செய்திகள் :

தெலங்கானா காங்கிரஸ்: உட்கட்சிப் பூசல்; அமைச்சரவையிலிருந்து சுரேகா வெளியேற்றம்; என்ன நடக்கிறது?

post image

தெலங்கானா காங்கிரஸ் மூத்த தலைவர் கொண்டா சுரேகா. இவர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில், வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், சுரேகா-வின் மகள் கொண்டா சுஷ்மிதா, 2028 சட்டமன்றத் தேர்தலில் வாரங்கள் மாவட்ட பார்கல் தொகுதியில் போட்டியிட விருப்பதாகச் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்

இதற்கிடையில் பார்க்கல் தொகுதிக்குச் சென்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி, தற்போதைய எம்.எல்.ஏ ரெவூரி பிரகாஷ் ரெட்டிக்கு தன் ஆதரவை அறிவித்தார். இதனால் கொண்டா சுஷ்மிதா - ரேவந்த் ரெட்டி ஆதரவாளர்களுக்கு மத்தியில் கருத்து மோதல் நடைபெற்றது.

இதற்கிடையில், கொண்டா சுஷ்மிதா, ``நான் பார்க்கல் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். தேர்தலுக்கான ஏன் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? ரெவூரி பிரகாஷ் ரெட்டியை இப்போதே ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் போட்டியிடச் சொல்லுங்கள்.

பார்கல் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக நான்தான் வெற்றிபெறுவேன். ரேவந்த் ரெட்டி அகந்தைப் பிடித்தவர். எனக்கான சீட்டைத் தீர்மானிக்க அவர் யார்? தெலங்கானா காங்கிரஸ் தலைமை அடிமட்டத் தொண்டர்களைப் புறக்கணிக்கிறது. கட்சிக்குள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தைப் பலவீனப்படுத்துகிறது" எனக் காட்டமாக விமர்சித்தார்.

இதற்கிடையில், தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி, அமைச்சர் சுரேகா-விடம் `மகள் கருத்து குறித்து விளக்கமளிக்க வேண்டும்' என நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கு அமைச்சர் சுரேகா, ``ஒருவரின் கருத்துக்கு அவர் குடும்பத்தைச் சார்ந்த மற்றவரைப் பொறுப்பேற்கச் சொல்வதோ, குடும்ப உறவு என்பதற்காக மட்டும் மற்றவரிடம் விளக்கம் கேட்பதோ தவறானது" என விளக்கமளித்தார்.

மேலும், இதனால் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்த, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தெலங்கானா பொறுப்பாளர் மீனாட்சி நடராஜன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

ஆனால், `அவரது விளக்கம் திருப்திகரமாக இல்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது.

அமைச்சர் சுரேகா 3-ம் தேதி, ``என் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு யாரோ ஒருவரின் தூண்டுதலே காரணம். மேலும், முதலமைச்சர் குறித்து தனது மகள் கூறிய கருத்துக்களில் எனக்குப் பங்கில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில், ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையிலிருந்து சுரேகா வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுரேகா, ``ஒரு மரண தண்டனை கைதியைக் தூக்கிலிடுவதற்கு முன் கூட, அவரது கடைசி ஆசை என்னவென்று கேட்பார்கள். அதுபோல, என்னை நீக்குவதற்கு முன்பு, 'நீங்கள் ராஜினாமா செய்யுங்கள், இல்லையெனில் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுப்போம்' என்று மேலிடம் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்.

என்னை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றியது பழிவாங்கும் நடவடிக்கை. 2028 தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்வதற்கு முன்பே, ஒரு தொகுதியில் மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, அவரது வெற்றியை உறுதி செய்யுமாறு கட்சித் தொண்டர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதற்கு எதிர்வினையாற்றிய என் மகள், 'மற்ற தொகுதிகளைப் பரிசீலிக்காமல் ஒரு தொகுதியின் வேட்பாளரை ஏன் அவசரமாக அறிவிக்க வேண்டும்?' என்று கேள்வி எழுப்பினார். இந்தத் தொகுதியில் நாங்கள் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளோம். நானும் அந்தத் தொகுதியின் விருப்ப மனுதாரர்.

யாருடனும் கலந்தாலோசிக்காமல் எப்படி ஒரு வேட்பாளரை அறிவிக்க முடியும்? அதுதான் பிரச்னை. அதேபோல கடந்த காலத்தில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்களையே பகிரங்கமாக விமர்சித்த பல அரசியல்வாதிகளுக்கு எந்தக் கடுமையான தண்டனையும் கொடுக்கப்படவே இல்லை.

ஆனால், நான் கட்சியையோ அல்லது முதலமைச்சரையோ எங்கும் விமர்சிக்கவில்லை. இருப்பினும், எனக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். நான் பதிலளித்த பிறகும், திருப்தியடையாமல் எனக்கு எதிராகச் சதி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். என் மகளின் வார்த்தைகளைப் பயன்படுத்தி, என் மீது பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது மனதை உடைக்கிறது.

இருப்பினும், நாங்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகப் போவதில்லை. இந்தக் கட்சியில் எனது பயணம் சுமார் 30 ஆண்டுகளாகத் தொடர்கிறது. எனது கணவரும் பல ஆண்டுகளாக காங்கிரஸுடன் தொடர்பில் இருந்தவர்தான்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

திமுக: அன்பில் மகேஸைக் கைவிட்ட உதயநிதி? திருச்சி அரசியலில் திருப்பம்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸுக்கு மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் குறைந்து வருவதாக வருந்துகிறார்கள் திருச்சி தி.மு.க-வினர். கட்சி மறுசீரமைப்புக்க... மேலும் பார்க்க

பஸ்ஸை முத்தமிட்டு, டயரை தொட்டு வணங்கி.. 18 ஆண்டுக்கால பணி, நிறைவு - கண்ணீர் பெருக நெகிழ்ந்த ஒட்டுநர்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை பகுதியைச் சேர்ந்தவர் பால் குரியன் (56). இவர் கேரளா அரசுப் போக்குவரத்துக் கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி-யில் இடுக்கி மற்றும் கட்டப்பனை பணிமனைகளில் ஓட்டுநராகத் தனது ச... மேலும் பார்க்க

``கொளத்தூரின் தேர்தல் முடிவுகள் வாக்கு பதிவு இயந்திரங்களினால் வந்ததே..!"- என்.ஆர்.இளங்கோ திட்டவட்டம்

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு குறித்து தி.மு.க சட்டத்துறைச் செயலா... மேலும் பார்க்க

"கட்டுமானச் செலவே ரூ.4 கோடி தான்; முதல்வரின் திறப்பு விழாவுக்கு ரூ.5 கோடி செலவு!" - நயினார் தாக்கு

திருச்சியில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"கடந்த ஜூன் 12ந-ம் தேதி திறக்கப்பட்டிருக்க வேண்டிய மேட்டூ... மேலும் பார்க்க

`இது முட்டாள்தனமானது' Vs `சமநிலையைப் பேண முடியும்' - TRB ராஜா - கீர்த்தனா கருத்து மோதல்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, ``எங்கள் பகுதியில் இயங்கி வரும் ஜே.கே. டயர் நிறுவனம் இரவோடு இரவா... மேலும் பார்க்க

`பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிகள்; தீண்டாமை... உளவியல் ஒடுக்குமுறை!' - மாணிக்கம் தாகூர்

புதுக்கோட்டை அருகே ஓடும் அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவிகள் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க