செய்திகள் :

Kavin: ``எங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைத்திருக்கிறோம்..!" - அறிவித்த நடிகர் கவின்

post image

'லிஃப்ட்', 'டாடா' போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டவர் நடிகர் கவின்.

கவின் - நயன்தாரா நடிப்பில் ஆகஸ்ட் 14-ம் தேதி 'Hi' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, 'பேர் சொல்லும் பிள்ளை' படம், அறிமுக இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் பிஸியாக இருக்கிறார்.

இதற்கிடையில் நடிகர் கவினுக்கும் அவருடைய காதலி, மோனிஷாவுக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது. குடும்பத்தினர், நெருங்கிய திரைத்துறை வட்டாரம் என இவர்களின் திருமணம் எளிமையாகவே நடந்திருந்தது.

நடிகர் கவின்
நடிகர் கவின்

இந்தத் தம்பதிக்கு ஜூலை 30-ம் தேதி, ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். இந்தத் தகவலை கவின் அப்போதே தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், தற்போது தன் குழந்தைகளுக்கு பெயர் வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``இறைவனுக்கு நன்றி. எங்கள் குழந்தைகளுக்கு தியோலினா கவின் (Theolina Kavin) என்றும், தியான் லியோ கவின் (Theon Leo Kavin) என்றும் பெயர் சூட்டியுள்ளோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``'நீங்க பார்க்க வித்தியாசமா இருக்கீங்க' என்றார்"- ரஜினியுடன் செல்ஃபி எடுத்தது குறித்து கயாடு லோஹர்

நடிகை கயாடு லோஹர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ரஜினியுடன் எடுத்த புகைப்படம் தொடர்பாக கேள்வி ... மேலும் பார்க்க

"தயவுசெய்து படத்தைப் பார்த்து ஒவ்வொருவரும் உங்கள் சொந்தக் கருத்தை..!"- டாக்ஸிக் குறித்து சரத்குமார்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 26 ஆம் தேதி வெளியான இந்தப் படம்... மேலும் பார்க்க

''மெய்யழகன்' பிரேம் குமாருடனான படம் எப்போது ரிலீஸ்?' - பகத் பாசில் கொடுத்த அப்டேட்

'பிரேமலு' பட இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மலையாளப் படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'. நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தை பக... மேலும் பார்க்க

Vijay: "முதல்வரிடம், 'நீங்களே நல்லா பார்த்துக்கோங்க’ என்றேன்” - என்ன சொல்கிறார் நடிகர் கார்த்தி?

சர்தார் 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படக்குழு தீவிர புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை பரவை பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

Hi Movie: "நம்ம படம் ஓடுமா? ஓடாதா? என்ற பயம் இருந்துச்சு, ஏன்னா.!" - கவின்

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், கவின், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘Hi’. இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று (செப்.2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேச... மேலும் பார்க்க

Hi Movie: "நன்றி தெரிவிக்கும் விழாவுக்கு நயன்தாரா ஏன் வரவில்லை.!"- கிண்டலடித்த ராதிகா

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நயன்தாரா, கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘Hi’. இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று (செப்.2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேச... மேலும் பார்க்க