செய்திகள் :

'கறிக்கடையில் கூட இவ்வளவு வெட்டுக்குத்து நடப்பதில்லை!' - அவையில் சீறிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி

post image

சட்டமன்றத்தில் முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

உதயநிதி
உதயநிதி

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ``காவல்துறையின் கொள்கை விளக்கப் புத்தகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். கொலை, கலவரம்,வழிப்பறி, பாலியல் குற்றங்கள் எல்லாம் குறைந்திருப்பதாக தரவுகளோடு கூறியிருக்கிறார்கள். எங்களுடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்ததாக நேர்மையாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

இந்த அரசு அமைந்து 116 நாட்கள் ஆகிறது. இத்தனை நாட்களில் இந்த அரசு புதிதாக கொண்டு வந்த திட்டங்களை விட பெயர் மாற்ற அறிவிப்புகள்தான் அதிகம் வருகிறது. இல்லையெனில், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்கிறீர்கள். பரந்தூர் விமான நிலையம், மாமல்லன் கால்வாய் என இதற்கு உதாரணமாக நிறைய விஷயங்களை குறிப்பிடலாம்.

விவசாயக்கடன் முழு தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர், பெண்களுக்கு எல்லா பேருந்துகளிலும் இலவசம் என்றீர்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் பாதிப் பாதியாக நிறைவேற்ற அறிவிப்பு மட்டுமே வெளியிட்டிருக்கிறீர்கள். இதைதயெல்லாம் பார்க்கையில் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் போல தாய்மாமன் காது குத்தும் திட்டம் என அறிவித்திருக்கலாம்.

உதயநிதி
உதயநிதி

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் நாங்கள் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தோம். உதாரணமாக வேலூரில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் 32 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். உங்களின் 116 நாள் ஆட்சி பெண்களுக்கு பெரும் துயரை கொடுத்துவிட்டது.

கோவை மாவட்டத்தில் மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் 9 கொலைகள் நடந்திருக்கிறது. இந்த ஆட்சி வந்த பிறகு 10 ஆணவக்கொலைகள் நடந்திருக்கிறது. கறிக்கடையில் கூட இவ்வளவு வெட்டுக்குத்து நடப்பதில்லை.' என்றார்.

TN Assembly : முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி; அவையில் அனல் பறந்த விவாதம் | Full Story

சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காரசாரமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டன... மேலும் பார்க்க

ஈரான் பிரதமரைச் சந்தித்த மோடி: `ஈரானுக்கு உதவினால் பொருளாதார தடை' - அமெரிக்கா எச்சரிக்கை

சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஷ்கெக் நகருக்கு 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டிற்காகச் சென்றிருந்தார்.மோடி - ஈரான் பிரதமர் சந்திப்புஅங்கே ரஷ்ய அத... மேலும் பார்க்க

"விஜய் கன்னியாகுமரி போனாரே... ஒரு தொகுதியாச்சு ஜெயிச்சீங்களா?" - உதயநிதி vs ஆனந்த்

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கும் தவெக அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்திருந்தது.அமைச்சர் ஆனந்த்... மேலும் பார்க்க

'முதலில் ஓடியது யார்?' - முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி காரசார சண்டை!

சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காரசாரமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டன... மேலும் பார்க்க

`வானத்தைத் தொட்ட புதிய வரலாறு' - இந்தியாவின் முதல் Non-Medical பெண் Air Vice Marshal சக்தி சர்மா!

ஒரு பதவியை அடைவது சாதனை. ஆனால், அந்தப் பதவியை அடையும் பாதையிலேயே பல “முதல்”களை உருவாக்குவது… அதைவிட பெரிய சாதனை!அப்படியொரு வரலாற்றுப் பயணத்தைப் படைத்திருக்கிறார், Air Vice Marshal சக்தி சர்மா. இந்திய ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் குறைந்த GST வசூல் - இதற்கு மக்களின் நுகர்வு தான் முக்கிய காரணமா?

மத்திய அரசு ஜி.எஸ்.டி வசூல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையில் மாநில ஜி.எஸ்.டி வசூல் குறித்துத் தரவுகள் வெளியாகி உள்ளன.அதன்படி, 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மற்றும் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ... மேலும் பார்க்க