்டியும் மோசமான சாலைகள்' - ஸ்டார்ட்அப் நிறுவன தலைவர் கடும் அதிருப்தி!

மும்பையில் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தி வருபவர் டாக்டர் அனிருதா மால்பானி. இவர் சமீபத்தில் டெல்லி அருகில் உள்ள குருகிராம் சென்று இருந்தார். அங்கு மழை காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக சேறும், குப்பைகளு... மேலும் பார்க்க

ஈரோடு: கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்! | Photo Album

கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்ஈரோட்டில் கிருஷ்ணர் ராதை... மேலும் பார்க்க

"என் மனைவியை நான் முதன்முதலில் இங்குதான் சந்தித்தேன்"- ஐ.ஐ.டி நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை

ஐஐடி கரக்பூர் தனது 75-வது ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இந்தக் கல்வி நிறுவனத்தில் பயின்ற கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை தனது வாழ்த்து செய்தியை ஐஐடி கரக்பூருக்கு அனுப்பி... மேலும் பார்க்க

`200 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை' - ராஜ மரியாதையுடன் ரதத்தில் அழைத்து வந்த குடும்பத்தினர்

மகாராஷ்டிராவில் பெண் குழந்தை பிறந்ததை ஒரு குடும்பம் விழாவாக எடுத்து கொண்டாடி இருக்கிறது. மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி என்ற நகரை சேர்ந்த தஹிபாலே குடும்பத்தினர், தங்கள் குடும்பத்தில் சு... மேலும் பார்க்க

அமெரிக்க போர்க் கப்பல்களை தாக்க அதிவேக ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்! - உதவும் ரஷ்யா?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தின. அதன் பிறகு இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்டது. அமெரிக்கா மட்டும் அடிக்கடி போர்நிறுத்தங்களை அறிவிப்ப... மேலும் பார்க்க

விவாகரத்து, மன அழுத்தம்: மம்தா பானர்ஜியின் சகோதரர் மகள் எடுத்த விபரீத முடிவு!

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரான நிஹார் முகர்ஜியின் மகளான பிரிஷ்டி முகர்ஜி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 28. மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவ... மேலும் பார்க்க