செய்திகள் :

Volkswagen: `1 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்' - வோக்ஸ்வேகன் முடிவின் பின்னணி?

post image

ஜெர்மனியைச் சேர்ந்த சர்வதேச முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகன் (Volkswagen), சுமார் 1 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. ஜெர்மனி மீது அமெரிக்கா விதித்துள்ள அதிக வரிகள், மின்சார வாகனங்களுக்கான (EV) தேவை குறைவு மற்றும் முக்கியமாக சீன சந்தையில் எழுந்துள்ள கடும் போட்டி காரணமாக ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான வோக்ஸ்வேகன் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப ஊழியர்களின் எண்ணிக்கையை மறுசீரமைப்பது அவசியமாகிவிட்டதாக ஆடி (Audi), போர்ஷே (Porsche) உள்ளிட்ட 10 பிராண்டுகளை உள்ளடக்கிய இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Volkswagen
Volkswagen

இந்த நடவடிக்கை வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் உலகளாவிய ஊழியர் படையில் சுமார் 15 சதவீதத்தைப் பாதிக்கும். எனினும் இந்த பணி நீக்க திட்டம் என்பது இந்த தசாப்த ஆண்டு நிறைவுக்குள் படிப்படியாக செய்யப்படும் எனத் தெரிகிறது.

மேலும், ஜெர்மனியில் உள்ள ஹானோவர், எம்டன், ஸ்விகாவ் மற்றும் நெக்கர்சுல்ம் ஆகிய நான்கு முக்கிய ஆலைகளின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் உள்ள ஆலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்படுவது வோக்ஸ்வேகன் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். கடந்த 2009-ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) நிறுவனம் திவாலானதாக அறிவித்தபோது மேற்கொள்ளப்பட்ட 50,000 பணிநீக்கங்களை விட இது இருமடங்கு பெரியது என்பது குறிப்பிடதக்கது.

``எனக்கு ரூ.10,000 கோடி கடன் இருக்கிறது" - `Rich Dad Poor Dad' ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தகவல்

உலகளவில் பொருளாதார அறிஞர்கள் பலரும் நிதி நிர்வாகம் தொடர்பாக தொடக்க நிலையில் இருப்பவர்கள் அறிந்துகொள்வதற்குப் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களில் ஒன்று 'ரிச் டேட் புவர் டேட்' (Rich Dad Poor Dad). 1997-ஆம... மேலும் பார்க்க

ரூ.97 வரை சரிந்த இந்திய ரூபாய்; இப்போது ரூ.95-96-ல் நிலைப்பது ஏன்? 4 காரணங்கள் என்னென்ன?

ஈரான் போர் உச்சத்தில் இருந்தபோது, இந்திய ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.97 வரை எல்லாம் சரிந்தது. ஆனால், இப்போது ரூ.95-96-க்குள் வர்த்தகமாகி வருகிறது.இதை இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாகிவிட்டது என்று க... மேலும் பார்க்க

``4 முறைக்கு மேல் ATMஇல் பணம் எடுத்தால் GST வசூலிக்கப்படும்" - SBI வங்கி அறிவிப்பு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி கிளைகள் மூலம் தொடங்கப்பட்ட அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்குகளுக்கான பணம் எடுத்தல் (Cash Withdrawal) கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. இந்தப் புதிய கட்டண... மேலும் பார்க்க

UPI-யில் இனி பணம் அனுப்பினால் கட்டணமா? - புதிய சட்டம் என்ன சொல்கிறது?

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், 'Payment and Settlement Systems' சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் UPI... மேலும் பார்க்க