செய்திகள் :

5 தங்கப்பதக்கங்கள் வென்ற தேசிய மல்யுத்த வீராங்கனை; 3 குழந்தைகளுடன் 100 அடி பள்ளத்தில் குதிப்பு!

post image

மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நல்துர்க் கோட்டையில் இருந்து 100 அடி பள்ளத்தாக்கில் குதித்து தேசிய அளவிலான பெண் மல்யுத்த வீராங்கனை தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். அதில் அதிர்ஷ்டவசமாக ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பியது. அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கோட்டை மலையில் இருந்து குதித்த மல்யுத்த வீராங்கனையின் பெயர் அஸ்வினி மனோகர் பால் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் பள்ளத்தாக்கில் குதித்ததில் அஸ்வினியும், அவரது ஐந்தரை வயது மகன் அஜிங்க்யாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தற்கொலை செய்து கொண்ட மலை

அவரது இரண்டரை வயது இரட்டை மகள்களில் ஒருவரான கிராந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மற்றொரு மகள் வீரா படுகாயமடைந்து தற்போது தாராசிவ் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது.

5 தங்க பதக்கங்கள்

அஸ்வினி பால் மல்யுத்த வட்டாரங்களில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர் ஆவார். அவரை அனைவரும் "மகாராஷ்டிராவின் புலி" என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது விளையாட்டு வாழ்க்கையில், அவர் தேசிய அளவில் ஐந்து தங்கம் மற்றும் ஆறு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். அவரது தற்கொலை மகாராஷ்டிரா மற்றும் விளையாட்டு சமூகத்திடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அஸ்வினி தனது கணவர் மற்றும் மாமியாரால் தொடர்ந்து மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக அஸ்வினியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகார்கள் மற்றும் சம்பவத்திற்கான சூழ்நிலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஸ்வினி பால் தனது மூன்று குழந்தைகளுடன் நல்துர்க் கோட்டையைப் பார்ப்பதற்காக லத்தூர் மாவட்டம் நிலங்கா தாலுகாவில் உள்ள அம்புல்காவிலிருந்து சென்றிருந்தார். அவரது கணவர் பெயர் மனோகர் என்றும், அவர் ஆட்டோ ஓட்டுகிறார் என்றும் தெரிய வந்துள்ளது. கணவரின் ஆலோசனையின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஸ்வினி தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு கடந்த மூன்று மாதங்களாக அவர் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அஸ்வினி பால் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.

பன்றியின் சிறுநீரகத்தில் உயிர் வாழ்ந்த நபர்; 271 நாள்களுக்குப் பிறகு கிடைத்த மனித சிறுநீரகம்!

உலகில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களுக்கு சிறுநீரகம் கிடைப்பதில் தாமதம் அல்லது. கிடைக்காமல் போவது போன்ற காரணங்களால் உயிரிழக்க நேரிடுகிறது. இ... மேலும் பார்க்க

`யாரும் திருடிட கூடாது' கிரேன் மூலம் ஸ்கார்பியோ காரை வீட்டுமாடியில் வைத்துவிட்டு வெளிநாடு சென்ற நபர்

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சுகாராம் யாதவ் என்பவருக்கு மகேந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று சொந்தமாக இருக்கிறது. அந்த காரை அவர் தனது வீட்டிற்கு வெளியில் நிறுத்துவது வழக்கம். இதனிடையே அவர் ஒரு வாரம் வெள... மேலும் பார்க்க

Ajith: ``முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி" - வாழ்த்து சொல்லி நெகிழ்ந்த நடிகர் அஜித் குமார்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் இன்று, 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஒன்று மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம். இது தொடர்பாக முதல்வர் விஜய் தனது அறிவிப்பில், ``... மேலும் பார்க்க

`ரூ.58 கோடி வரி கட்டியும் மோசமான சாலைகள்' - ஸ்டார்ட்அப் நிறுவன தலைவர் கடும் அதிருப்தி!

மும்பையில் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தி வருபவர் டாக்டர் அனிருதா மால்பானி. இவர் சமீபத்தில் டெல்லி அருகில் உள்ள குருகிராம் சென்று இருந்தார். அங்கு மழை காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக சேறும், குப்பைகளு... மேலும் பார்க்க

ஈரோடு: கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்! | Photo Album

கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்ஈரோட்டில் கிருஷ்ணர் ராதை... மேலும் பார்க்க

"என் மனைவியை நான் முதன்முதலில் இங்குதான் சந்தித்தேன்"- ஐ.ஐ.டி நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை

ஐஐடி கரக்பூர் தனது 75-வது ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இந்தக் கல்வி நிறுவனத்தில் பயின்ற கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை தனது வாழ்த்து செய்தியை ஐஐடி கரக்பூருக்கு அனுப்பி... மேலும் பார்க்க