செய்திகள் :

`கஞ்சா நெட்வொர்க்' - ஒடிசாவுக்கே சென்று முக்கிய குற்றவாளியைத் தட்டித்தூக்கிய வேலூர் போலீஸ்!

post image

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம் அருகே கடந்த 13-ம் தேதி சந்தேகத்திற்கிடமாக சிக்கிய இருவரிடம் வேலூர் மதுவிலக்குப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியதில், அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் ( 23), நூகுல் ஷாஹிம் (20) எனத் தெரியவந்தது.

ஒடிசா மாநிலத்திலுள்ள மோகனா பகுதியில் வசிக்கும் ரிங்கு லீமா என்பவனிடமிருந்து கஞ்சா வாங்கி வந்ததாக இருவரும் தெரிவித்தனர். அவன் மூலமாக தமிழகத்தில் கஞ்சா புழக்கம் இருப்பதும், இங்குள்ள கஞ்சா வியாபாரிகள் பலரும் அவனுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் போலீஸார் சிறையிலடைத்தனர்.

கஞ்சா வியாபாரி ரிங்கு லீமா (பின்னாலிருப்பது போலீஸார்)

இந்த நிலையில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திக் செல்வம் தலைமையில் தலைமைக் காவலர்கள் கோபிநாத், பிரபு மற்றும் காவலர் பவுல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ரிங்கு லீமாவை அடையாளம் கண்டு பிடிக்க ஒடிசா விரைந்தனர். ஒடிசாவில் தங்கியிருந்து 4 நாள்கள் பல்வேறு இடங்களுக்கும் பயணித்து, ரிங்கு லீமா பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

அதாவது, ஒடிசாவில் கஜபதி என்ற மாவட்டம் உள்ளது. இது ஒரு மலைப்பாங்கான மாவட்டமாகும். அந்த மாவட்டத்தில் கேசரிகுடா என்ற இடத்தில் பதுங்கியிருந்த ரிங்கு லீமாவைக் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவனுக்கு 19 வயதுதான் ஆகிறது. அதற்குள்ளாக கஞ்சா நெட்வொர்க் கும்பலுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ரிங்கு லீமாவை வேலூருக்கு அழைத்து வந்த போலீஸார் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்திருக்கின்றனர்.

மதுரை: 'என் அம்மா ஏன் கைகட்டி நிற்க வேண்டும்'- மாணவி தற்கொலை; தலைமையாசிரியை மீது SC/ST Act-ல் வழக்கு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பூச்சிப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளார். சில... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: கஞ்சா வழக்குகளில் தொடர்ந்து சிக்கிய பெண்; குண்டர் சட்டத்தைப் பிரயோகித்த கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பெண் 'Drug Offender' பிரிவின் கீழ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கஞ்சா (ஃபைல் படம்)கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டவர் 2வது முறையாக தப்பி ஓட்டம்; போலீஸாரின் அலட்சியம்தான் காரணமா?

தூத்துக்குடி மாப்பிளையூரணியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரின்மகன் நிரஞ்சன். கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி விளாத்திகுளம் மீனாட்சிபுரத்தில் அடிதடி பிரச்னை தொடர்பாக விளாத்திகுளம் காவல் நிலையம் போலீஸார் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: பால் வேன் மோதியதால் 4 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிச்சாமி -அஞ்சம்மாள். இவர்கள், கணவாய் மேடு பகுதியில் சாலையோரமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள்.இவர்களின் ... மேலும் பார்க்க

கும்பகோணம்: காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியை; பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட கேரள ஜிம் பயிற்சியாளர்

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மதுர் பகுதியைச் சேர்ந்தவர் சுமன்ராஜ் (36). ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளார். சுமன்ராஜுக்குத் திருமணம் ஆகி ஹித்தாச்சி என்ற மனைவியும் 7 வயதில் பெண் குழந்தையும், ஒன்பது மா... மேலும் பார்க்க

விவாகரத்து, 7 மாத கர்ப்பம்: கடத்தி மரத்தில் கட்டி தீவைக்கப்பட்ட பஞ்சாப் பெண் சோசியல் மீடியா பிரபலம்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மஞ்ஜீத் கவுர்(28). சோசியல் மீடியா பிரபலமான கவுர் கடந்த ஜூலை மாதம் சண்டிகரில் மதுபானக்கடை ஒன்றுக்கு அருகில் தனக்கு தெரிந்த இரண்டு பேரால் காரில் கடத்திச்செல்லப்பட்டார். மொரி... மேலும் பார்க்க