செய்திகள் :

செங்கல்பட்டு: மரகத முருகன் சிலை திருட்டு - மர்ம கும்பல் கைவரிசை காட்டியது எப்படி?

post image

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலையின் மீது பால தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரகதத்தால் ஆன மூலவர் முருக்ன் சிலை இருந்தது. சம்பவத்தன்று இரவு கோயிலின் பூட்டை உடைத்து, முருகன் சிலையை திருடிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. வழக்கம்போல கோயிலின் நடையை திறக்க வந்தவர்கள், மரகதத்தால் ஆன முருகன் சிலை திருட்டு போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து சித்தாமூர் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சிலை திருட்டு எப்படி நடந்தது என விசாரித்தனர். மேலும் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது தங்களின் முகம் சி.சி.டி.வியில் பதிவாகாமலிருக்க மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் கேமராவில் கறுப்பு நிற பெயின்ட்டை அடித்தது தெரியவந்தது. அதனால் இந்தத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று தெரியவில்லை.

மரகத முருகன் சிலை திருட்டு

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``இந்தக் கோயிலில் 2 அடி உயர மரகத மூலவர் சிலை இருந்தது. அதன்மதிப்பு பல கோடி ரூபாயாகும். அதனால், மூலவர் சிலையை கருவறையில் இரும்பு பெட்டகத்தில் மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருந்தனர். சிலை வைக்கப்பட்டிருந்த கருவறையிலும் அதைச் சுற்றியிலும் சி.சி.டி.வி-க்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும் கோயிலில் செக்யூரிட்டிகளும் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். சம்பவத்தன்று மலையின் கீழ் பகுதியில்தான் இரவில் செக்யூரிட்டி இருந்திருக்கிறார். அதனால், பின்பக்க மலை வழியாக ஏறி திருடர்கள் கோயிலுக்குள் வந்திருக்கிறார்கள். இந்தக் கோயிலின் அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் தெரிந்திருந்த மர்ம கும்பல், முதலில் அலாரம் அடிக்காமலிருக்க அதன் இணைப்புகளை துண்டித்திருக்கிறார்கள். பிறகு சி.சி.டி.வி கேமராக்களில் கறுப்பு நிற பெயின்ட்டை அடித்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் கைவரிசை காட்டியிருக்கிறார்கள். மரகத முருகன் சிலை திருட்டு சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் பகுதியில் உள்ள சி.சி.டி.வி-க்களை ஆய்வு செய்து வருகிறோம். மரகத சிலை குறித்து நன்கு தெரிந்த சிலைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களே இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதனால் சிலைக் கடத்தல் வழக்குகளில் கைதானவர்களின் விவரங்களையும் சேகரித்து வருகிறோம்'' என்றனர்.

சென்னை: லவ் டார்ச்சர்; மார்பிங் போட்டோஸ் - இரண்டு குழந்தைகளின் தந்தை கைதான பின்னணி!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில் வேலை செய்து வந்தார். இவருடன் ரஞ்சித்குமார் என்பவரும் வேலை செய்து வந்தார். ரஞ்சித்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சரின் மகன்கள் மோதல்: தம்பியை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்ற அண்ணன்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி முன்னாள் அதிமுக அமைச்சரான மறைந்த வெங்கடாசலத்தின் மகன்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தம்பியை அண்ணனே கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபர... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 3 இளைஞர்களுக்குக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை!

ராணிப்பேட்டையில், பாலாறு - பொன்னை ஆறு சங்கமிக்கும் படுகையையொட்டி, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது `நவ்லாக்’ அரசுப் பண்ணை (State Horticulture Farm - Navlock). நவாப் ஆட்சிக்காலத்தில், ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; நகைகளைத் திருப்பிக் கேட்ட பெண்; கொடூரமாகக் கொன்ற காவலர்

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா முடிவைத்தானேந்தல் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பள்ளி மாணவனை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பை தாக்கி சித்ரவதை; 9 மாணவர்கள் போக்சோவில் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவரின் பெற்றோர், தன் மகனுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக விளாத்... மேலும் பார்க்க

`உன் சகோதரியை கர்ப்பமாக்கினாயா?' குழந்தை பெற்று இறந்த பெண்ணின் சகோதரனிடம் டாக்டர் சர்ச்சை கேள்வி

மத்தியபிரதேசம் ரேவா என்ற இடத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு இருந்த கல்பனா மிஸ்ரா என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை... மேலும் பார்க்க