செய்திகள் :

திருச்சி பீமநகர் வேணுகோபால சுவாமி திருக்கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் ரோகிணி நட்சத்திர வழிபாடு!

post image

திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் என்று பல்வேறு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர்த்தும் அபல நூறு பழைமையான சிறப்புடைய ஆலயங்கள் பல உண்டு.

அவற்றில் ஒன்று திருச்சி பீமநகர் வேணுகோபால கிருஷ்ணன் கோயில். திருச்சி சென்ட்ரல் பஸ் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் பீம நகரில் உள்ளது ஆலயம். இது குழந்தை வரமளிக்கும் தலமாகவும், குறை தீர்க்கும் திருக்கோயிலாகவும் விளங்குகிறது.

மேலும் அண்ணனான கண்ணனுகுத் துணையாக அவன் தங்கை காளிகா பரமேஸ்வரியும் அருகே எழுந்தருளி இருப்பதும் விசேஷம்.

பீமநகர் வேணுகோபால சுவாமி கோயில்
பீமநகர் வேணுகோபால சுவாமி கோயில்

இந்தப் பகுதி மக்கள் வேணுகோபால சுவாமியைத் தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே கருதி பக்தி செய்கிறார்கள். `குழந்தையும் தெய்வமும் கொண்டாடுற இடத்துல' என்பது பழமொழி.

`எங்கெல்லாம் தன்னைக் கொண்டாடுகிறார்களோ அங்கே வந்து அமர்ந்துகொள்வான் கண்ணன். அப்படித்தான் இங்கே அமர்ந்து அருள்பாலிக்கிறார் வேணுகோபால சுவாமி.

ஆரம்பத்தில் பசுக்கள் உலாவிய இடமாகவும், பிறகு பிரிட்டிஷ் காலத்தில் ராணுவ வீரர்கள் தங்கி இருந்த இடமாகவும் இப்பகுதி இருந்துள்ளது. அப்போது இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்பட்டு வந்தாள் ஒரு சுயம்பு காளி. பிறகு இங்கிருந்த யாதவ மக்களின் வேண்டுதலுக்காக தங்கை மகாகாளிகா பரமேஸ்வரியுடன் அண்ணனான வேணுகோபாலனும் இங்கே குடி அமர்ந்தார் எனத் தலவரலாறு கூறுகிறது.

வடக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் அழகிய நுழைவு வாயில் தாண்டினால் நீண்ட மண்டபம், பிறகு மகாமண்டபம், அர்த்த மண்டபம் எனப் பரந்துள்ளது. அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணன் நின்ற நிலையில் குழல் ஊதிய கோலத்தில், குறுநகைத் தவழ அருள்பாலிக்கிறார். எத்தனை முறை தரிசித்தாலும் சலிக்காத திருமேனி! குறைகளைக் கூறக்கூட மனம் மறந்துவிடும் அருட்கோலம்.

தரிசித்து வெளியே வர, மகாமண்டபத்தின் வலது பக்கமாக ஸ்ரீகாளிகா பரமேஸ்வரியின் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கி, தீ ஜுவாலை தலையைச் சுற்றி அனல் பறக்க வீச எழுந்தருளி இருக்கிறாள். சூலம், நந்தி புடை சூழ எழுந்தருளி இருக்கும் இவளைக் கண்டாலே சகல அச்சங்களும் கவலைகளும் ஓடிவிடும் என்கிறார்கள்.

பீமநகர் வேணுகோபால சுவாமி கோயில் காளிகாபரமேஸ்வரி
பீமநகர் வேணுகோபால சுவாமி கோயில் காளிகாபரமேஸ்வரி

ஆலயத்தில் சொர்ண கணபதி, கால பைரவர், ராஜ கணபதி, விஷ்ணு துர்கை, நாகராஜா, சுந்தரேஸ்வர், அன்னை மீனாட்சி, ஐயப்பன், முருகன் வள்ளி தெய்வானை போன்ற பல சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள எரிசின கொற்றவை எனும் விஷ்ணு துர்கையை வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்குமாம். ராகு காலத்தில் விளக்கிட்டு இவளை வேண்டினால் தீராத நோய்களும் தீருமாம்.

ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீவேணுகோபாலனுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதில் கலந்துகொள்பவர்களுக்கு மழலைப் பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. கிருஷ்ண ஜயந்தி அன்று இங்கு நடைபெறும் உறியடி உற்சவம் பிரசித்தமானது, அதேபோல பங்குனி மாத கடைசி வெள்ளியில் ஸ்ரீகாளிகா பரமேஸ்வரிக்கு நடைபெறும் பூச்சொரிதல் விழா சிறப்பானது.

குறிப்பாக உடல் மற்றும் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ரோகிணி நட்சத்திர நாளில் இங்கு வந்து வேணுகோபாலனை வேண்டிக்கொண்டு அபிஷேகம் செய்தால் அவர்கள் குணமடைகிறார்கள் என்பது வெகுகால நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பலரும் மீண்டும் இங்கு வந்து கிருஷ்ணனுக்கு பால் பாயசம் சமர்ப்பிப்பதும் இங்கு சகஜமாம்.

இப்படி தன்னை நாடிவந்தவர்க்கெல்லாம் நலம் செய்யும் வேணுகோபால சுவாமியை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை நலமாகும், வளமாகும்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஸ்ரீஉக்தவேதீஸ்வரர்: திருமண வரம் தரும் தலத்தில் சுயம்வரபார்வதி ஹோமம்!

மயிலாடுதுறை கும்பகோணம் பகுதிகளைச் சுற்றிலும் புண்ணியத் தலங்கள்தான். பார்க்கும் இடங்கள் எல்லாம் ஆலயங்கள்தான். இதில் சிறப்பு என்னவென்றால் ஒவ்வோர் ஆலயமும் ஒரு சிறப்பினையும் புராண வரலாற்றையும் உடையது. அப்... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டம் தீவனூர் லிங்க வடிவ விநாயகர் - காரியவெற்றியைக் காட்டி அருளும் நவகிரக சந்நிதி!

விநாயகரை ஆனைமுகத்தானாவே பெரும்பாலும் வணங்குகிறோம். சில தலங்களில் விநாயகர் மனித ரூபத்திலும் அருள்கிறார். ஆனால் அவரே லிங்க ரூபனாக அருளும் தலம் ஒன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்: கடன்கள் தீர்க்கும் கணபதி சந்நிதி

தீராத கடன் தொல்லையால் வாடும் அன்பர்களின் பிரச்னைகள் நீங்க அருள்பாலிக்கும் திருத்தலங்கள் அநேகம் உள்ளன. அவற்றில் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது. அதுதான் பாகலூர் கணபதி ஆலயம். இவரை கடன் தீர்க்கும் ... மேலும் பார்க்க

ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் அதிசய ஆஞ்சநேயர்... பெங்களூர் தரிசனம்!

பெங்களூரு நகரத்தில் `தொட்ட பனஸ்வாடி’ எனும் இடத்தில் அருள்பாலிக்கும் பனஸ்வாடி ஆஞ்சநேயர் மிகவும் சக்திவாய்ந்தவர். அனுமன் ஜயந்தி நாளன்று ஆனந்தக்கண்ணீர் சிந்தும் அற்புத தெய்வம் இவர் என்று நேரில் பார்த்த ப... மேலும் பார்க்க

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம்; 9-ம் தேதி தேரோட்டம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விளங்கி வருகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா, ஆவணித் திருவிழா, கந்தசஷ்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் ஸ்ரீதீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில்: கல்வியில் மேன்மை அருளும் தலம்!

நெடுங்குணம் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது யோகராமர் தலம்தான். அதே ஊரில் பழைமையான ஒரு சிவாலயமும் உண்டு. சுகபிரம்ம ரிஷி வழிபட்ட இந்தச் சிவாலயத்தின் சிறப்புகள் ஏராளம். வாருங்கள் அத்தலம் குறித்து... மேலும் பார்க்க