செய்திகள் :

"அதிமுகவும் திமுகவும் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட வாய்ப்புள்ளது" - அமைச்சர் நிர்மல்குமார்

post image

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனரின் பிறந்த நாளினை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சிதம்பரனாரின் முழு உருவ சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “கேஎன் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை விவகாரத்தில் எந்தப் பழிவாங்குதல் நடவடிக்கையும் கிடையாது. லஞ்ச ஒழிப்புத் துறையில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது.

புகாரின் அடிப்படையில் ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்கிறார்கள். அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும் யாரும் யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் இல்லை. உதயநிதி கைது என்பது அனைவருக்கும் தெரியும். பெண்களைப் பற்றி அவதூறாக பொது மேடையில் தொடர்பில்லாமல் பேசியதால் விசாரணைக்காகத்தான் அழைத்துச் செல்லப்பட்டார். இது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு என்ன நடந்திருக்கிறது எனத் தெரியவில்லை. அது தொடர்பாக அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும்'' என்றார்.

திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,
திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,

தவெக ஆட்சி நீடிக்காது என திமுக அதிமுக சொல்வது தொடர்பான கேள்விக்கு, “இதில் திமுகவும் அதிமுகவும் சேர்ந்து இருப்பது தெரிகிறது. 50 ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சியில் மாற்றம் இருக்காது. மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதிமுகவும் திமுகவும் இணைந்து ஒரே கூட்டணியில் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட வாய்ப்பு உள்ளது. இவர்கள் யாருடன் சேர்ந்தாலும் எந்தத் தேர்தலிலும் எங்க கிட்டயே வர முடியாது.

தூய்மைப் பணியாளர்கள் சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு துறை வாரியாக முடிவுகள் எடுக்கப்படும்போது அனைத்து மாவட்டங்களை சேர்த்துதான் முடிவு எடுக்கப்படும். ஒவ்வொரு முடிவுகளையும் சிறப்பாக எடுக்க வேண்டி இருக்கும். ஏழை எளிய மக்களுக்கான அரசு மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை அந்தந்த நேரத்தில் செய்வோம்'' என்றார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

முதலமைச்சரின் பதிலுறை நாளில் கேள்வி பதில் நேரமில்லை எனக் குறிப்பிட்ட தொடர்பான கேள்விக்கு, “முதலமைச்சர் அனைத்துக்கும் சேர்த்து பதில் சொல்ல வேண்டியது இருக்கும் கேள்வி பதில் நேரம் முடித்துவிட்டு வைத்துக் கொள்ளலாம். முதலமைச்சரின் பதிலுரை முடிந்த பிறகு அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டியதாக இருக்கும். அதற்கு பின்பு மானிய கோரிக்கை உள்ளது. அதற்குபின் கேள்வி நேரம் வைத்திருந்தால் இரவு 9 மணி ஆகிவிடும் சபை நடத்தியதாக வரலாறு இல்லை அதனால் கேள்வி நேரம் இல்லை'' என்றார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விக்கு, ''வெளிநாட்டு பயணம் எது குறித்து பயணம் என்பதை முதல்வர் அலுவலகத்தில் வெளியிடுவார்கள். ஆனால் அடுத்த வாரம் பயணம் உள்ளது. முதல்வர் திட்டங்கள் அலுவலகத்தில் இருந்து முதல்வரின் நிகழ்ச்சிகள் குறித்து அறிவிப்பு வரும் முதலமைச்சர் நிகழ்ச்சி குறித்து நிறைய ரூமர்ஸ் வருது மதுரையிலயே நிகழ்ச்சியில் உள்ளதாக எங்களுக்குத் தெரியாமலே சொல்கிறார்கள். முதல்வரின் நிகழ்ச்சி குறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து தகவல் அளிப்பார்கள்'' என்றார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

கோவில் விவகாரத்தில் பி.டிஆர் பழனி வேல் தியாகராஜன் எக்ஸ் தள பதிவு குறித்த கேள்விக்கு, “கோவில் விசயத்தில் நாங்கள் யாருமே தலையிட மாட்டோம். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆலோசனைகள்தான் ஏற்பாடுகள் குறித்து தான் கேட்போம் . கோவில் விசயத்தில் முந்தைய அரசுகள் என்ன தவறு செய்ததோ அதனை நாங்கள்  செய்ய மாட்டோம். கோவில்களில் உள்ள அறங்காவலர் குழுவாக திமுகவினரின் குடும்பத்தைச் சேர்ந்த நபர்களைதான் நியமித்தார்கள்.

