செய்திகள் :

கட்டபொம்மன் வழங்கிய மணி; பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி!

post image

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உலகப் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக விளங்கி வருகிறது. இந்த கோயிலில் சுமார் 137 அடி உயரத்தில், 9 நிலைகள் கொண்ட கோயில் ராஜகோபுரம் உள்ளது. 9 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பழைமை  மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. 9வது நிலையில், கி.பி. 18-ம் நூற்றாண்டில் முருக பக்தரான பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய பித்தளையால் ஆன பிரமாண்ட மணி உள்ளது.

ராஜகோபுரத்தில் ஒலிக்கப்பட்ட மணி

அந்தக் காலத்தில் மூலவர் சுப்பிரமணியருக்கு  12 மணி உச்சிக்கால தீபாராதனையின்போது அந்த மணி ஒலிக்கப்படுமாம். அதன் தொடர்ச்சியாக திருச்செந்தூர் முதல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வரை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த மணி மண்டபங்களில் அடுத்தடுத்து ஒலிக்கப்பட்டு இறுதியாக கோட்டையில் மணி ஒலிக்கப்படுமாம்.  அந்த மணியோசையைக் கேட்டபிறகே கட்டபொம்மன், சுப்பிரமணிய சுவாமி மற்றும் வீரசக்கதேவியை வணங்கிவிட்டு மதிய உணவு உண்பது வழக்கமாம்.

அந்த மணியை ஒலிக்கச் செய்வதற்காகவே தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனராம். இத்திருக்கோயிலில் கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. 9 நிலைகள் கொண்ட ராஜகோபுரமும், மணியும் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.  மேலும் இந்த மணி ஒலிக்கச் செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டது இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த மணியை ஒலிக்க செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

மணியை ஒலிக்கச் செய்யும் திருக்கோயில் பணியாளர்கள்

இதைத்தொடர்ந்து அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில் இந்த மணியை ஒலிக்க செய்ய வேண்டுமென கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் தெரிவித்தனர். அத்துடன், வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ஆலய மணியை வருகின்ற ஆவணித்திருவிழா நாள்களில் தினமும் ஒலிக்க வைக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். நேற்று (28.8.2026) முதல் தினமும் உச்சிக்கால பூஜையின் போது மணி ஒலிக்கப்படும் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு மணி ஒலிக்கப்பட்டது. பூஜை முடியும் வரை சுமார் ஐந்து நிமிடத்திற்கும் மேலாக இந்த மணி ஒலிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கோபிநாதன்மலை கோபிநாத சுவாமி கோயில்: பணிமாற்றம் அருளும் தென்னகத்து கோகுலம்!

மலைத்தலங்கள் அனைத்துமே மனதுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தருவன. உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் தருவன. அப்படி ஒரு ஆலயம்தான் திண்டுக்கல் மாவட்டம் - பழநி பிரதான சாலையில், ரெட்டியார் சத்திரத்திலிருந்த... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டம், காளப்பனூர் முத்துமாரியம்மன்: பேசாத குழந்தைகளைப் பேசவைக்கும் தாய்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகிலுள்ள காளப்பனூர். இங்குதான் அன்னை முத்துமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. 200 ஆண்டுகள் பழைமையான இந்த முத்துமாரியம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்றத்து. அருகில் உள்ள... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்: 7 கோபுரங்கள்... எண்ணிலடங்கா மகிமைகள்!

திருவோணம் பகவான் விஷ்ணுவின் நட்சத்திரம். இந்த நட்சத்திர தினத்தில்தான் பெருமாள், ஹயக்ரீவர், வாமனர், திருவேங்கடவன் எனப் பல்வேறு அவதாரங்களை எடுத்தார். எனவேதான் பெருமாளை வழிபட உகந்த நட்சத்திர தினமாக திருவ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டம் புத்திரன்கோட்டை அகத்தீஸ்வரர் ஆலயம்: நெய் தீபம் இட்டால் பிள்ளை வரம் கிடைக்கும்!

அகத்திய மாமுனி தென் திசை வந்தபோது தன் பயண வழி எங்கும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து ஈசனை வழிபட்டார். அப்படி அவர் வழிபட்ட லிங்கங்கள் அனைத்தும், 'அகத்தீஸ்வரர்' என்று போற்றப்பட்டன. அகத்தியர் பிரதிஷ்டை செய்... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டம், மணப்பள்ளி ஸ்ரீதங்க முனியப்பன் கோயில்; வழக்குகளில் வெற்றி அருளும் தலம்!

காவிரிக்கரையோரம் அமைந்திருக்கும் ஆலயங்கள் அனைத்தும் மிகவும் மகிமை நிறைந்தவை. அவற்றில் ஒன்று ஸ்ரீதங்க முனியப்பன் ஆலயம். நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது மணப்பள்ளி. இங... மேலும் பார்க்க

நெல்லை: வரலஷ்மி விரதம் வளைகாப்பு வைபவம் - 1 லட்சம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட கனகமகாலெஷ்மி அம்மன்!

நெல்லை:வரலஷ்மி விரதம் வளைகாப்பு வைபவம் விழா- 1 இலட்சம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட கெட்வெல் அம்மன்! மேலும் பார்க்க