செய்திகள் :

"விஜய் கன்னியாகுமரி போனாரே... ஒரு தொகுதியாச்சு ஜெயிச்சீங்களா?" - உதயநிதி vs ஆனந்த்

post image

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கும் தவெக அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்திருந்தது.

அமைச்சர் ஆனந்த்
அமைச்சர் ஆனந்த்

அமைச்சர் ஆனந்த் பேசுகையில், "முதல்வருக்கு எதை எப்போது பேச வேண்டுமெனத் தெரியும். நீங்கள் இரண்டரை வருடம் எங்களைப் பேசியதால்தான் நாங்கள் இன்று ஆட்சியில் இருக்கிறோம். திமுக ஆட்சியில் தவெகவுக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுத்தீர்கள் என எனக்குதான் தெரியும்.

தலைவரின் கூட்டத்துக்கு காலையில் அனுமதி கொடுத்துவிட்டு மதியம் அனுமதி இல்லை என்பார்கள். எல்லா பக்கமும் பேச அனுமதி கொடுத்திருந்தால் 234 தொகுதிகளிலும் வென்றிருப்போம்" என்றார்.

உடனே பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, "தேர்தலுக்கு முன்பு நாங்கள் அவர்களைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஒரு கூட்டத்தில் கூட இவர்களை விமர்சனம் செய்யவில்லை. நாங்கள் பேசியதாக ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். எல்லா கட்சிகளைப் போலவும் இவர்களின் கூட்டத்துக்கும் சட்டப்பூர்வமாக அனுமதி கொடுத்தோம்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையம்தான் அனுமதி குறித்த முடிவை எடுக்கும். அவர்களின் தலைவர் சில ஊர்களுக்குச் செல்லத்தான் செய்தார். கன்னியாகுமரிக்கெல்லாம் சென்றார். அங்கே தவெக வெல்லவே இல்லை. இது மெஜாரிட்டி இல்லாத அரசுதான். எங்களின் தயவால்தான் இந்த ஆட்சியே நடக்கிறது" என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ், "எங்களைப் பிரசாரம் செய்யவிடக் கூடாது என்பதற்காக SOP போட்டார்கள். 5000 பேருக்கு மேல் இருந்தால் 30 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்க சொன்னார்கள். காவல்துறையை தவெகவுக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள். எங்களைப் பற்றி பேசாததால்தான் இங்கே இருக்கிறீர்கள். பேசியிருந்தால் வீட்டில் இருந்திருப்பீர்கள்" என்றார்.

TN Assembly : முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி; அவையில் அனல் பறந்த விவாதம் | Full Story

சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காரசாரமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டன... மேலும் பார்க்க

ஈரான் பிரதமரைச் சந்தித்த மோடி: `ஈரானுக்கு உதவினால் பொருளாதார தடை' - அமெரிக்கா எச்சரிக்கை

சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஷ்கெக் நகருக்கு 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டிற்காகச் சென்றிருந்தார்.மோடி - ஈரான் பிரதமர் சந்திப்புஅங்கே ரஷ்ய அத... மேலும் பார்க்க

'முதலில் ஓடியது யார்?' - முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி காரசார சண்டை!

சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காரசாரமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டன... மேலும் பார்க்க

`வானத்தைத் தொட்ட புதிய வரலாறு' - இந்தியாவின் முதல் Non-Medical பெண் Air Vice Marshal சக்தி சர்மா!

ஒரு பதவியை அடைவது சாதனை. ஆனால், அந்தப் பதவியை அடையும் பாதையிலேயே பல “முதல்”களை உருவாக்குவது… அதைவிட பெரிய சாதனை!அப்படியொரு வரலாற்றுப் பயணத்தைப் படைத்திருக்கிறார், Air Vice Marshal சக்தி சர்மா. இந்திய ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் குறைந்த GST வசூல் - இதற்கு மக்களின் நுகர்வு தான் முக்கிய காரணமா?

மத்திய அரசு ஜி.எஸ்.டி வசூல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையில் மாநில ஜி.எஸ்.டி வசூல் குறித்துத் தரவுகள் வெளியாகி உள்ளன.அதன்படி, 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மற்றும் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ... மேலும் பார்க்க

'குட்டிக்கதை சொல்லாமல் நேராக பதில் சொல்லுங்கள்!' - முதல்வரை நேரடியாக சாடிய உதயநிதி

சட்டமன்றத்தில் முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.... மேலும் பார்க்க