செய்திகள் :

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம்; 9-ம் தேதி தேரோட்டம்

post image

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விளங்கி வருகிறது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா, ஆவணித் திருவிழா, கந்தசஷ்டி, தைப்பூசம்  உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

அதே போல் இந்தாண்டுக்கான ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்குத் திருக்கோயில் நடை திறக்கப்பட்டது.

தீபாராதணை
தீபாராதணை

1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 5.15 மணிக்குக் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மாப்பொடி உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை அப்பர் சுவாமிகள் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

கொடியேற்றம்
கொடியேற்றம்

5-ம் நாள் திருவிழாவான வரும் செப்டம்பர் 4-ம் தேதி இரவு 7:30 மணிக்கு மேலக் கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்று, சுவாமி - அம்பாள், தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெறுகிறது. 7ம் நாள் திருவிழாவான வரும் செப்டம்பர் 6-ம் தேதி சுவாமி 5 மணிக்கு உருகு சட்டசேவை நடைபெறுகிறது.

அன்று காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர், வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளளும் அன்று மாலை 4 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வருதலும் நடைபெறும்.

8-ம் நாள் விழாவான வரும் செப்டம்பர் 7-ம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தியில் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்து, அன்று நண்பகல் 12 மணிக்கு சுவாமி பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறுகிறது.

பக்தர்கள்
பக்தர்கள்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் செப்டம்பர்  9-ம் தேதி அன்று காலை 7 மணிக்கு விழாவின் சிகர நிகழ்வான நடைபெறுகிறது. திருவிழா காலங்களில் தினமும் சுவாமி – அம்பாள் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் ஸ்ரீதீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில்: கல்வியில் மேன்மை அருளும் தலம்!

நெடுங்குணம் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது யோகராமர் தலம்தான். அதே ஊரில் பழைமையான ஒரு சிவாலயமும் உண்டு. சுகபிரம்ம ரிஷி வழிபட்ட இந்தச் சிவாலயத்தின் சிறப்புகள் ஏராளம். வாருங்கள் அத்தலம் குறித்து... மேலும் பார்க்க

கட்டபொம்மன் வழங்கிய மணி; பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி!

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உலகப் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக விளங்கி வருகிறது. இந்த கோயிலில் சுமார் 137 அடி உயரத்தில், 9 ந... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டம் கோபிநாதன்மலை கோபிநாத சுவாமி கோயில்: பணிமாற்றம் அருளும் தென்னகத்து கோகுலம்!

மலைத்தலங்கள் அனைத்துமே மனதுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தருவன. உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் தருவன. அப்படி ஒரு ஆலயம்தான் திண்டுக்கல் மாவட்டம் - பழநி பிரதான சாலையில், ரெட்டியார் சத்திரத்திலிருந்த... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டம், காளப்பனூர் முத்துமாரியம்மன்: பேசாத குழந்தைகளைப் பேசவைக்கும் தாய்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகிலுள்ள காளப்பனூர். இங்குதான் அன்னை முத்துமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. 200 ஆண்டுகள் பழைமையான இந்த முத்துமாரியம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்றத்து. அருகில் உள்ள... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்: 7 கோபுரங்கள்... எண்ணிலடங்கா மகிமைகள்!

திருவோணம் பகவான் விஷ்ணுவின் நட்சத்திரம். இந்த நட்சத்திர தினத்தில்தான் பெருமாள், ஹயக்ரீவர், வாமனர், திருவேங்கடவன் எனப் பல்வேறு அவதாரங்களை எடுத்தார். எனவேதான் பெருமாளை வழிபட உகந்த நட்சத்திர தினமாக திருவ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டம் புத்திரன்கோட்டை அகத்தீஸ்வரர் ஆலயம்: நெய் தீபம் இட்டால் பிள்ளை வரம் கிடைக்கும்!

அகத்திய மாமுனி தென் திசை வந்தபோது தன் பயண வழி எங்கும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து ஈசனை வழிபட்டார். அப்படி அவர் வழிபட்ட லிங்கங்கள் அனைத்தும், 'அகத்தீஸ்வரர்' என்று போற்றப்பட்டன. அகத்தியர் பிரதிஷ்டை செய்... மேலும் பார்க்க