செய்திகள் :

"முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது; ஆனால்..." - வைகோ என்ன சொல்கிறார்?

post image

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்' எனத் தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், "ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று தவெகவிற்கு அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று (ஆக.30) எச்சரிக்கை விடுத்திருந்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்நிலையில் விஜய்தான் அடுத்த பிரதமர் என்று எழுந்திருக்கும் முழக்கம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோவிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த வைகோ, "பிரதமராக வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ முதல்வர் விஜய்க்குத் துளியளவும் கிடையாது.

முதல்வரின் கற்பனையில் கூட அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பதால் அமைச்சர்கள் நினைத்தபடி பேசக்கூடாது.

இந்தியாக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிப்பதால் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்.

வைகோ
வைகோ

வேறு யாரையும் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது. இதுபோன்று பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர்கள், தவெகவினருக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவிற்கு ஜாக்பாட்: 'செலவே இல்லாமல் 6,500 கோடி பேரல் எண்ணெய்' வெனிசுலாவின் சூப்பர் பரிசு!

கடந்த ஜனவரி மாதம், வெனிசுலாவின் அப்போதைய அதிபர் மதுரோவைக் கைது செய்து, அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இந்தச் சம்பவத்திற்குப் பின், ட்ரம்பின் டார்கெட் முழுவதும் வெனிசுலாவின் ... மேலும் பார்க்க

TN Assembly : `110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்த 6 அறிவிப்புகள்!' - முழு விவரம்!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.CM Vijayமுதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள், 'கிராம அளவ... மேலும் பார்க்க

DMK: "மனக்கசப்புடன் இனியும் திமுகவில் தொடர முடியாது" - தோப்பு வெங்கடாசலம் சொல்வது என்ன?

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தி.மு.க- வின் முன்னாள் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளருமான தோப்பு வெங்கடாசலம், தி.மு.க- வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (... மேலும் பார்க்க

``100 நாள்களில் ரூ.28,000 கோடி கடன்; விஜய்யின் தவெக அரசு நிலைக்காது!" - விளாசிய எடப்பாடி பழனிசாமி

வேலூரில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``த.வெ.க அமைச்சரவையில் பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒருத் துறை இருக... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு குறித்து சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சு; மாடுபிடி வீரர்கள் எதிர்ப்பு; எம்எல்ஏ விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. வி.எம்.கருப்பையா, வாடிவாசல் மற்றும் ஜல்லிக்கட்டு குறித்து பேசிய நிலையில்தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் ஜல்ல... மேலும் பார்க்க