செய்திகள் :

Nepal Flood: நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு; எப்படி தப்பியது?

post image

கடந்த 26-ம் தேதி, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்த வெள்ளம் மனிதர்களின் உயிர்களை மட்டுமே குறி வைக்கவில்லை. வாகனங்கள், வீடுகள் எனக் கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொத்துகளையும் இந்த வெள்ளம் காணாமல் போகச் செய்துவிட்டது.

நேபாள வெள்ள வீடியோக்களில் ஒரு வீடியோ மிகவும் வைரலானது. சுற்றி இருக்கும் அனைத்து வீடுகளும் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போயிருக்க, ஒரேயொரு வீடு மட்டும் கம்பீரமாக நிற்கும் வீடியோ அது.

நேபாளம்
நேபாளம்

சுற்றி இருக்கும் அனைத்து வீடுகளும் தரைமட்டமாக, அந்தவொரு வீடு மட்டும் தப்பியது எப்படி என்கிற விளக்கமளிக்கும் வீடியோ எக்ஸ் தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவின் விளக்கம் இதோ...

“வெள்ளத்தில் அந்த வீடு தப்பித்திருப்பது ஏதோ அதிர்ஷ்டம் போலத் தோன்றலாம்.

ஆனால் அது எப்படித் தப்பித்தது என்பதற்குப் பின்னால் ஒரு துல்லியமான கட்டிடக் கலை அறிவியல் (Structural physics) இருக்கிறது.

முதலாவது, அதன் கட்டுமான முறை.

இமயமலைப் பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான பாரம்பர்ய வீடுகள் செங்கல் அல்லது கற்களை மட்டுமே வைத்துக் கட்டப்பட்டிருக்கின்றன.

இவை மேலே இருந்து வரும் எடையைத் தாங்கும். ஆனால், பக்கவாட்டில் இருந்து பலமான விசை தாக்கும்போது சுவர்கள் எளிதாகப் பிளந்து கூரை உள்நோக்கி விழுந்துவிடும்.

ஆனால், இந்த வீடு வலுவூட்டப்பட்ட கான்கிரீட் சட்டகத்தைக் (Reinforced Concrete Frame) கொண்டு கட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான கம்பிகள் அதன் தூண்கள், விட்டங்கள் மற்றும் அடித்தளத்தை ஒரே வலுவான எலும்புக்கூடு போல ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைத்துள்ளன.

இதனால், சேற்று வெள்ளம் வந்தடித்தபோது, கான்கிரீட் சட்டகம் அந்த மோதல் விசையைத் தாங்கிக்கொண்டு, அதை அப்படியே தரையின் கீழ் கடத்திவிட்டது.

இரண்டாவது, வீட்டின் அமைவிடமும், வடிவமும் முக்கிய காரணங்களாகும்.

வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மிகப்பெரிய பாறைகள் அதன் மையப் பகுதியில்தான் அதிக வேகத்துடன் பாயும்.

இந்த வீடு அந்தப் பாதையிலிருந்து சற்று விலகி, கொஞ்சம் உயரமான இடத்தில் அமைந்திருக்கிறது.

மேலும் இதன் கச்சிதமான வடிவத்தால், வந்தடைந்த வெள்ளம் இரண்டாகப் பிரிந்து வீட்டின் இரு பக்கங்களிலும் விலகிச் சென்றிருக்கிறது.

அதுமட்டுமின்றி, முதலில் வந்து படிந்த சேறு ஒரு இயற்கைச் சரிவை உருவாக்கி, அதற்கு அடுத்து வந்த அதிவேக வெள்ள அலைகளை வீட்டின் மீது மோதவிடாமல் மேல்நோக்கி விலக்கிவிட்டுவிட்டது.”

Man Eater: 130 கண்காணிப்பு கேமிராக்கள், 13 கூண்டுகள்; 11-வது நாளாகப் போக்கு காட்டும் ஆட்கொல்லி புலி

மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் 2 நபர்களை புலி தாக்கி கொன்றதுடன் அவர்களின் உடல் பாகங்களையும் தின்றுள்ளது. மனிதர்களை வேட்டையாடி பழகிய அந்தப் புலிய... மேலும் பார்க்க

"அவ்வளவு பெரிய பனியும் பாறைகளும் கீழே விழுந்ததால்தான் அந்த அதிர்வுகள்.!" - நேபாள வெள்ளம் விளக்கம்

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 26), நேபாளத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இப்போது வரை வெளியாகி உள்ள தகவலின்படி, இந்த வெள்ளத்தில் 469 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்புக் குழு தேடி வ... மேலும் பார்க்க

காக்க வந்த கரைகள்... கழுத்தை நெரித்த கதை: `கோசி திட்டம்' ஒரு வரலாற்றுப் பிழையா?

இயற்கையின் மாபெரும் சக்திகளில் ஒன்றான ஆறுகள், சில சமயங்களில் தங்களின் வழக்கமான பாதையை விட்டு விலகி, திடீரென ஒரு புதிய வழியில் பயணிக்கத் தொடங்கும். புவியியலில் இந்த நிகழ்வு 'அவல்ஷன்' (Avulsion) என்று அ... மேலும் பார்க்க

மருதமலை: பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்து வரும் குட்டை – நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள குட்டை ஒன்று தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. குட்டையின் நீர்ப்பரப்பில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுக... மேலும் பார்க்க

கூடலூர்: யானைக் காட்டில் ஆட்கொல்லி புலியைத் தேடி அலையும் வனத்துறை! | Photo Album

ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிட... மேலும் பார்க்க