அந்த மாதிரியான தவறுகள் நம்ம ஆட்சியில் இருக்காது. பெயரைப் போட வேண்டும் என யாராவது உயர்நீதிமன்றத்திற்குச் செல்வார்களா?

இப்போது உள்ள குழுவிலே ஒரு சிலருக்கு உடன்பாடில்லை. இதில் பெயரைப் போடுவதற்கு என்ன இருக்கிறது ? மன்னர்கள் கட்டியது நம்ம போய் பெயரைப் போடுவதால் என்ன இருக்கிறது. இது சாதாரண விஷயம். ஒன்னும் இல்லாத விஷயத்திற்கு அவர் பேசிக்கொண்டிருப்பார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன் குடும்பத்திற்குச் சொந்தமான கல்யாண மண்டபத்தில் இருந்து நிர்வாகிகள் வந்து என்னை பார்த்தார்கள். மூன்று வருடமாக எங்களை எதையுமே செய்ய விடவில்லை டிரஸ்டையும் முடக்கி வைத்திருக்கிறார்கள் எனக் கூறினார்கள். சின்ன சின்ன ஈகோவால்  அவருடைய சொந்த குடும்பத்தினருடைய அறக்கட்டளையையே செயல்படுத்த விடாமல் முடக்கி வைத்துள்ளார்.

சட்டபூர்வமாக என்ன வேண்டுமோ சொல்லுங்கள் செய்து தருகிறோம் என அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கெல்லாம் பெருசாக நினைக்க வேண்டாம்” என்றார்

"டாஸ்மாக் பிரச்னை 200 படிகள் கொண்டது; நான் 70 படிகள் ஏறிவிட்டேன்" - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

கோவை பேரூர் அருகே த.வெ.க மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து... மேலும் பார்க்க

Trump: "ஹார்முஸ் நீர்ச்சந்திக்குப் பதிலாக சிரியா" - ட்ரம்ப் சொல்லும் ‘புதிய வழி’ என்ன?

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.இந்தப் போரில் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலிற்கும் நெருக்கடி கொடுக்க ஈரான் தேர்ந்தெடுத்த வழி - ஹார்முஸ் நீர்ச்சந்தி.உலகின் பெரும்பான்மையான எண்ணெய் போக... மேலும் பார்க்க

கே.என். நேரு வீட்டில் சோதனை: "தவெகவின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சமாட்டோம்" - ஸ்டாலின் பதிவு

முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக எம்.எல்.ஏ நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.இதற்கு கண்டனம் எதிர்ப்பு தெரிவித்து முன்... மேலும் பார்க்க

’ரூ.2 லட்சத்தில் கமிஷனருக்கு செல்போன் வாங்குவதா?’ - கோவை மாநகராட்சி சர்ச்சை

கோவை மாநகராட்சி பயன்பாட்டிற்கு செல்போன் மற்றும் கேமரா வாங்கியதில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.இது குறித்து நம்மிடம் பேசிய சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த தகவல் அறிய... மேலும் பார்க்க

"யாராக இருந்தாலும் தப்ப முடியாது" - லஞ்சம் குறித்து அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை

விருதுநகர் வேம்பக்கோட்டையில் மாற்றுத்திறனாளி ஒருவர் பட்டாசுக் கடை வைக்க தடையில்லாச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கிறார்.அவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்துச் சமூக வலைத்... மேலும் பார்க்க

இலங்கை: விமான ஒப்பந்தத்தில் 8 லட்சம் டாலர் லஞ்சம்; மஹிந்த ராஜபக்சே மகன் கைதான பின்னணி என்ன?

இலங்கையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே. இவரது மகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சேவை நேற்று (செப்டம்பர் 4) இலங்கை நாட்டின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.என்ன காரண... மேலும் பார்க்க