செய்திகள் :

'முதலில் ஓடியது யார்?' - முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி காரசார சண்டை!

post image

சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காரசாரமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசுகையில், ``எந்த கேள்வி கேட்டாலும் சம்பந்தப்பட்ட அமைச்சர் பேசாமல் இன்னொரு அமைச்சர் பதில் சொல்கிறார். டிவி சீரியலில் வருவதுபோல 'இவருக்கு பதில் இவர்' பாணியில் பதில் சொல்கிறார்கள்.

முதல்வரின் பதிலுரைக்கு இன்னும் 3 நாள்கள் நேரமிருக்கிறது. அவர் நன்றாக முன் தயாரிப்பு செய்து வரட்டும். ரோல் கேமரா ஆக்சன் மோடில் சம்பந்தமே இல்லாமல் குட்டிக்கதைகள் சொல்லாமல் மக்களுடைய கேள்விகளுக்கு முதல்வர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்." என முதல்வரை கடுமையாக விமர்சித்தார்.

இந்த விவாதம் நீண்டுகொண்டே சென்றபோது ஒரு கட்டத்தில் எழுந்த முதல்வர் விஜய், ``உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தை திங்கள்கிழமை கொடுக்கிறேன். நான் இங்கே இல்லையென்றாலும் உங்களின் கேள்விகள் எனக்கு வந்துவிடும். நான் பேசும்போது யாரும் எழுந்து ஓடிவிடக் கூடாது" என்றார். சொல்லிவிட்டு அவையை விட்டு வெளியேறினார்.

CM Vijay
CM Vijay

உடனே திமுக உறுப்பினர்கள் அமளி செய்ய... எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ``கடைசியாக யார் ஓடினார் என்பது எல்லாருக்குமே தெரியும். இதை சொல்லிவிட்டு அவர் ஓடிவிட்டார்" என்றார்.

ஈரான் பிரதமரைச் சந்தித்த மோடி: `ஈரானுக்கு உதவினால் பொருளாதார தடை' - அமெரிக்கா எச்சரிக்கை

சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஷ்கெக் நகருக்கு 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டிற்காகச் சென்றிருந்தார்.மோடி - ஈரான் பிரதமர் சந்திப்புஅங்கே ரஷ்ய அத... மேலும் பார்க்க

"விஜய் கன்னியாகுமரி போனாரே... ஒரு தொகுதியாச்சு ஜெயிச்சீங்களா?" - உதயநிதி vs ஆனந்த்

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கும் தவெக அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்திருந்தது.அமைச்சர் ஆனந்த்... மேலும் பார்க்க

`வானத்தைத் தொட்ட புதிய வரலாறு' - இந்தியாவின் முதல் Non-Medical பெண் Air Vice Marshal சக்தி சர்மா!

ஒரு பதவியை அடைவது சாதனை. ஆனால், அந்தப் பதவியை அடையும் பாதையிலேயே பல “முதல்”களை உருவாக்குவது… அதைவிட பெரிய சாதனை!அப்படியொரு வரலாற்றுப் பயணத்தைப் படைத்திருக்கிறார், Air Vice Marshal சக்தி சர்மா. இந்திய ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் குறைந்த GST வசூல் - இதற்கு மக்களின் நுகர்வு தான் முக்கிய காரணமா?

மத்திய அரசு ஜி.எஸ்.டி வசூல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையில் மாநில ஜி.எஸ்.டி வசூல் குறித்துத் தரவுகள் வெளியாகி உள்ளன.அதன்படி, 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மற்றும் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ... மேலும் பார்க்க

'குட்டிக்கதை சொல்லாமல் நேராக பதில் சொல்லுங்கள்!' - முதல்வரை நேரடியாக சாடிய உதயநிதி

சட்டமன்றத்தில் முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியரின் கவனக்குறைவால் பறிபோன பெண்ணின் அரசு வேலை; மனித உரிமைகள் ஆணையத்தால் கிடைத்த நீதி!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் எருமப்பெட்டியைச் சேர்ந்தவர் கே.ஜெயஸ்மிதா. திருவனந்தபுரத்தில் தனியாக வசித்து வந்த இவர், அரசுத் துறையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். 2023 ஜூலை 30 அன்று இர... மேலும் பார்க்க