செய்திகள் :

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; நகைகளைத் திருப்பிக் கேட்ட பெண்; கொடூரமாகக் கொன்ற காவலர்

post image

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா முடிவைத்தானேந்தல் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.

பிரியாவின் உடன்பிறந்த சகோதரி சுப்புலட்சுமி. கணவர் இறந்ததால் பிரியாவுடன் வீட்டோடு வசித்து வந்தார். இந்த நிலையில், சுப்புலட்சுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

முத்துக்குமார் தட்டார்மடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். பணத்தேவைக்காக முத்துலட்சுமியிடம் இருந்து 20 சவரன் தங்க நகைகளை வாங்கி முத்துக்குமார் அடகு வைத்ததாகக் கூறப்படுகிறது.

இவர்களின் திருமணம் மீறிய உறவு விவகாரம் பிரியாவுக்குத் தெரியவரவே, அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இந்த நிலையில், தன் அக்காவிடமிருந்து பெற்ற 20 சவரன் தங்கநகைகளை திருப்பித் தருமாறு முத்துக்குமாரிடம் பிரியா கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. நகையைத் திருப்பித் தராவிட்டால் போலீஸில் புகார் அளிக்கப் போவதாக பிரியா கூறினாராம். இதனால், ஆத்திரமடைந்த முத்துக்குமார், பிரியா தனது ஜெராக்ஸ் கடையைப் பூட்டிக் கொண்டிருந்தபோது அங்கு சென்று முத்துக்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த முத்துக்குமார் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் பிரியாவின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

புதுக்கோட்டை காவல் நிலையம்

இதில் முகம் சிதைந்து பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரைக் கைது செய்தனர். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த முத்துக்குமார் ஏற்கனவே மாமனார் உள்ளிட்ட இருவரை அருவாளால் வெட்டிய வழக்கில் புதுக்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே வந்த நிலையில்தான் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி: பள்ளி மாணவனை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பை தாக்கி சித்ரவதை; 9 மாணவர்கள் போக்சோவில் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவரின் பெற்றோர், தன் மகனுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக விளாத்... மேலும் பார்க்க

`உன் சகோதரியை கர்ப்பமாக்கினாயா?' குழந்தை பெற்று இறந்த பெண்ணின் சகோதரனிடம் டாக்டர் சர்ச்சை கேள்வி

மத்தியபிரதேசம் ரேவா என்ற இடத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு இருந்த கல்பனா மிஸ்ரா என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை... மேலும் பார்க்க

திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து உடைத்து மர்ம நபர்கள்; பாஜகவைக் கண்டிக்கும் அபிஷேக் பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு அந்தக் கட்சி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், எம்.பி.க்கள், எம... மேலும் பார்க்க

சேலம்: 4 பவுன் நகைக்காக 8 துண்டுகளாக பெண்ணை வெட்டி மூட்டையில் கட்டிய‌ கொடூரம்; அதிர்ச்சிப் பின்னணி

சேலம் மாவட்டம் அரிசிபாளையம் குணபாலன் ராமசாமி தெருவில் வசித்து வரும் கோயில் பூசாரி ரமேஷ் என்பவர், கடந்த ஆகஸ்ட் 31 அன்று தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். வீட்டின் ... மேலும் பார்க்க

"ரூ.1 லட்சம் முதலீட்டிக்கு ரூ.8000 மாத வட்டி"- ரூ.300 கோடியைச் சுருட்டிய மதுரை செண்பக பாண்டியன் கைது

சேலம் மாவட்டம் ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் விஜயராகவன்- ராகினி தம்பதி மற்றும் மதுரையைச் சேர்ந்த செண்பக பாண்டியன் ஆகிய மூவரும் சேர்ந்து பிராஃபிட் எவர் டிரேடர்ஸ் என்கிற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை 2024... மேலும் பார்க்க

டைம்ஸ் சதுக்கம்: பேங்க் ஆஃப் அமெரிக்கா பெண் அதிகாரி கொலை - நொடியில் முடிந்த இளம் தாயின் வாழ்கை

ஐந்து மாதக் குழந்தை, அன்புக் கணவன், பெருமைக்குரிய வங்கிப் பணி... மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்துகொண்டிருந்த ஒரு இளம் தாயின் வாழ்க்கை, ஒரு நொடியில் சிதைந்துபோன கொடூரம் அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வ... மேலும் பார்க்க