TN Assembly : முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி; அவையில் அனல் பறந்த ...
"என் மனைவியை நான் முதன்முதலில் இங்குதான் சந்தித்தேன்"- ஐ.ஐ.டி நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை
ஐஐடி கரக்பூர் தனது 75-வது ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இந்தக் கல்வி நிறுவனத்தில் பயின்ற கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை தனது வாழ்த்து செய்தியை ஐஐடி கரக்பூருக்கு அனுப்பி இருக்கிறார்.
அதில், "ஹாரீஸ் உணவகத்தில் சாப்பிட்ட உணவுகள், இல்லு திருவிழா, B308 அறையில் இரவெல்லாம் படித்தது, நண்பர்களுடனான நட்பு மற்றும் பேராசிரியர்களின் வழிகாட்டுதல் என ஐ.ஐ.டி கரக்பூரின் பல நினைவுகள் இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளன.

இந்த வளாகத்தில்தான் நான் எனது மனைவி அஞ்சலியைச் சந்தித்தேன். இங்குதான் முதன்முதலில் புரோகிராமிங் செய்யக் கற்றுக்கொண்டேன் மற்றும் கணினியைப் பயன்படுத்தும் முதல் வாய்ப்பையும் பெற்றேன்.
இந்தப் பயணம் என் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானித்து, கூகுள் நிறுவனத்தை நோக்கி என்னை அழைத்துச் சென்றது. என்னால் முடிந்தவரை பலருக்குத் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்க உதவியிருக்கிறது.

இந்தத் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் கல்வி என்பது உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம். இளைய தலைமுறையினர் தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள்" என்று தனது நினைவுகளை மகிழ்ச்சியாகப் பகிர்ந்திருக்கிறார் சுந்தர் பிச்சை.



















