செய்திகள் :

IPO-வில் லாபம் உறுதியா? முதலீட்டாளர்களுக்கு Zerodha நிதின் காமத்தின் Warning!

post image

தற்போது IPO-க்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மக்களும் IPO-க்களை விரும்புகிறார்கள்.

ஆனால், IPO-க்கள் பற்றிய உண்மையை இரண்டு புகைப்படங்கள் மூலம் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார் ஜீரோதாவின் இணை நிறுவனர் நிதின் காமத்.

“ஒட்டுமொத்தப் பங்குச்சந்தையும் பெரிய மாற்றமின்றி ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது. ஆனால், IPOs, OFS, FPO போன்ற முதன்மைச் சந்தைகளோ படுவேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

ஜீரோதா நிதின் காமத்
ஜீரோதா நிதின் காமத்

இதுவரை, இவை மூலம் திரட்டப்பட்ட மூலதனத்தைப் பார்க்கும்போது, இந்த ஆண்டு கடந்த இரண்டு ஆண்டுகளை விட அதிகமாக இருக்கும் அல்லது அதைத் தாண்டிவிடும். அதுமட்டுமின்றி, இனி வரவிருக்கும் புதிய IPO-க்களின் பட்டியலும் மிக நீளமாக உள்ளது.

ஜீரோதாவில் கூட, புதிய IPO-க்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. IPO-வில் முதலீடு செய்வதற்காகவே பிரத்யேகமாகப் புதிய கணக்குகளைத் தொடங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

IPO மூலம் மிக எளிதாகப் பணம் சம்பாதித்துவிடலாம் என்று நீங்கள் நம்பினால், இந்த இரண்டாவது வரைபடம் உங்களுக்கான உண்மையான வாய்ப்புகளைப் புரியவைக்கும்.

கடந்த சில ஆண்டுகளில், பங்குகள் பட்டியலிடப்பட்ட நாளில் கிடைத்த லாபத்தை இது காட்டுகிறது. தோராயமாக 74 முதல் 80 சதவீதமான IPO-க்கள் அவற்றின் வெளியீட்டு விலையை விட உயர்வாகவே பட்டியலிடப்பட்டன.

ஆனால், அவற்றில் பெரும்பான்மையான பங்குகள் பெரிய அளவிலான லாபம் எதையும் வழங்கிவிடவில்லை.

சமீபத்திய காலத்தில், 35 சதவீதமான பங்குகள் வெறும் 0 முதல் 10 சதவீதம் வரையிலான சொற்ப லாபத்திலேயே பட்டியலிடப்பட்டன.

அதே வேளையில், சுமார் 26 சதவீதமான பங்குகள் வெளியீட்டு விலையை விடக் குறைவான விலையிலேயே சந்தைக்கு வந்தன.

சொல்லப்போனால், இந்த வரைபடம் காட்டாத ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. ஒரு IPO எந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமடைகிறதோ, அந்த அளவிற்குப் பங்குகள் உங்களுக்கு ஒதுக்கீடாவதற்கான வாய்ப்புகளும் வெகுவாகக் குறையும்.

இருந்தாலும், நம்பிக்கைதானே எல்லாம்!” என பதிவிட்டுள்ளார்.

"30 நாள்களுக்கு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் IPO-க்களை வாங்கக்கூடாது; ஏன்?" - சமீர் அரோரா யோசனை

இந்தியாவில் தொடர்ந்து IPO-கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மக்களும் IPO-க்களை வாங்க மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.IPO-க்கள் குறித்து CNBC-TV18 செய்தி நிறுவனத்திற்கு சமீர் அரோரா பேட்டி ஒன்றைக் கொடுத்து... மேலும் பார்க்க

Share Market: இனி இந்தியாவில் பண்டிகை சீசன்தான்; 'இந்த' 7 துறைகள் லாபம் கொடுக்கலாம்?

நாளை முதல் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இனி பிப்ரவரி மாதம் வரை, இந்தியாவில் தொடர்ந்து பண்டிகை சீசன்தான்.இதை முன்னிட்டு, தற்போது பங்குச்சந்தையில் எந்தெந்தத் துறைகளில் ஃபோக்கஸ் செய்யலாம் என்பதை விளக்க... மேலும் பார்க்க

பாடம் படிக்கலாம், பணம் பண்ணலாம்! - சென்னையில் பங்குச் சந்தை பயிற்சி!

பாடம் படிக்கலாம், பணம் பண்ணலாம்! - சென்னையில் பங்குச் சந்தை பயிற்சி! மேலும் பார்க்க

சர்க்கரை பங்குகள் நல்ல ஏற்றம்: ஆனால், இப்போ வாங்காதீங்க; இந்தப் பங்குகள் வாங்க கரெக்ட் டைம் எது?

இரண்டு நாள்களாக, ‘சர்க்கரை’ குறித்த பேச்சுகள் எல்லாப் பக்கமும் அடிபடுகிறது.ஈரான் போர், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் சர்க்கரை உற்பத்தி மற்றும் சப்ளையில் இந்த ஆண்டு கடும் அடி. இதனால், வருகிற அக்டோப... மேலும் பார்க்க

பணத்தை இழக்கும் முதலீட்டாளர்கள்... செபி செய்யவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது!

பங்குச் சந்தையில் புழங்கும் பலருக்கும் பல்வேறுவிதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலானோர் பங்குச் சந்தையில் லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சிலர் ‘அதில் நிறைய பணத்தை இழந்துவிட்டதாக’ எப்போ... மேலும் பார்க்க