செய்திகள் :

திமுக: அன்பில் மகேஸைக் கைவிட்ட உதயநிதி? திருச்சி அரசியலில் திருப்பம்

post image

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸுக்கு மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் குறைந்து வருவதாக வருந்துகிறார்கள் திருச்சி தி.மு.க-வினர்.

கட்சி மறுசீரமைப்புக்குப் பிறகும் சீனியரான கே.என் நேரு கண்ட்ரோலில்தான் திருச்சி தி.மு.க இருப்பதாகவும் தெரிகிறது.

கே.என். நேரு
கே.என். நேரு

தி.மு.க-வில் 78 மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 110-ஆக உயர்த்தியிருக்கிறார் அக்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின். தமிழ்நாடு முழுக்க 11 மா.செ-க்களுக்கு 3 தொகுதிகளும் 99 மா.செ-க்களுக்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையிலும் 3 தொகுதிகளைக் கவனிக்கும் பொறுப்பு பெரும்பாலும் முன்னாள் அமைச்சர்களுக்கே வழங்கப்படும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

9 தொகுதிகளைக் கொண்ட திருச்சி 4 கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு மாவட்டம் மட்டும் மூன்று தொகுதிகளை உள்ளடக்கியுள்ளன.

மறுசீரமைப்புக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் அதிகாரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருச்சி மாவட்டத்தில் அன்பிலுக்கு 2 தொகுதிகளை நிர்வகிக்கும் மா.செ பொறுப்பு தரப்படவுள்ளதாகவும் வேறு ஒருவருக்கு 3 தொகுதி மா.செ பொறுப்பு செல்லவுள்ளதாகவும் தகவல் கசிக்கின்றன.

நம்மிடம் பேசிய திருச்சி தி.மு.க-வினர், "மறுசீரமைப்புக்கு முன்பு திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அன்பில் மகேஸ் திருவெறும்பூர், மணப்பாறை மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய மூன்று தொகுதிகளைக் கவனித்துக் கொண்டார்.

அன்பில் மகேஷ் - நேரு
அன்பில் மகேஷ் - நேரு

மறுசீரமைப்புக்குப் பிறகு திருவெறும்பூர், மணப்பாறை என இரண்டு தொகுதிகள் அடங்கிய மா.செ பொறுப்பு வழங்கப்படவுள்ளது. அதேநேரம், திருச்சி மத்திய மாவட்டத்தில் திருச்சி மேற்கு, திருவரங்கம், திருச்சி கிழக்கு ஆகிய மூன்று தொகுதிகளும். திருச்சி கிழக்கில் மண்ணச்சநல்லூர், லால்குடி தொகுதிகளும் திருச்சி வடக்கில் முசிறி, துறையூர் தொகுதிகளும் ஒதுக்கப்படுள்ளன.

மற்ற மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் சென்னையில் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கடலூரில் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், விருதுநகரில் தங்கம் தென்னரசு போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன. அதேநேரம் கீதா ஜீவன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு 2 தொகுதிகள் அடங்கி மா.செ பொறுப்பு ஒதுக்கப்படவுள்ளது.

ஆனால் இவர்களுக்கு 2, மற்றவர்களுக்கு 3 எனப் பேதம் காட்டப்படவில்லை. ஆனால், திருச்சியில் மட்டும்தான் முன்னாள் அமைச்சருக்கு 2 தொகுதிகளையும் மற்றவருக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன" என்றனர்

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் - கே.என் நேரு

நம்மிடம் பேசிய தலைமைக்கு நெருக்கமானவர்கள், "கே.என் நேரு முதன்மைச் செயலாளராக இருப்பதால் 6 ஆண்டுகளுக்கு முன்பே மாவட்ட அரசியலிலிருந்து அவர் விலகிவிட்டார். எனவே மா.செ ரேஸில் அவரில்லை.

அதேசமயம், 3 தொகுதிகள் கொண்டு திருச்சி மத்திய மாவட்டத்துக்குள்தான் கே.என் நேருவின் தொகுதியாக திருச்சி மேற்கு தொகுதி வருகிறது. எனவே அந்த மத்திய மாவட்டத்தை நேருவின் மகன் அருண் நேருவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

2024-ல் நேரடி அரசியலுக்கு வந்த அருண் நேருவுக்கு 3 தொகுதிகள் அடங்கிய மா.செ பொறுப்பும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு 2 தொகுதி மா.செ பொறுப்பும் வழங்கப்படவுள்ளது.

அருண் நேருவுக்காக கே.என் நேரு வாதாடிய நிலையில் தனது நண்பர் அன்பில் மகேஸுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி போராடவில்லை. மறுசீரமைப்புக்குப் பிறகும் திருச்சி தி.மு.க கே.என். நேரு கண்ட்ரோலில்தான் இருக்கிறது " என்றனர்.

தெலங்கானா காங்கிரஸ்: உட்கட்சிப் பூசல்; அமைச்சரவையிலிருந்து சுரேகா வெளியேற்றம்; என்ன நடக்கிறது?

தெலங்கானா காங்கிரஸ் மூத்த தலைவர் கொண்டா சுரேகா. இவர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில், வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், சுரேகா-வின் மகள் க... மேலும் பார்க்க

பஸ்ஸை முத்தமிட்டு, டயரை தொட்டு வணங்கி.. 18 ஆண்டுக்கால பணி, நிறைவு - கண்ணீர் பெருக நெகிழ்ந்த ஒட்டுநர்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை பகுதியைச் சேர்ந்தவர் பால் குரியன் (56). இவர் கேரளா அரசுப் போக்குவரத்துக் கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி-யில் இடுக்கி மற்றும் கட்டப்பனை பணிமனைகளில் ஓட்டுநராகத் தனது ச... மேலும் பார்க்க

``கொளத்தூரின் தேர்தல் முடிவுகள் வாக்கு பதிவு இயந்திரங்களினால் வந்ததே..!"- என்.ஆர்.இளங்கோ திட்டவட்டம்

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு குறித்து தி.மு.க சட்டத்துறைச் செயலா... மேலும் பார்க்க

"கட்டுமானச் செலவே ரூ.4 கோடி தான்; முதல்வரின் திறப்பு விழாவுக்கு ரூ.5 கோடி செலவு!" - நயினார் தாக்கு

திருச்சியில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"கடந்த ஜூன் 12ந-ம் தேதி திறக்கப்பட்டிருக்க வேண்டிய மேட்டூ... மேலும் பார்க்க

`இது முட்டாள்தனமானது' Vs `சமநிலையைப் பேண முடியும்' - TRB ராஜா - கீர்த்தனா கருத்து மோதல்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, ``எங்கள் பகுதியில் இயங்கி வரும் ஜே.கே. டயர் நிறுவனம் இரவோடு இரவா... மேலும் பார்க்க

`பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிகள்; தீண்டாமை... உளவியல் ஒடுக்குமுறை!' - மாணிக்கம் தாகூர்

புதுக்கோட்டை அருகே ஓடும் அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவிகள் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க