செய்திகள் :

`யாரும் திருடிட கூடாது' கிரேன் மூலம் ஸ்கார்பியோ காரை வீட்டுமாடியில் வைத்துவிட்டு வெளிநாடு சென்ற நபர்

post image

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சுகாராம் யாதவ் என்பவருக்கு மகேந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று சொந்தமாக இருக்கிறது. அந்த காரை அவர் தனது வீட்டிற்கு வெளியில் நிறுத்துவது வழக்கம். இதனிடையே அவர் ஒரு வாரம் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். இதனால் தனது காரை எங்கு நிறுத்துவது என்று குழம்பிக்கொண்டிருந்தார்.

கட்டணம் கொடுத்து தனது காரை நிறுத்தலாமா அல்லது உறவினருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தலாமா என்பது குறித்து ஆலோசித்தார். ஆனால் அதில் அவருக்கு உடன்பாடு இல்லாமல் காரை நிறுத்த புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தார்.

கிரேன் ஒன்றை வாடகைக்கு கொண்டு வந்தார். அந்த கிரேன் மூலம் தனது காரை அப்படியே தூக்கினார். அதனை தனது வீட்டின் மாடியில் மெதுவாக கொண்டு போய் நிறுத்தினார். காரை கிரேன் மூலம் வீட்டு கூரையில் நிறுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது.

அது எவ்வளவு காலத்திற்கு வீட்டின் கூரையின் மீது இருக்கும் என்பது குறித்து கார் உரிமையாளர் எந்த வித தகவலையும் பகிரவில்லை. அதோடு கிரேன் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு முன்னதாக உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதிகள் ஏதேனும் பெறப்பட்டனவா போன்ற விவரங்களை வெளிப்படுத்தவில்லை.

இது தொடர்பான வீடியோ வெளியான உடன் நெட்டிசன்களில் சிலர் இதனை பாராட்டி இருந்தாலும், இவ்வளவு கனமான வாகனத்தை ஒரு கட்டிடத்தின் மீது வைப்பதன் நடைமுறைச் சாத்தியம் மற்றும் பாதுகாப்பு குறித்து வேறு சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஸ்கார்பியோ கார்களின் விலை ரூ.13.37 லட்சத்தில் தொடங்கி மாடலுக்கு தக்கபடி விலை மாறுபடுகிறது. வழக்கமான வாகன நிறுத்துமிடங்கள் ஏற்றதாக கிடைக்காத பட்சத்தில் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடும் என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

Ajith: ``முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி" - வாழ்த்து சொல்லி நெகிழ்ந்த நடிகர் அஜித் குமார்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் இன்று, 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஒன்று மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம். இது தொடர்பாக முதல்வர் விஜய் தனது அறிவிப்பில், ``... மேலும் பார்க்க

`ரூ.58 கோடி வரி கட்டியும் மோசமான சாலைகள்' - ஸ்டார்ட்அப் நிறுவன தலைவர் கடும் அதிருப்தி!

மும்பையில் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தி வருபவர் டாக்டர் அனிருதா மால்பானி. இவர் சமீபத்தில் டெல்லி அருகில் உள்ள குருகிராம் சென்று இருந்தார். அங்கு மழை காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக சேறும், குப்பைகளு... மேலும் பார்க்க

ஈரோடு: கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்! | Photo Album

கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகள்ஈரோட்டில் கிருஷ்ணர் ராதை... மேலும் பார்க்க

"என் மனைவியை நான் முதன்முதலில் இங்குதான் சந்தித்தேன்"- ஐ.ஐ.டி நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை

ஐஐடி கரக்பூர் தனது 75-வது ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இந்தக் கல்வி நிறுவனத்தில் பயின்ற கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை தனது வாழ்த்து செய்தியை ஐஐடி கரக்பூருக்கு அனுப்பி... மேலும் பார்க்க

`200 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை' - ராஜ மரியாதையுடன் ரதத்தில் அழைத்து வந்த குடும்பத்தினர்

மகாராஷ்டிராவில் பெண் குழந்தை பிறந்ததை ஒரு குடும்பம் விழாவாக எடுத்து கொண்டாடி இருக்கிறது. மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி என்ற நகரை சேர்ந்த தஹிபாலே குடும்பத்தினர், தங்கள் குடும்பத்தில் சு... மேலும் பார்க்க

அமெரிக்க போர்க் கப்பல்களை தாக்க அதிவேக ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்! - உதவும் ரஷ்யா?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தின. அதன் பிறகு இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்டது. அமெரிக்கா மட்டும் அடிக்கடி போர்நிறுத்தங்களை அறிவிப்ப... மேலும் பார்க்க