செய்திகள் :

`நான் பள்ளி படிப்பைகூட முடிக்காததை சிலர் கிண்டல் செய்யலாம்; ஆனால் அன்று.!" - நடிகை கரீனா கபூர்

post image

பாலிவுட் திரை நடத்திரத்தில் கூடுதல் கவனம் பெற்றவர் நடிகை கரீனா கபூர். கடந்த 2000-ம் ஆண்டு ஜே.பி. தத்தா இயக்கத்தில் வெளியான 'ரெஃப்யூஜி' (Refugee) திரைப்படம் மூலம் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாகத் தனது 19-வது வயதில் திரையுலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல்வேறு திரை நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார். தற்போது, மேக்னா குல்சார் இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் 'தாயரா' (Daayra) என்ற குற்றவியல் திரில்லர் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். பாடல்களே இல்லாத இந்தத் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

நடிகை கரீனா கபூர்
நடிகை கரீனா கபூர்

இந்த நிலையில், பிரபல பாட்காஸ்டர் ஹனுமான் தாஸ் என்பவருக்கு பேட்டியளித்திருந்தார். அதில், ``எனக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தபோதிலும், 11-ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். படிப்பை பாதியில் கைவிட்டது என் வாழ்க்கையில் என்றும் ஆறாத ஒரு வருத்தமாகவே இருந்து வருகிறது. நான் படிப்பை முடிக்காததை சிலர் கிண்டல் செய்யலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், நடிகையாக என்னை நிருபிக்க வேண்டும் என்பதே எனது அன்றைய லட்சியமாக இருந்தது.

நான் செய்த இந்தத் தவறை எனது மகன்களான தைமூர் மற்றும் ஜெஹ் ஆகியோர் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனது மகன்கள் இருவரும் முதலில் தங்களது படிப்பை முழுமையாக முடித்த பிறகே, அவர்களுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். எனது சொந்த அனுபவமே 'யுனிசெஃப்' (UNICEF) அமைப்புடன் இணைந்து பெண் குழந்தைகளின் கல்விக்காகப் பணியாற்ற தூண்டுகோலாக அமைந்தது." என்றார்.

பெண் கல்வி மற்றும் பாலின சமத்துவத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகை கரீனா கபூர், 2014-ம் ஆண்டு முதல் யுனிசெஃப் இந்தியா அமைப்பின் தூதராகச் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

நடிகர் சுஷாந்த் சிங் மேலாளர் திஷா தற்கொலை வழக்கு: CBIக்கு மாற்றம்; நீதிமன்றம் என்ன சொல்கிறது?

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்திடம் மேலாளராக இருந்த திஷா சாலியன் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி மும்பை மலாடு பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தின் 14வது மாடியிலிருந்து விழுந்து இறந்து போனார... மேலும் பார்க்க

Nimisha Sajayan: "தூக்கமின்மை, கடுமையான மனநிலை மாற்றங்கள்..." - உடல் எடை குறைப்பு பற்றி நிமிஷா சஜயன்

நடிகை நிமிஷா சஜயன், தான் நடித்திருக்கும் 'பாபிதா சிங் ரிப்போர்ட்டிங்' திரைப்படத்திற்காக மேற்கொண்ட கடினமான உடல் எடை குறைப்பு குறித்துப் பகிர்ந்திருக்கிறார். Babita Singh Reporting இந்தப் படத்தின் கதாபா... மேலும் பார்க்க

Kriti Sanon Bikini Ad Controversy: "அவரை யார் தடுத்தது?" - மீண்டும் கிருத்தி சனோனுக்கு கங்கனா பதில்!

ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் நடிகை கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை குறித்து நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு கிருத்தி சனோன் அளித்த பதிலும் இணையத்தில் வைரல் ஆனது. ... மேலும் பார்க்க

"பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறோம்?"- கிருத்தி சனோன்

ஒரு பிரபல நகை பிராண்டின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் நடிகை கிருத்தி சனோன் நடித்திருந்தார். அதில் அவர் அணிந்திருந்த ஆடை கவர்ச்சியாக இருப்பதாகவும் ரக்ஷா பந்தனுக்கு ஏற்ற உடை இது இல்லை என்றும் சமூக வலைதளங்... மேலும் பார்க்க

"'மிகவும் உயரமாக இருக்கிறாய்; வீட்டுக்கு போ' என்றார்கள்"- ஆரம்ப காலத்தை நினைவுகூர்ந்த அமிதாப் பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு 80 வயதைக் கடந்த போதிலும் இன்னும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு கோன் பனேகா குரோர்பதி என்ற டிவி நிகழ்ச்சியையும் நடத்திக்கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் அமித... மேலும் பார்க்க

Premalu: தயாராகும் 'ப்ரேமலு' இந்தி ரீமேக்; விமர்சிக்கும் நெட்டிசன்கள்! - மாற்றப்பட்ட விஷயங்கள் என்ன?

பாலிவுட் தற்போது மற்றுமொரு ஹிட் படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறது. இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென், மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பில் வெளியான 'ப்ரேமலு' திரைப்படம் சென்சேஷனல் ஹிட் ஆகியிருந்... மேலும் பார்க்க