செய்திகள் :

`பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்' அமைக்க வேண்டும்' - ஜக்கி வாசுதேவ்

post image

நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நேற்று நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்கி வாசுதேவ், “இந்தப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘ஈஷா நேபாளம்’ சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் சத்குரு பேசுகையில், "இமயமலைத் தொடர்கள் பரவியுள்ள அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். அரசியல் நிர்வாகங்கள் தனித்தனியாக இருந்தாலும், இந்த மலைத் தொடர்கள் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டும். இதை நாம் செய்யாமல், 'சரி, இது நேபாளத்தின் பிரச்னை, அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்' என்று நினைத்துக் கொண்டிருந்தால், இதற்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.

மலைகளுக்கு உங்களது அரசியல் தொடர்புகள் தெரியாது. நீங்கள் பேசும் மொழியோ அல்லது செய்யும் அபத்தமான காரியங்களோ தெரியாது. இதை ஒரே அமைப்பாக உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் கலந்தாலோசனை செய்வதாவது ஒரே அமைப்பாக நடக்க வேண்டும். நாம் செய்யும் செயல்களில் ஒரு ஒத்திசைவு இருக்க வேண்டும். ஏனெனில் இமயமலை பூமியின் மிகவும் அற்புதமான மற்றும் கம்பீரமான அமைப்பாகும். அதே நேரத்தில், அது மிக உறுதிசியானதும் அல்ல.

சத்குரு
சத்குரு

ஒரு பெரிய பனிப்பாறையின் முக்கால்வாசி பகுதி, சிகரத்திலிருந்து 4,000 அடி கீழே திடீரென விழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதை யாரும் கணித்திருக்க முடியாது. ஆனால் இப்போது இது நடந்துவிட்டது என்பதால், நேபாளம் போன்ற ஒரு சிறிய நாடு தனியாக இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இந்தப் பேரழிவிற்கு ‘தெய்வீக காரணங்களை’ கூறுவதோ அல்லது ‘நம்ப முடியாத மாய சக்தி’ என்று சித்தரிக்கவோ வேண்டாம். வாழ்க்கையின் ஆன்மீகப் பரிமாணங்களுக்கும், இயற்கை நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் பௌதிக விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். எனவே தத்துவங்கள், கருத்தியல்கள் அல்லது ஆன்மீக விளக்கங்களை அளித்து மனித துயரத்தை நாம் கொச்சைப்படுத்தக் கூடாது." என்றார்.

'கண்ணியக்குறைவாக பேசுபவர்கள் நேரலையில் அம்பலப்படட்டுமே என மக்கள் கேட்கின்றனர்!' - சபாநாயகர் விளக்கம்

சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின் இடையே பேசிய சபாநாயகர் 'சட்டமன்ற நேரலை' குறித்து விரிவாக பேசியிருந்தார். சபாநாயகர்திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசு... மேலும் பார்க்க

அமெரிக்காவிற்கு ஜாக்பாட்: 'செலவே இல்லாமல் 6,500 கோடி பேரல் எண்ணெய்' வெனிசுலாவின் சூப்பர் பரிசு!

கடந்த ஜனவரி மாதம், வெனிசுலாவின் அப்போதைய அதிபர் மதுரோவைக் கைது செய்து, அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இந்தச் சம்பவத்திற்குப் பின், ட்ரம்பின் டார்கெட் முழுவதும் வெனிசுலாவின் ... மேலும் பார்க்க

TN Assembly : `110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்த 6 அறிவிப்புகள்!' - முழு விவரம்!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.CM Vijayமுதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள், 'கிராம அளவ... மேலும் பார்க்க

"முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது; ஆனால்..." - வைகோ என்ன சொல்கிறார்?

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்' எனத் தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். அ... மேலும் பார்க்க

DMK: "மனக்கசப்புடன் இனியும் திமுகவில் தொடர முடியாது" - தோப்பு வெங்கடாசலம் சொல்வது என்ன?

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தி.மு.க- வின் முன்னாள் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளருமான தோப்பு வெங்கடாசலம், தி.மு.க- வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (... மேலும் பார்க்க

``100 நாள்களில் ரூ.28,000 கோடி கடன்; விஜய்யின் தவெக அரசு நிலைக்காது!" - விளாசிய எடப்பாடி பழனிசாமி

வேலூரில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``த.வெ.க அமைச்சரவையில் பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒருத் துறை இருக... மேலும் பார்க்க