செய்திகள் :

'அதிகாரிகள் செய்தது தவறு; வருந்துகிறோம்' - தவெக அமைச்சர்கள் சந்திப்பு குறித்து பெ.சண்முகம்

post image

கடந்த மாதம், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இரண்டு சம்பவங்கள் நடந்தன.

ஒன்று, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கம்யூனிஸ்டுகளின் பெயரைச் சேகரிக்கச் சொல்லியிருந்தார்.

இன்னொன்று, தலைமைச் செயலாளர் சாய்குமார் கம்யூனிஸ்ட் இயக்கங்களோடு இணைந்து மாணவர்கள் போராடக் கூடாது என்று கல்லூரிக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்வினையாற்றியிருந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

சாய்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவரது செயல்பாடு குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

இந்த நிலையில் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் தங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், தங்களுக்கு ஆதரவளித்த கட்சித் தலைவர்களையும் சந்தித்தனர்.

அப்போது வருகிற 9-ம் தேதி நடக்க உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தனர்.

அப்படி அவர்கள் சந்தித்த கட்சித் தலைவர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் அடக்கம்.

இந்தச் சந்திப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...

“மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் ஆகியோரின் நடவடிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு வராமல் அதிகாரிகள் செய்த தவறு என்றும், அதற்காக எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர்.”

"பாபநாச அணை திறக்க போராடிய விவசாயிகளை அராஜக கைது செய்த தவெக அரசு" - கனிமொழி கண்டனம்

தூத்துக்குடி விவசாயிகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி."பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காக... மேலும் பார்க்க

'வழக்குகள் வாபஸ்; உணவுப்படி 50 ரூபாய்...' - தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி!

பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்து நீண்ட நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்தப் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போரட்டம்: "உறுதியாக முதல்வர் சந்திப்பார்; பணி நிரந்தரம்.?" - ராஜ்மோகன்

கடந்த 16 நாட்களாக, சென்னை ரிப்பன் பில்டிங்கில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.இன்று காலை அவர்களைச் சந்தித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவா... மேலும் பார்க்க

'பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வந்தோம்!'- கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தவெக அமைச்சர்களின் திடீர் விசிட்!

தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு சென்று அக்கட்சியின் தலைவர்களோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். பெ.சண்முகம் - அ... மேலும் பார்க்க

பிரதமர் வேட்பாளராக விஜய்: ’என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்?’ – அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கவும், போதை பொருளை கட்டுப்படுத்தவும்... மேலும் பார்க்க

'தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் அமைக்கப்படுமா?' - மக்கள் கோரிக்கை!

தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவிலும் அமைச்சர்களின் அறையிலும் மனு கொடுக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடி வருகின்றனர். அவர்கள் ஏழை எளிய மக்கள் அதிகம் கூடும் தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் இரு... மேலும் பார்க்க