செய்திகள் :

`ரூ.58 கோடி வரி கட்டியும் மோசமான சாலைகள்' - ஸ்டார்ட்அப் நிறுவன தலைவர் கடும் அதிருப்தி!

post image

மும்பையில் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தி வருபவர் டாக்டர் அனிருதா மால்பானி. இவர் சமீபத்தில் டெல்லி அருகில் உள்ள குருகிராம் சென்று இருந்தார். அங்கு மழை காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக சேறும், குப்பைகளும் நிரம்பி காணப்பட்டன. அதில் பயணம் செய்த அனுபவம் குறித்து அனிருதா மால்பானி தனது எக்ஸ்தள பக்கத்தில், நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகம் குறித்த கவலை தெரிவித்து பதிவிட்டிருந்தார். அதோடு பருவமழைக்குப் பிறகு குருகிராமின் செக்டார் 23-ல் உள்ள முக்கியச் சந்தைப் பகுதியில் கடுமையான நீர் தேக்கம், சேறு மற்றும் சிதறிக் கிடக்கும் குப்பைகள் ஆகியவற்றைக் காட்டும் புகைப்படத்தை பகிர்ந்து, `இதற்குத்தான் நமது வரிப்பணம் செலவிடப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் நான் ரூ.58 கோடி வரி கட்டி இருக்கிறேன். வரி செலுத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், இந்தச் செலவுக்கான உரிய பலன் எனக்குக் கிடைக்காததுதான் வருத்தமளிக்கிறது' என்று குறிப்பிட்டு இருந்தார்.

அனிருதா

டாக்டராக இருந்து தொழில்முனைவோராக மாறிய அனிருதா, வருமான வரியாக தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.58 கோடி எடுக்கப்பட்டு இருக்கும் தனது வங்கிக் கணக்கு விவர அறிக்கையையும் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவை 7,99,800-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் 2,000 பேர் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒரு பயனாளி பதிவிட்ட கமென்ட்டில், ``தவறாக நினைக்காதீர்கள், ஆனால் நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால், உடனடியாக மொனாக்கோ அல்லது ஹாங்காங்கிற்குச் சென்று, அங்கிருந்தபடியே இந்தியர்களின் வருங்கால சந்ததியினருக்கு என்னால் முடிந்த வழிகளில் உதவியிருப்பேன். இதற்கெனச் செலவிடப்படும் பணம் அனைத்தும் அதிகாரிகளின் பைகளுக்குத்தான் செல்கிறது. அவர்கள் இதனால் கொழுத்துப்போய், மேலும் ஆணவம் கொண்டவர்களாக மாறுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் அனிருதா மால்பானி இதற்கு அளித்துள்ள பதிலில், "நான் இந்த பணத்தை இந்தியாவில் ஈட்டியுள்ளேன். எனவே இதை அரசாங்கத்திற்கு வரியாகச் செலுத்துவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என்னிடமிருந்து வசூலிக்கப்படும் பணத்திற்கு ஏற்ற பயனை அவர்கள் அளிக்க வேண்டும். இது அதிகப்படியான கோரிக்கையா?" என்று கேட்டுள்ளார்.

மில்லினியம் நகரம் என்று அழைக்கப்படும் குருகிராமில் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள நூற்றுக்கணக்கான கம்பெனிகள் இருக்கின்றன. ஆனாலும் கடுமையான நகராட்சி வசதி குறைபாடுகள் இருப்பதாக அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொள்கிறது.

ஈரோடு: கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்! | Photo Album

கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்ஈரோட்டில் கிருஷ்ணர் ராதை... மேலும் பார்க்க

"என் மனைவியை நான் முதன்முதலில் இங்குதான் சந்தித்தேன்"- ஐ.ஐ.டி நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை

ஐஐடி கரக்பூர் தனது 75-வது ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இந்தக் கல்வி நிறுவனத்தில் பயின்ற கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை தனது வாழ்த்து செய்தியை ஐஐடி கரக்பூருக்கு அனுப்பி... மேலும் பார்க்க

`200 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை' - ராஜ மரியாதையுடன் ரதத்தில் அழைத்து வந்த குடும்பத்தினர்

மகாராஷ்டிராவில் பெண் குழந்தை பிறந்ததை ஒரு குடும்பம் விழாவாக எடுத்து கொண்டாடி இருக்கிறது. மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி என்ற நகரை சேர்ந்த தஹிபாலே குடும்பத்தினர், தங்கள் குடும்பத்தில் சு... மேலும் பார்க்க

அமெரிக்க போர்க் கப்பல்களை தாக்க அதிவேக ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்! - உதவும் ரஷ்யா?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தின. அதன் பிறகு இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்டது. அமெரிக்கா மட்டும் அடிக்கடி போர்நிறுத்தங்களை அறிவிப்ப... மேலும் பார்க்க

விவாகரத்து, மன அழுத்தம்: மம்தா பானர்ஜியின் சகோதரர் மகள் எடுத்த விபரீத முடிவு!

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரான நிஹார் முகர்ஜியின் மகளான பிரிஷ்டி முகர்ஜி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 28. மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவ... மேலும் பார்க்க

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: சுப்ரீம் கோர்ட் அதிரடி!

டெல்லியில் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை காக்ரோச் ஜனதா கட்சி சார்பாக நீட் முறைகேடு தொடர்பாகப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் காரணமாக மத்தியக் கல்வி அமைச்சராக இருந்த தர்மே... மேலும் பார்க்க