செய்திகள் :

DMK: "மனக்கசப்புடன் இனியும் திமுகவில் தொடர முடியாது" - தோப்பு வெங்கடாசலம் சொல்வது என்ன?

post image

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தி.மு.க- வின் முன்னாள் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளருமான தோப்பு வெங்கடாசலம், தி.மு.க- வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (ஆகஸ்ட் 31- 2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தி.மு.க- வில் ஏற்பட்டது கசப்பான அனுபவம்

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "‌ தி.மு.க- வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறேன். மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கியதற்கு நன்றி.

தி.மு.க- வில் ஏற்பட்டது மிகவும் கசப்பான அனுபவம். எனக்கு ஏற்பட்ட இந்த மனசகப்புடன் இனியும் தி.மு.க- வில் தொடர முடியாதததால் விலகுகிறேன்.‌‌ இப்போதைக்கு வேறு எந்த இயக்கத்திற்கும் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போதைக்கு வேறு இயக்கத்திற்கு செல்ல முயற்சிக்கவும் இல்லை .

தோப்பு வெங்கடாசலம்

முன்னாள் அமைச்சர் முத்துசாமி மீது எவ்வித குற்றசாட்டையும் கூறவில்லை. இறந்தகாலத்தை குறை கூறாமல் நிகழ்காலத்தை தொடர விரும்புகிறேன். பெருந்துறை பின்தங்கிய தொகுதியாக மாறியிருப்பது வருத்தமளிக்கிறது. தி.மு.க-விற்கு வந்த நோக்கமான பெருந்துறை- கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் , அந்தக்கடவு - அவினாசி திட்டம் போன்றவை குறையாக உள்ளன. தி.மு.க தலைவர் ஸ்டாலின் என் மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார். நானும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எதிர்காலத்தில் என் பணிகள் பெருந்துறை தொகுதியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

"முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது; ஆனால்..." - வைகோ என்ன சொல்கிறார்?

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்' எனத் தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். அ... மேலும் பார்க்க

``100 நாள்களில் ரூ.28,000 கோடி கடன்; விஜய்யின் தவெக அரசு நிலைக்காது!" - விளாசிய எடப்பாடி பழனிசாமி

வேலூரில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``த.வெ.க அமைச்சரவையில் பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒருத் துறை இருக... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு குறித்து சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சு; மாடுபிடி வீரர்கள் எதிர்ப்பு; எம்எல்ஏ விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. வி.எம்.கருப்பையா, வாடிவாசல் மற்றும் ஜல்லிக்கட்டு குறித்து பேசிய நிலையில்தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் ஜல்ல... மேலும் பார்க்க

“புற்றுநோய் மீண்டும் பரவலாம்; நான் பிரதமராக இருக்கும் வரை...” - ஈரான் குறித்து நெதன்யாகு பேச்சு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செய்தி நிகழ்ச்சி ஒன்றில் ஈரான் போர் குறித்துப் பேசியுள்ளார்.ஈரான் போருக்கு அமெரிக்காவை அழைத்ததே இஸ்ரேல்தான் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெதன்யாகு ஈரான... மேலும் பார்க்க

'ஹார்முஸில் கண்ணிவெடிகள்' - ஈரானை அமெரிக்கா தாக்கியது ஏன்? ஈரானின் பதிலடி என்ன?

கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தான், அமெரிக்கா, ஈரான் மீது ‘ஆபரேஷன் எக்கனாமிக் அவுட்காஸ்ட்’-ஐ அறிவித்தது. இது ஈரான் மீதான பொருளாதாரத் தடை ஆகும்.ஈரான் போர் அப்போதிலிருந்து ராணுவ நடவடிக்கைகளில் இருந்து ... மேலும் பார்க்க