செய்திகள் :

மும்பை: ரயில் இருக்கைகளை ஆக்கிரமித்து சீட்டாட்டம்; பயணிகள் கண்டனம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்கள் இருக்கைக்காகவும், வாசலில் நின்று பயணம் செய்வது தொடர்பாகவும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதுண்டு.

மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், சர்ச்கேட், தாதர் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் புறநகர் ரயில்களில் ஏறும் பயணிகள் சில நேரங்களில் இரண்டு மணி நேரம் வரை பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அப்படி பயணம் செய்யும் பயணிகளில் சிலர் ஒன்று சேர்ந்து பஜனைப் பாடுவது, சீட்டு விளையாடுவது என்று பொழுதைக் கழிப்பதுண்டு. பஜனைப் பாடுவதற்குச் சிறிய மேளம் மற்றும் இசைக்கருவியைக் கூட பயணிகள் வீட்டில் இருந்து எடுத்து வருவதுண்டு.

அது போன்று போன்று சில பயணிகள் ரயிலில் விளையாடுவதற்காக சீட்டுக்கட்டு எடுத்து வருவதுண்டு. கடுமையான கூட்ட நெரிசலுக்கு இடையே ரயில் புறப்படும் போதே அவர்கள் ஏறிவிடுவதால் இருக்கையில் அமர்ந்து கொண்டு சீட்டு விளையாடுவது வழக்கம்.

அது போன்று பயணிகள் சிலர் மும்பை ரயிலில் சீட் விளையாடும் வீடியோ வைரலாகி இருக்கிறது. 59023 எண் கொண்ட மும்பை சென்ட்ரல்-வல்சாட் பாஸ்ட் பாசஞ்சர் பயணிகள் ரயிலில் பல இருக்கைகளை ஆக்கிரமித்து பணம் கட்டி சிலர் சீட்டு விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

பணம் சம்பந்தப்பட்ட சீட்டாட்டத்தில் ஈடுபடும் பயணிகள் குழு பல இருக்கைகளை ஆக்கிரமித்துள்ளதை அந்த வீடியோ காட்டுகிறது. ரயிலில் ஏற்கனவே பயணிகள் நிரம்பியிருந்தனர். அப்படிப்பட்ட கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அவர்கள் அதிகமான இருக்கைகளை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளதால் மற்ற பயணிகளுக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. சில பயணிகள் கூட்டத்தில் நிற்க கூட முடியாத நிலையில் நின்றனர். எனவே இருக்கைகளை ஆக்கிரமித்து சீட்டு விளையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 தங்கப்பதக்கங்கள் வென்ற தேசிய மல்யுத்த வீராங்கனை; 3 குழந்தைகளுடன் 100 அடி பள்ளத்தில் குதிப்பு!

மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நல்துர்க் கோட்டையில் இருந்து 100 அடி பள்ளத்தாக்கில் குதித்து தேசிய அளவிலான பெண் மல்யுத்த வீராங்கனை தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செ... மேலும் பார்க்க

பன்றியின் சிறுநீரகத்தில் உயிர் வாழ்ந்த நபர்; 271 நாள்களுக்குப் பிறகு கிடைத்த மனித சிறுநீரகம்!

உலகில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களுக்கு சிறுநீரகம் கிடைப்பதில் தாமதம் அல்லது. கிடைக்காமல் போவது போன்ற காரணங்களால் உயிரிழக்க நேரிடுகிறது. இ... மேலும் பார்க்க

`யாரும் திருடிட கூடாது' கிரேன் மூலம் ஸ்கார்பியோ காரை வீட்டுமாடியில் வைத்துவிட்டு வெளிநாடு சென்ற நபர்

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சுகாராம் யாதவ் என்பவருக்கு மகேந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று சொந்தமாக இருக்கிறது. அந்த காரை அவர் தனது வீட்டிற்கு வெளியில் நிறுத்துவது வழக்கம். இதனிடையே அவர் ஒரு வாரம் வெள... மேலும் பார்க்க

Ajith: ``முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி" - வாழ்த்து சொல்லி நெகிழ்ந்த நடிகர் அஜித் குமார்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் இன்று, 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஒன்று மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம். இது தொடர்பாக முதல்வர் விஜய் தனது அறிவிப்பில், ``... மேலும் பார்க்க

`ரூ.58 கோடி வரி கட்டியும் மோசமான சாலைகள்' - ஸ்டார்ட்அப் நிறுவன தலைவர் கடும் அதிருப்தி!

மும்பையில் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தி வருபவர் டாக்டர் அனிருதா மால்பானி. இவர் சமீபத்தில் டெல்லி அருகில் உள்ள குருகிராம் சென்று இருந்தார். அங்கு மழை காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக சேறும், குப்பைகளு... மேலும் பார்க்க